சென்னயை ஆக்ரோஷமாக தாக்கும் புயலின் 'eye wall' என்ன செய்யும்? | Eye Wall of Vardha Storm intensifies

வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (12/12/2016)

கடைசி தொடர்பு:13:03 (12/12/2016)

சென்னயை ஆக்ரோஷமாக தாக்கும் புயலின் 'eye wall' என்ன செய்யும்?

வர்தா புயல் சென்னைக்கு அருகே கரையைக் கடந்து கொண்டு இருக்கிறது. முன்னதாக 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூரைக் காற்று வீசும் என்று அறிவித்திருந்த வானிலை ஆய்வு மையம் தற்போது, 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று இருக்கும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வர்தாவின் வீரியத்தை பற்றி நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

eye wall

மேலும், புயலின் Eye Wall மிக  மிக தீவிரமாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த Eye Wall தான் புயலின் ஆபத்தான பகுதி. புயலின் மத்திய பகுதியாக இருக்கும் சுழலை Eye  என்று வானிலை அறிவியல் முறையில் குறிப்பிடுகிறார்கள். இது தெளிவான வானத்தை கொண்ட பகுதி. இந்த மத்திய பகுதியை சுற்றுச் சுழலை ஏற்படுத்தும் சுவர் தான் Eye Wall.  இந்த சுவர் அதி பயங்கர காற்று, தீவிர மழை, சில நேரங்களில் இடி மின்னலையும் தனக்குள் கொண்டு மிக ஆக்ரோஷமாக கரையை நெருங்கும். இது eye-ஐ மத்திய புள்ளியாக கொண்டு சுழன்று கொண்டு காற்ற செங்குத்தாக மேலே பீய்ச்சி அடிக்கப்படும். அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்று இந்த சுழலால் ஏற்படும் வேகத்தில் மிக வேகமாக கரையைத் தாக்கும். சில நேரங்களில் புயலின் தன்மையைப் பொருத்து, இரண்டு eye wallகளும் உருவாகும் வாய்ப்பிருக்கிறது. தற்போது ஒரு கெட்ட செய்தி என்னவென்றால், வர்தா புயலின் eye wall மிகவும் பலத்துடன் கரையை கடக்கிறது.

 

eye wall

 

இந்த  eye wall, சுமார் 35 முதல் 65 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். 65 கிமீ அளவுக்கு நிலப்பகுதியில் அதன் தாக்கம் ஏற்படுத்தும். பழவேற்காடு சென்னையில் இருந்து 55 கிமீ. பழவேற்காட்டில் புயல் கரையைக் கடக்கும் போது  நிச்சயம் அந்த eye wall சென்னையிலும் பலத்த தாக்கத்தையும் ஏற்படுத்தும். இதனால் மிக அதிக பாதிப்புகள் எதிர்பார்க்கலாம்.  மழை கொட்டித் தீர்க்கும்.

அடுத்து 36 மணி நேரங்களுக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று இரவு முதல் காற்றின் வீரியம் குறையும் என்றும் கூறியுள்ளனர். மக்கள் இதன் வீரியத்தை லேசாக எடை போடாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

 

ரெ.சு.வெங்கடேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்