கேன்சர்... கவலை வேண்டாம்... கவனம் தேவை!

கேன்சருக்கு மருந்து கண்டுப்பிடிப்பத்தைவிட முக்கியம், கேன்சரைப் பற்றி அனைத்துத் தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு கொண்டுவருவதே. நம் நாட்டில் கேன்சரால் இறப்பவர்களைவிடக் கேன்சர் நோயின் மீது உள்ள தவறான புரித்தலால் இறப்பவர்கள் அதிகம். கேன்சர் நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்கபடவில்லை என்பது உண்மைதான்.

ஆரம்பத்திலேயே அதனைக் கண்டறிந்தால் தாக்கத்தைக் குறைத்து அதிலிருந்து விடுபடலாம். ஆனால், பலர் கேன்சருக்கு மருந்து கண்டுப்பிடிக்கவில்லை என்று சிகிச்சை எடுக்காமலும், தவறான மருந்துகளை உட்கொண்டும், கேன்சர் என்று புரிந்துக்கொள்ளாமலும் தான் இறக்கிறார்கள்.

பல ஆய்வுகள், 'மற்ற புற்று நோய்களால் தாக்கபட்டவர்களை விட மார்பகப் புற்று நோயால் தாக்கப்பட்டவர்கள் மிகவும் தாமதமாக மருத்துவமனையை நாடுக்கிறார்கள்' என்கிறது. இதை மருத்துவ உலகில் 'சைலன்ட' நோய் என்பார்கள். பெண்களுக்கு வரும் இந்த மார்பகப் புற்று நோயை, ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், அதன் பாதிப்புகளைப் பெருமளவு குறைத்துவிடலாம். சரியான சிகிச்சைச் செய்தால் முற்றிலுமாககூடக் குணமடைய வாய்ப்புகள் இருக்கிறது.

சரி அதை எப்படி ஆரம்பக் காலத்திலேயே கண்டறிவது? அமெக்காவின் கேன்சர் சொசைட்டி, ''25வயதுக்கு மேற்பட்ட எல்லாப் பெண்களும் மாதத்துக்கு ஒரு முறை (Breast self examination) பிரெஸ்ட் செல்ப் எக்ஸாமினேஷன் எனப்படும் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும் என்கிறது. இதன் மூலம், மார்பகத்தில் எதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.

மார்ப்பகத்தில் ஏதேனும் கட்டி வந்தாலோ, பாலைத் தவிர வேறு எதாவது சுரந்தாலோ, மார்ப்பகத்தில் உறுத்தல் இருந்தாலோ, காம்புகளில் வலி ஏற்பட்டலோ, நிறம் மாறி இருந்தாலோ உடனே மருத்துவர்களை அனுகுங்கள். மார்ப்பகத்தில் வரும் பெரும்பாலான கட்டிகள் மார்பக புற்று நோயாக இருக்கும்" என்கிறார்கள் மருத்துவர்கள்.

கிளினிக்கல் எக்ஸாமினேஷன், அதாவது தேர்ந்த மருத்துவரை கொண்டு மார்பகத்தின் தன்மையை மூன்று வருடத்துக்கு ஒரு முறைக் கண்டறிய வேண்டும். மாமோகிராபி எனப்படும் இந்தப் பரிசோதனையானது, எக்ஸ்ரே மூலம் நடத்தபடும். மார்ப்பகத்தில் தேவையற்ற திசுக்கள் வளர்ந்தால், அதனை உடனே கண்டறிந்துவிடலாம்.

40லிருந்து 50 வயது வரை இருக்கும் பெண்கள் அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒருமுறை, மார்பக புற்று நோய்கான அறிகுறித் தென்படாவிட்டாலும் பரிசோதனைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்துக்கு ஒரு முறை மார்பக புற்று நோய்க்கான அறிகுறித் தென்படாவிட்டாலும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

- கு.அஸ்வின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!