வெளியிடப்பட்ட நேரம்: 02:04 (05/12/2016)

கடைசி தொடர்பு:14:36 (05/12/2016)

தமிழகத்தில் 144 தடை உத்தரவா ?

 ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள  வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவில் குவிந்து வருகின்றனர்.

தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போலோ மருத்துவமனை பகுதியிலும் சென்னையின் முக்கிய இடங்களிலும் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள கீரிம்ஸ் சாலை மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி தலைமையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி சத்யமூர்த்தி மற்றும் சென்னை மாநகர ஆணையர்  ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் ரோந்துப் பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆணையர்கள், காவல்துறைகாணிப்பாளர்கள் முன்பு காவலர்கள் காலை ஏழுமணிக்கே சீருடையில் பணியில் இருக்க வேண்டும்.பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் பணிக்குதிரும்ப வேண்டும் உத்தரவிட்டப்பட்டது.

அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் திமுக  தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 சென்னை மாநகரில் மக்கள் அதிகளவில் கூட்டம் கூடாமல் இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.மேலும் சி. ஆர். பி .எப் படை வீரர்களும்  வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- கே.புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க