வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (09/06/2014)

கடைசி தொடர்பு:12:53 (09/06/2014)

ஜூன்.9; சார்ல்ஸ் டிக்கன்ஸ் எனும் இலக்கிய மேதை- நினைவு தின சிறப்பு பகிர்வு!

ளம் வயதில் அப்பாவும் ஒட்டுமொத்த குடும்பமும் சிறைக்கு போனது. குழந்தைகளை கடன் அடைக்க கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். குடும்பத்தின் வாண்டுகள் எல்லாருமே குழந்தை தொழிலாளராக மாறினார்கள். ஏழு வருடங்களுக்கு மேல் எக்கச்சக்க துயரங்களுக்கும்,அடி உதைகளுக்கும் உள்ளாகி காயமுற்றார் அவர். ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் பிஞ்சு விரல்கள் சிவக்க உழைத்த பின் தான் கண்ட மனிதர்கள்,சந்தித்த சம்பவங்கள் எல்லாவற்றையும் சின்ன டயரியில் குறிப்பது அவரின் வழக்கமாக இருந்தது. மிச்ச நேரத்தில் எப்படியாவது புத்தகங்களை கடன்வாங்கி அரைகுறை வெளிச்சத்தில் வாசித்து மட்டுமே அவருக்கான ஒளியாக இருந்தது.

அப்பா விடுதலை ஆனதும் வெலிங்கடன் பகுதியில் வசிக்க நேரிட்டது. அங்கே சிறைக்கு போய் வந்த சிறுவன் என்று இவரை பலரும் ஒதுக்கி வைக்க எளியவர்கள் அவரின் நண்பர்கள் ஆனார்கள். கிளார்க்குகள் அவருக்கு சுருக்கெழுத்து முறையை சொல்லித்தந்தார்கள். வேலை செய்துகொண்டிருந்த எளிய பெண்கள் அன்பை பொழிந்தார்கள்.

வெகு சீக்கிரம் அவரின் எழுத்துலக பிரவேசம் நிகழ்ந்தது. தன்னுடைய அனுபவங்களை எழுத்தாக்கினார். இவர் தன் எழுத்தின் வரும்படியை குழந்தை தொழிலாளர்களுக்கு செலவு செய்தார். எழுத்திலும் அவர்களின் இன்னல்களை வடித்தார் .

வாசகனின் விருப்பங்களை அன்றைக்கு எழுத்தாளர்கள் சட்டை செய்வதில்லை என்பதை உணர்ந்த இவர் தொடர் கதை பாணியை பிரபலப்படுத்தி ஒவ்வொரு அத்தியாயத்திற்கு பிறகும் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையை மாற்றி நெகிழவைத்த நாயகன் அவர்.

ஏகத்துக்கும் சம்பாதித்த இவர் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் நலிவுற்ற பெண்களுக்கும் ஏகத்துக்கும் உதவினார் ,தொடர்வண்டி விபத்தில் இவருக்கு பின் இருந்த பலபேர் காயமுற அவர்களை காப்பாற்றி விட்டு தன் பிரபலமான நாவலை ஆரமர விபத்துப்பகுதியில் இருந்து தேடி எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

கண்ணீரில் அவர் வாழ்க்கை தோய்ந்தாலும் அவரின் எழுத்தின் தரம் தான் அவரை காலங்களைக்கடந்து நிற்க வைக்கிறது !வாழ்ந்த வாழ்க்கையை எழுத்தில் வடிக்க வரம் வேண்டும் அல்லவா ?அவரின் நினைவு தினம் இன்று! 

பூ.கொ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்