கல்லூரி அழகிப்போட்டிக்கு தடை: என்ன சொல்கிறார்கள் மாணவிகள்?

ல்லுாரி மாணவர்களிடையே பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துவ தாக கூறிக்கொண்டு, தமிழகத்தில் பல கல்லுாரி நிகழ்வுகளில்  சமீப காலங் களாக அழகிப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. அவற்றுக்கு குட்டு வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இது, பல்வேறு தரப்பினரிடையே ஆதரவு எதிர்ப்பு கருத்துக்களை ஏற்படுத் தியுள்ளது.

'கலாசார நிகழ்ச்சி என்பது மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப் படுத்தும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். பலர் முன் ஒய்யாரமாக நடந்து காட்டுவதால், என்ஜினீயரிங் படிக்கும் மாணவிகளுக்கு என்ன பயன் ஏற் படப் போகிறது?' என்று சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியிருந்தது.

இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது ஏன்...?


சென்னையைச் சேர்ந்த லட்சுமி ரமேஷ் என்பவர், கடந்த ஆண்டு  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட அழகிப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். ஆனால் அறிவித்தபடி  பரிசுத்தொகை யை அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு தரவில்லை எனக் கூறப்படுகிறது. தனது மகளுக்கு பரிசுத் தொகை கொடுக்கப்படாததை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதனை உடனே வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று லட்சுமி ரமேஷின் தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தார்.

இதனை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், இது பொறியியல் மாணவர்களுக்கு எந்த வகையில் பய னளிக்கும் என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமில்லாமல், இதுபோன்ற போட்டிகளைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறி்வுறுத்தினார். இது கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மாணவியர் சிலரிடம் கருத்து கேட்டோம்...

தர்ஷிகா என்ற மாணவி, “இதுபோன்ற போட்டிகளை கண்டிப்பாகத் தடை செய்யக்கூடாது. இசை, நடனம் போல இதுவும் ஒரு கலைதான். மாணவி கள் இதில் திறமையை வெளிப்படுத்துவதில் என்ன  தவறு இருக்கப் போகி றது?. இது படிப்புக்கு எந்த வகையிலும் உதவாவிட்டாலும் தங்களது திறமையை வெளிப்படுத்த பயன்படுகிறது.

எல்லாம் பார்ப்பவர்கள் கண்களில்தான் இருக்கிறது. இதுபோன்ற போட்டி கள் பள்ளி, கல்லூரி வளாகங்களில் கண் ணியமாகத்தான் நடத்தப்படுகி றது எனவே நீதிமன்றத்தின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது“ என்றார்.

’நீதிமன்றத்தின் இந்த முடிவை அரசு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. இது அழகிப்போட்டி என்றோ, மாணவர்கள் மத்தியில் ஒய்யாரமாக நடந்து வருவது என்றோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதுதவிர இதில் பல்வேறு திறமைகள் வெளிப்படுத்த தளங்கள் கிடைக் கின்றன. உதாரணமாக நிர்வாகவியலின் முக்கிய திறமையாக சொல்லப் படும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது, ஆடை வடிவமைப்பது போன்றவை. எனவே, இது சரியான முடிவு அல்ல’ என கொதிக்கிறார் சண்முகப்பிரியா என்ற பொறியியல் மாணவி.

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று கருத்து சொன்ன ஷிவானி, 'ஃபேஷன் ஷோ போன்ற போட்டிகள் கண்டிப்பாகத் தடை செய்யப்படவேண்டியவை யே. காரணம்  இவை மாணவ, மாணவிகள் மத்திய ஒரு ஆரோக்கியமற்ற போட்டிச்சூழல்களை உருவாக்குகின்றன. யாரையும் அவர்களது தோற்றத் தையும் அல்லது வெளிப் புற அழகை மட்டுமே கொண்டு அழகானவர்கள் என்று முடிவு செய்துவிட முடியாது.

இது பலருக்கும் தாங்கள் அழகானவர்கள் இல்லையோ என்ற கேள்வியை யும் திறமை மட்டும் இருந்தால் போதாது அழகும் முக்கியமோ? என்ற தேவையற்ற பயத்தை உருவாக்கிவிடும்.

இது எதிர்காலத்தில் அவர் களின் தன்னம்பிக்கையை குறைத்துவிடும். இதனால் மாணவர்கள் பலர் மனதளவிலும் பாதிக்க வாய்ப்புண்டு. நீதி மன்றத்தின் இந்த முடிவு சரியானதே” என்றார் ஆணித்தரமாக.

இவரது கருத்து ஆதரவாகப் பேசும் மாணவி அக்ஷயா, “ இதுபோன்ற போட்டிகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அழகாக இருப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு அவ்வளவே. ஃபேஷன் ஷோக்களில் பங்கு கொள் வது தவறு இல்லை.

ஆனால், அது மற்ற பிரச்சினைகளை நோக்கி அவர்களை இழுத்து சென்று விடும். ஒருங்கிணைக் கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சிலர் சொல்கிறார் கள். அது மற்ற போட்டிகளை ஒருங்கிணைத் தாலும் கிடைக்குமே.

ஒரு வரை பொம்மை போல வேடிக்கைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது? எவ்வள வோ அருமையான விஷயங்கள் பலவும் இன்னமும் கலாச் சார நிகழ்ச்சிகளில் அங் கீகாரம் கிடைக்காமல் இருக்கின்றன. எனவே, அதுபோன்ற நிகழ்வுகளை ஊக் கப்படுத்தலாம்” என்கி றார்.

’கண்டிப்பாகத் தடை செய்யகூடாது. ஏன் பொறியியல் மாணவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாதா? எப்போதும் புத்தகத்தை மட்டும் படித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இன்று வெற்றி பெற்றவர்க ளாக இருக்கும் பலரும் அதே துறை யை  தேர்ந்தெடுத்துப் படித்தவர்களா என்ன? மற்ற துறைகளின் மீது ஆர்வம் இருக்கும் மாணவ, மாணவி களை இந்த தடை மிகவும் பாதிக்கும்.

இந்த தீர்ப்பு ஒரு குறுகிய சிந்தனை வட்டத்துக்குள் தங்களை புகுத்திக் கொண்டது போல இருக்கிறது’ என்கி றார் மாணவி சாரதா கொதிப்பாக.

இதில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறதோ?!

-மா. அ.மோகன் பிரபாகரன்

படங்கள்: ஹர்சினி, அ.பார்த்திபன்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!