"என்.டி.ஏ. இதுவரை எந்தத் தேர்வையும் நடத்தவில்லை! - நீட் தேர்வை எப்படி நடத்தலாம்?" - மருத்துவர்கள் | How could this agency conduct NEET asks doctors

வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (05/05/2019)

கடைசி தொடர்பு:08:55 (05/05/2019)

"என்.டி.ஏ. இதுவரை எந்தத் தேர்வையும் நடத்தவில்லை! - நீட் தேர்வை எப்படி நடத்தலாம்?" - மருத்துவர்கள்

ருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட கடந்த 2 ஆண்டுகளில் மாணவரின் தந்தை மற்றும் மாணவர்கள் உட்பட இதுவரை 5 பேர் தேர்வுக் குளறுபடியால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் அனைத்தும் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. ஆனாலும், எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கம்போல் இந்த ஆண்டும் மத்திய அரசு இந்தத் தேர்வை நடத்துகிறது. நீட் தேர்வு நடைமுறையால் ஆண்டுக்கு ஆண்டு பலி எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போகிறதே தவிர, அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இன்னும் மத்திய அரசு தீர்க்கவில்லை என்று கொதிக்கிறார்கள், கல்வியாளர்கள். குறிப்பாக, தற்போது நடைபெறும் இந்த நீட் தேர்வுக்கும், ஏராளமான கட்டுப்பாடுகளைத் தேசிய தேர்வாணையமான என்.டி.ஏ விதித்துள்ளது. கடைசி நேரத்தில் தேர்வு மையங்களை மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்திருப்பது மாணவர்களையும், பெற்றோர்களையும் கடும் மனஉளைச்சலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலைதெரிவிக்கிறார்கள்.. 

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

 

இதுகுறித்து பேசிய மருத்துவர் எழிலன், ``கடந்த 2013-ம் ஆண்டில் நீதிபதி அல்டமாஸ் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பென்ச் 360 பக்க டாக்குமென்டுகளை வெளியிட்டது. அதில், மத்திய மைய நிறுவனங்கள் நீட் தேர்வை எவ்வாறு சிறப்பாக நடத்த முடியாது என்பதற்கான தகவல்களை மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருந்தனர்.

குறிப்பாக, பன்முகத்தன்மைகொண்ட கல்வி முறை ஒருநாட்டில், நீட் போன்ற தேர்வை நடத்துவதில் நிறைய நிர்வாகச் சிக்கல்களும், செயல்பாட்டுச் சிக்கல்களும் இருக்கும் என்பதை எடுத்துக்கூறி இந்தத் தேர்வு தவிர்க்கப்பட வேண்டும் என்று விவாதித்தனர். அந்தத் தீர்ப்பு, இன்னும் நிலுவையில்தான் உள்ளது. இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நிலுவையில் இருந்த அந்தத் தீர்ப்பை மாற்றி, நீட் தேர்வு தொடரலாம் என்று கூறிவிட்டு வழக்கு விசாரணை தொடரும் என்று உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்தத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 

மருத்துவ கனவு- நீட்

ஆரம்பத்தில் இந்தத் தேர்வை சி.பி.எஸ்.சி நடத்தியபோதே, இந்தத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. குறிப்பாகத் தேர்வு மையங்கள் எழிலன் .மருத்துவர் ஒதுக்கீடு, ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை எனப் பல்வேறு குளறுபடிகள், பல்வேறு தவறுகள் நடந்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றபோது, நீதிமன்றமோ... `தவறு நடந்திருப்பது உண்மைதான்; அடுத்தமுறை தவறுகள் சரிசெய்யப்படும்' என்று சொல்லியனுப்பியது. இப்படி ஒவ்வோர் ஆண்டும் தவறுகள் நடக்கும்போது மாணவர்கள்தாம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில்தான், `எங்களால் தேர்வை நடத்த முடியாது' என்று பின்வாங்கியது சி.பி.எஸ்.சி. அதன்பிறகுதான் மத்திய அரசு, அவசர அவசரமாகத் தேசிய தேர்வாணைய முகமைக்கு (national testing agency) இந்தத் தேர்வை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேசியத் தேர்வாணைய முகமை, மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் வருகிறது. இந்தத் தேர்வாணைய முகமை, இதுவரை எந்தத் தேர்வையாவது நடத்தியுள்ளதா? இதுபோன்ற பெரிய தேர்வுகளை நடத்திய அனுபவங்கள், அந்த ஆணையத்துக்குள்ளதா என்றால் எதுவுமே இல்லை. அப்படியான ஓர் அமைப்புதான் தற்போது இந்தத் தேர்வை நடத்துகிறது. அதனால், இந்தத் தேர்வின் முறை எப்படியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தேர்வுக்கு, இரண்டு நாள்களுக்கு முன்பாகத் தேர்வு மையத்தை மாற்றுவதாக அறிவித்துள்ளது. இத்தகைய செயல்பாடு எவ்வளவு பெரிய தவறு என்பது மத்திய அரசுக்குத் தெரியவில்லையா?ஏற்கெனவே, மாணவர்களுக்கு தேர்வு காரணமாகப் பெரிய அளவில் மன உளைச்சல் இருக்கும்போது, இதுபோன்ற திடீர் மாற்றம் எந்த மாதிரியான மனநிலையை உருவாக்கும்?

கடந்த ஆண்டு திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தைத் தேர்வெழுத கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்றபோது, அவருடைய தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது இந்த ஆட்சியாளர்களுக்குத் ரவீந்திரநாத் மருத்துவர் தெரியாதா? அப்படியிருந்தும், தேர்வு மையங்களை மாற்றுகிறார்கள்; கொடூரமான மனித உரிமை மீறல் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இது, மாணவர்களை எந்த மனநிலைக்குக் கொண்டு செல்லும் என்பது இந்த அரசாங்கத்துக்குத் தெரியாதா? மத்திய அரசு கையாள்வதற்கு எனப் பல்துறைகள் இருக்கும்போது மருத்துவத் துறையில் அதன் தலையீடு ஏன் இருக்க வேண்டும், எதற்காக இந்தத் தேர்வை நடத்த வேண்டும்? இன்னும் தெளிவாகச் சொன்னால் பொதுச் சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருக்கும்போது, கல்வி என்ற ஒரு பிரிவைவைத்து மாணவர்களை, மனஉளைச்சலுக்குத் தள்ளுவது எந்த வகையில் நியாயம்? உலகத்திலேயே மோசமான தேர்வு முறை இதைத்தவிர, வேறெதுவும் இருக்க முடியாது. மத்திய அரசு இந்தத் தேர்வை ரத்துசெய்யவில்லை என்றால், நாம்தான் அதைப் புறக்கணிக்க வேண்டும்" என்றார், மிகத் தெளிவாக. 

இதுகுறித்துப் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் ``கடைசிநேரத்தில் தேர்வு மையங்களை மாற்றுவது மிகவும் மோசமான செயல்பாடு. அதோடு, மிகவும் கொடூரமான கட்டுப்பாடுகளை விதித்து மாணவர்களை மனஉளைச்சலுக்குத் தள்ளியுள்ள என்.டி.ஏ எனப்படும் தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடு மிகுந்த கண்டனத்துக்குரியது. கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தத் தேர்வுகளை நடத்தினால் ஏற்க முடியும். இல்லையென்றால், இந்தத் தேர்வைத் தடுக்க எதிர்த்துப் போராடுவதை தவிர, வேறு வழியில்லை" என்றார்.  

நீட் தேர்வுக்கு என்றுதான் விடை கிடைக்குமோ?


டிரெண்டிங் @ விகடன்