வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (08/01/2014)

கடைசி தொடர்பு:07:34 (08/01/2014)

எமிலி பால்ச் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு

ஜனவரி 8: எமிலி பால்ச் எனும் மறக்கப்பட்ட அமைதிக்காக குரல் கொடுத்த பெண்மணி பிறந்த தினம் இன்று ;அடிப்படையில் பொருளாதார பேராசிரியை ஆன இவர் . 1915 ஆம் வருடம் நடந்த உலக பெண்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு போய் வந்திருந்தார் ;அமேரிக்கா உலகப்போரில் குதிக்கும் என அஞ்சப்பட்ட தருணம் அது . இவர் நிரந்தர அமைதிக்கான சர்வதேச பெண்கள் அமைப்பை உருவாக்கினார் ;அமேரிக்கா போரில் பங்கு பெறக்கூடாது என வாதிட்டார் .

தான் வேலை பார்த்த இடத்தை விட்டு நெடுநாள் விடுமுறையில் வெளியேறி போர்களத்தில் அடிபட்ட வீரர்களுக்கு உதவிகள் செய்தார் .அமெரிக்கா திரும்பிய பொழுது போருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்ததால் அவர் வேலை செய்த கல்லூரி அவரை வேலைக்கு சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டது . இவர் உருவாக்கிய அமைப்பை மீண்டும் கவனிக்க போனார் ; அது நிதியில்லாமல் இருந்த பொழுது சம்பளமே இல்லாமல் அமைதிக்காக பாடுபட்டார் .

1930 இல் அமெரிக்காவின் படைகள் ஹைதியில் நிலைகொண்டு இருந்தன ;இதை வன்மையாக கண்டித்தார் .ஜனாதிபதி ஹூவருக்கு கடிதம் எழுதினார் ;போராடினார் -இவர் முயற்சிகளால் அங்கிருந்து அப்படைகள் வெளியேறின .இவரை வெளியேற்றிய கல்லூரி இவரை பேச அழைத்தது ;இறுதியில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் .இரண்டாம் உலகப்போர் அவரை மேலும் துன்பப்படுத்தியது ; மக்களுக்கு உதவப்போனார் . இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் சேவைக்காக தன் வாழ்வை அர்பணித்த அவரின் வரலாறு காலங்களை கடந்து வாழும்

பூ.கொ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்