வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (25/08/2014)

கடைசி தொடர்பு:15:35 (25/08/2014)

இந்தியாவில் வைரலாகும் ''ரைஸ் பக்கெட் சேலஞ்ச்''

சில நாட்களாக இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற வீடியோ வைரலாக பரவி வந்தது. ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட சேலஞ்ச் சுய விளம்பரமாகவும், வைரல் பொழுதுபோக்காகவும் மாறியது. உலக பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலம் வரை அனைவரது ஐஸ் பக்கெட் வீடியோக்களும் யூடியூபில் வழிந்தன. இந்நிலையில் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலாக தொடங்கியுள்ளது.

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் என்ன?

இந்தியாவில் பல ஏழை மக்கள் உணவுக்காக தடுமாறுவதால் அதனை தடுக்கும் நோக்கத்துடன் அருகில் இருக்கும் உணவு தேவைப்படும் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் உங்களது நண்பர்களை டேக் செய்ய வேண்டும். இதனை # குறியீட்டுடன் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ட்ரெண்ட் செய்ய வேண்டும்.

இதனை ஹைத்ராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா என்பவர் இதற்காக சமூக வலைதளங்களில் தனி பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல் இந்தியாவில் வைரலாக தொடங்கியுள்ளது.தேசிய மக்களின் தேசிய தேவை என்ற டேக் வார்த்தையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலம் ஒருவரது தேவை நிறைவேற்றப்படுகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் தண்ணீர் தேவையில்லாமல் கொட்டப்படுவது போன்ற செயல்கள் இதில் இல்லை என சமூக ஆர்வளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவரது உணவு தேவையை பூர்த்தி செய்வது சரிதான் ஆனால் இதனையும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் விளம்பரமாக்கி விடாதீர்கள் என்ற கோரிக்கையும் இவர்கள் மீது விழத்தான் செய்கிறது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் இதுவரை எந்த பிரபலமும் இதனை செய்ததாக பதிவு செய்யவில்லை. சாதாரண மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் பதிய துவங்கியுள்ளனர். விரைவில் பிரபலங்கள் களமிறங்கினால் இந்தியாவில் பெரும்பாலான மக்களின் உணவு பிரச்னை ஓரளவிற்கு தீரும் என்கிறார்கள் ரைஸ் பக்கெட் சேலஞ்சர்கள்.

ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்