வெளியிடப்பட்ட நேரம்: 08:24 (19/05/2014)

கடைசி தொடர்பு:09:00 (19/05/2015)

மே 19: வியட்நாம் தலைவர் ஹோ சி மின் பிறந்த தின சிறப்பு பகிர்வு

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் செலுத்தி பறிக்க முயன்றது அமெரிக்கா.  அப்பொழுது மக்களை வழிநடத்தி கொரில்லா போர் முறையால் நாட்டை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்ற நிஜத்தலைவன் ஹோ சி மின்
 
வியட்நாம் குட்டி தேசம் ; நெடுங்காலம் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தேசம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்துக்கு உள்ளானது . உலகப்போர் சமயத்தில் நாஜிக்களின் பொம்மை அரசாங்கம் நாட்டை ஆண்டது ;பின் அங்கிருந்து ஆட்சி ஜப்பானுக்கு பாஸ் ஆனது .பிரான்ஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க படைகளை அனுப்பியது . அங்கிள் ஹோ காட்டிய வழிகாட்டுதலில் தீர்க்கமாக மக்கள் போராடினார்கள் . கூடவே சோவியத் ரஷ்யாவின் உதவியும் சேர்ந்து கொண்டது . ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நாடு வடக்கு வியட்நாம்,தெற்கு வியட்நாம் என பிரித்து கொல்லப்பட்டது
 
அங்கிள் ஹோ என அழைக்கப்பட்ட ஹோ சி மின் பேசினாலே மக்கள் கண்ணீர் விட்டார்கள் ; அவரின் சிந்தனை மக்களை ஒன்றிணைந்த வியட்நாமை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை வார்த்து எடுத்தது . அமெரிக்கா யார் இவர் என்று பார்த்தது ; கம்யூனிஸ்ட் என்று தெரிந்தது .படைகளை அனுப்பிக்கொண்டே இருந்தது .எளிய மக்களின் வீடுகளில் போய் ஹோ சி மின் ஆதரவு திரட்டினார் ; கொரில்லா போர் முறையை பின்பற்றினார்கள் . 
 
வருகிற எல்லா அமெரிக்க அதிபரும் போரை நிறுத்துவதாக அறிவித்து விட்டு தொடர்ந்து போர் செய்துகொண்டே இருந்தார்கள் . இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட குண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன . ஹோ சி மின் எங்கே போனார் என்றே தெரியவில்லை ,அவ்வப்பொழுது தோன்றுவார் ;தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார் .
 
புத்த பிக்குகள் அமைதியாக பெட்ரோலை ஊற்றிக்கொள்வார்கள் ;ஒற்றை தீக்குச்சி உரசல் . மவுனமாக் எந்த சப்தமும் இல்லாமல் இறந்து போவார்கள் . உலகை இந்த காட்சி உலுக்கியது என்றால் அதன் மனசாட்சியை கலங்க வைத்தது  நேப்பாம் வெடிகுண்டு வீசப்பட்டு எல்லாரையும் இழந்து நிர்வாணமாக கண்ணீரோடு ஓடிய சிறுமியின் கதறல் . வெட்ட வெட்ட முளைத்துக்கொண்டே இருந்தார்கள் கொரில்லாக்கள் . அமெரிக்க மக்கள் பேக்கப்  என்று தலையில் அடுத்து சொல்லிவிட்டார்கள்
 
ஹோ சி மின் அதற்கு முன்னமே மறைந்து இருந்தார் ;இருபத்தி ஒரு ஆண்டு போராட்டத்துக்கு பின் நாடு ஒன்று சேர்ந்த பொழுது தான் தங்களின் தலைவன் உயிரோடு இல்லை என்பதையே உலகுக்கு  சொன்னார்கள் வியட்நாமியர்கள் . அவரின் பெயரையே தலைநகருக்கு சூட்டினார்கள்

- பூ.கொ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்