ஒரே ஆண்டில் 20 படங்கள்… சொந்த குரலில் 11 பாடல்கள்… இது ஜெயலலிதாவின் சினிமா கிராப்! | List of Films and Songs by actress Jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (06/12/2016)

கடைசி தொடர்பு:14:46 (06/12/2016)

ஒரே ஆண்டில் 20 படங்கள்… சொந்த குரலில் 11 பாடல்கள்… இது ஜெயலலிதாவின் சினிமா கிராப்!

 

தொட்ட துறை எல்லாம் கொடி கட்டி பறந்தவர் ஜெயலலிதா. அவரை தமிழகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்தியது சினிமாத் துறை. சங்கீதம், பரதநாட்டியம் என சிறு வயது முதலே கலையோடு வளர்ந்த அம்முவுக்கு சட்டம் பயில வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் சினிமா என்ட்ரி, அவர் வாழ்வில் எதிர்பாராத திருப்பம். 1960-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தைச் செய்தார் ஜெயலலிதா. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ‘பெரிய சினிமா நடிகையாக வருவார்’ என்று சிவாஜியிடம் வாழ்த்து பெற்றவர், பின் நாட்களில் அவருடன் இணைந்து 17 படங்களில் நடித்தார். தமிழில் 87 படங்களும், தெலுங்கில் 29 படங்களும், கன்னடத்தில் 7 படங்களிலும் நடித்துள்ளார். ஒரே ஒரு ஆங்கிலப்படத்தில் மட்டும் நடித்துள்ளார். அது ஒரு ஆவணப்படமாக உருவானது. மலையாளத்தில் 'ஜீசஸ்' என்ற ஒரு படம் மட்டுமே நடித்தார். அதுவும் ஹிட்டடித்தது. ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். மொத்தம் அவரது திரை வாழ்வில் 127 படங்கள் நடித்துள்ளார். 1970-களின் தொடக்கத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்று வளம் வந்தவர் ஜெயலலிதா.

 

ஜெயலலிதா நடித்த படங்கள்

 

1961 -ம் ஆண்டு 'ஶ்ரீ ஷைல மஹாத்மியா' என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததே அவருக்கு கேமரா முன்பு முதல் தோற்றம். அதிலிருந்து அவரது வாழ்க்கை சினிமா துறையில் ஊடுருவி உச்சம் தொட்டது. 1964 'சின்னத கொம்பே' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15. பின் ‘வெண்ணிற ஆடை’ படம் மூலம் தமிழில் பிரேக்கிங் என்ட்ரி. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என 15 ஆண்டுகள் விழா நாயகியாக திகழ்ந்தார். அவர் நடித்த 30 படங்கள் 100 நாட்களையும் தாண்டி திரையை அலங்கரித்தன. அதிகபட்சமாக 1968-ம் ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். அதிகபட்சமாக எம்.ஜி.ஆர் உடன் 28 படங்களில் நடித்துள்ளார். அனைத்துமே மக்கள் மனதில் இடம் பிடித்த படங்கள். அவரது திரை வாழ்வை, இன்ஃபோகிராபாக பாருங்களேன்...

ஜெயலலிதா நடித்த படங்கள்

 

கர்ஜிக்கும் பெண்ணின் மெல்லிய பின்னணி….

நடிப்பில் மட்டும் அல்ல இசையிலும் மக்களை கட்டிப்போட்டவர் ஜெயலலிதா. தமிழ் சினிமாவில் இதுவரை 11 பாடல்களைப் பாடியுள்ளார். சிவாஜி - ஜெயலலிதா இணைந்து நடித்து தேசிய விருது பெற்ற 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அதில் ‘கேட்டுக்கோடி உருமி மேளம்’ என்ற பாடல் கம்போசிங்கின் போது, எம்.எஸ்.விக்கு பல்லவி அமைத்து கொடுத்தது ஜெயலலிதா தானாம். பாடலை பாடியதும் அவரே. இசை மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும், புரிதலையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு உதாரணம் போதும். ஜெயலலிதா பாடிய பாடல்களில் சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக….

 

'கேட்டுக்கோடி உருமிமேளம்' - பட்டிக்காடா பட்டணமா

 

 

 

 

'நான் என்றால் அது அவளும் நானும்' - சூரிய காந்தி

 

 

'அம்மா என்றால் அன்பு' - அடிமைப் பெண்

 

 

 

 

'கண்கள் ஆயிரம்' - வந்தாளே மகராசி

 

 

 

 

'சித்திரை மணடபத்தில்' - அனபைத் தேடி

 

 

 

'திருமாங்கல்யம் கொள்ளும் முறை' - திருமாங்கல்யம்

 

 

 

 

'உலகம் ஒரு நாள் பிறந்தது' - திருமாங்கல்யம்

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்