வெளியிடப்பட்ட நேரம்: 23:06 (09/09/2014)

கடைசி தொடர்பு:12:43 (10/09/2014)

நியூயார்க் நகரமும் மூன்றரை நூற்றாண்டும்!

லகின் மிகப்பெரிய வல்லமை படைத்த நாடுகளில் ஒன்று அமெரிக்கா, அதில் மிகவும் பெரிய நகரம், மக்கள் தொகையில் உலகின் 3வது அதிக மக்கள் தொகை கொண்ட, அதிக நெரிசல் மிகுந்த நகரங்களில் நியூயார்க நகரமும் ஒன்று!

இந்த நகரம் உருவாகி இன்றோடு 350 வருடம் ஆகியுள்ளது. 16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்களில் அல்கோன்ஃகியன் மற்றும் இரோஃகியன் எனும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்த பகுதியாக இருந்த ஸ்டேட் ஆஃப் நியூயார்க் பகுதி பின்னர் டச் ஆட்சியின் கீழ் வந்தது அதன் பின்னர் 1664ம் ஆண்டு ஸ்டேட் ஆஃப் நியூயார்க் உருவாகியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நியூயார்க் நகரம் உருவானது.

இரண்டாம் ஆங்கிலோ- டச் போரின் போது இங்கிலாந்து வசம் சென்ற நியூயார்க் மறுபடியும் மூன்றாம் போரின் போது டச் வசம் திரும்பியது. பின்னர் அமெரிக்க புரட்சி, அதனை தொடர்ந்து சுதந்திர அறிவிப்பு என நியூயார்க் நகரம் பல மாறுதல்களை சந்தித்து 1776ம் ஆண்டு தனி நகரமாக அறிவிக்கப்பட்டது. 1777 ஜூன் 30ம் தேதி ஜார்ஜ் கிளின்டன் நியூயார்க் நகருக்கான முதல் கவர்னரை அறிவித்தார்.பின்னர் நடந்த அமெரிக்க புரட்சி போர்களின் போது நியூயார்க் நகரம்தான் ராணுவ மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்கு ஏற்ற தளமாக அமைந்தது.

அதன் பின் தொழில்நுட்ப ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல மாற்றங்களை அடைந்து வந்துள்ளது நியூயார்க். மொத்தம் ஒரு லட்சத்து நாற்பத்தோராயிரம் கிமீ பரப்பளவுள்ள நகரம்,சுமார் 2 கோடி மக்கள் தொகை உள்ள நகரமாகவும் உருவாகியுள்ளது.இப்படி பல விதமான சாதனைகளை செய்திருந்தாலும் இதன் சோதனை காலம் என்னவோ செப்டம்பர் 11,2001 நடைபெற்ற 9/11 தாக்குதல் தான்!

அல் கொய்தா இயக்கத்தால் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் விமான தாக்குதலால் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த ஒரு தாக்குதல் உலக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் அமெரிக்க வசம் சென்றது. ஆப்கான் -  அமெரிக்க போர், ஒசாமா பின்லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டது என பல உலக அரசியல் சம்பவங்கள் நியூயார்க் நகரின் விளைவுகள்தான்!

தாக்குதலுக்கு பின் பதற்றமான நகரமாக இருந்த நியூயார்க் சிறிது நாட்களிலேயே தன்னை சரிப்படுத்தி கொண்டது. சுதந்திர தேவி சிலை, உலகின் அழகிய நயாகரா அருவி என பல அழகிய இடங்களை கண்டுகளிக்கும் இடமாகத்தான் நியூயார்க் நகரம் உள்ளது. உலக பொருளாதாரத்தை பெருமளவில் மாற்றியமைக்கும் அமெரிக்க பங்குச்சந்தை கூட நைமெக்ஸ் என நியூயார்க் பங்குச்சந்தையாகத்தான் உள்ளது.

வரலாற்று பதிவில் சென்னை நகருக்கு பின் உருவான நியூயார்க் நகரம் இன்று வேகமாகவும், அபரிதமாக வளர்ந்துள்ளது அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தினால்தான் என்றாலும்.இன்னமும் நியூயார்க் நகரம் மீது சில குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்கின்றன. நியூயார்க் நகரில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதும்,உணவுக்கான கட்டணம் வேறெங்கும் இல்லாத அள்வுக்கு அதிகமாக இருப்பது, பனிப்பொழிவின்போது போதிய மீட்பு வசதி இல்லாதது என வரிசைப்படுத்தப்பட்டாலும், உலகின் சொகுசான வாழ்க்கை நடத்த ஏதுவான இடங்களில் நியூயார்க்கும் ஒன்று. அப்படிப்பட்ட நியூயார்க் நகருக்கு இன்று 350 வது பிறந்தநாள்.

ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்