வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (27/11/2015)

கடைசி தொடர்பு:15:53 (27/11/2015)

விகடன் மறுபடியும் வந்தாச்சு!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.

நவம்பர் 23-ம் தேதி மாலை முதல் முடக்கப்பட்டிருந்த ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/anandavikatan/) மீண்டும் வந்தாச்சு. எந்த முன்னறிவிப்பும் இன்றி செய்யப்பட்ட விகடன் பக்கத் தடை குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது முறைப்படியான பதில் எதுவும் இல்லை. ஆனால், விகடனின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம் குறித்து வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்து கருத்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வந்தீர்கள்.இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) மதியம் முதல் விகடனின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது.

எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உலகுக்கு உண்மையை உரத்துச் சொல்லும் விகடனின் பணி கம்பீரமாகத் தொடரும்.

ஆனந்த விகடனின் வரமும் உரமும் வாசகர்களாகிய நீங்கள்தான். தங்களின் அன்பும் ஆதரவுமே என்றென்றும் எங்களை வழிநடத்தும்!

நன்றி..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்