தபால் தலையில் மாணவர்கள்: அஞ்சல் துறையின் அசத்தல் திட்டம்!

திருச்சி: திருச்சியில்  “எனது அஞ்சல் தலை ” திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் புகைப்படம் இடம்பெற்ற சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது இந்த நிகழ்வு.

தபால் துறையின் "எனது அஞ்சல்தலை" (MY STAMP) திட்டத்தின் துவக்க விழா, திருச்சி தலைமை அஞ்சலக த்தில் நடைபெற்றது. விழாவில், முதல் அஞ்சல் தலையை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெங்க டேஷ்வரலு வெளியிட, அதனை திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக பள்ளி மாணவர்களின் புகைப்படத்தை "எனது குழந்தையுடைய அஞ்சல் தலை" என்ற தலைப்பில் வெளியிட்டனர்.

விழாவில் பேசிய திருச்சி மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், "இது அற்புதமான விஷயம், நம் நாட்டின் வருங்கால மன்னர்களின் புகைப்படத்தை தபால் தலையாக அச்சிடுவது 'எனது அஞ்சல்தலை' திட்டத்தின் சிறப்பு அம்சம்" என அத்திட்டத்தினை பற்றி விரிவாக பேசினார். 

திருச்சி மண்டல அஞ்சல் சேவைப் பிரிவு இயக்குனர் நடராஜன் கூறுகையில், "மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நமது நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத திட்டமே இது" என்றார். அடுத்து பேசிய ஆணையர் சிவக்குமார், "சாதாரண மக்களுக்கும் தபால் துறைக்கும் உள்ள உறவை பலப்படுத்த இது பாலமாக அமையும்" எனக் கூறினார்.

இறுதியாக நன்றியுரை ஆற்றிய சீனியர் போஸ்ட் மாஸ்டர் சந்தேஷ் மகாதேவ், "இது போற்ற வேண்டிய மதிப் புள்ள சொத்து. கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது "என்றார்.

விழாவில் திருச்சியின் முக்கிய பள்ளிகளிலிருந்து சுமார் 150 மாணவ, மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல்தலையை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண் டனர். பெருந்தலைவர்களின் வரிசையில், தங்களது புகைப்படங்களையும் அஞ்சல்தலையில் பார்த்த மாண்வர்களின் முகத்தில் பெருமிதமும் மகிழ்ச்சியும் ஒருசேர மிளிர்ந்தது.

மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் ஆனந்தத்தை அளித்தது இத் திட்டம். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல்தலையை அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுக்கப் போவதாக தெரிவித்தனர்.

அஞ்சல்தலையில் தங்கள் படம் அச்சிட விரும்புவோர், அருகில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ரூ.300 பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதனை செலுத்தினால், 12 அஞ்சல்தலைகள் அச்சிட்டு தரப்படும். ஒரு அஞ்சல்தலையின் மதிப்பு ரூ.5 ஆகும். அதில் அஞ்சல்தலையின் மதிப்பு, நாட்டின் பெயர் அச் சிடப்பட்டிருக்கும்.

இத்திட்டம் புதுடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

அஞ்சல் தலைகளைச் சேமிப்பது சுவாரஸ்யமான கலை. நீங்கள் அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கம் கொண் டவரா...? இனி உங்கள் சேகரிப்பில் உங்கள் முகம் கொண்ட அஞ்சல்தலையும் இடம்பெறப்போகிறது.

அதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழலாம். 

-இரா.த.சசிபிரியா
(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: தே.தீட்ஷித்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!