Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

140 ஆண்டுகளில் மிகக் குறைந்த மழை... உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு மழை தெரியுமா? #VikatanInteractive

 

s
s
s
s
 

 

 

 

  • தமிழகத்தின் 48% மழைத் தேவையை வட கிழக்கு பருவ மழைதான் தீர்த்து வைக்கிறது. ஆனால் இந்த ஆண்டு பெய்த பருவ மழை தனது இயல்பான அளவில் பாதியைக் கூட பூர்த்தி செய்யவில்லை.வட கிழக்கு பருவமழையில் தமிழகத்தின் சராசரி மழை அளவு 440 மி.மீ. ஆனால் இந்த ஆண்டு (2016) அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை கிடைத்த வட கிழக்கு பருவ மழை வெறும் 168.3 மில்லி மீட்டர்தான்.

 

  • சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மழை தேவைக்காக வட கிழக்கு பருவ மழையைத் தான் நம்பி இருந்தன. 60% மழைத் தேவையை வடகிழக்கு பருவ மழை தான் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் கடலோர மாவட்டங்களில் பெரிய அளவிலான மழை குறைபாடு பதிவாகியுள்ளது.

 

  • சென்னையில் 57%, கடலூரில் 81%, கன்னியாகுமரி 59%, நாகப்பட்டினம் 74%, புதுக்கோட்டை 61%, ராமநாதபுரம் 61%, திருவள்ளூர் 58%, திருவாரூர் 65%, தூத்துக்குடி 63% என மழை குறைப்பாட்டால் கடலோர மாவட்டங்கள் தவித்து வருகின்றன.

 

மழை

  • 1966-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே பருவ மழை காலத்தில் இரண்டு புயல்கள் சென்னையில் கரையை கடந்தன. ஆனால் எதிர்பார்த்த அளவில் மழை கிடைக்கவில்லை. நாடா புயல் தாக்கமே இல்லாமல் ஏமாற்ற, வர்தா புயல் சென்னையை புரட்டிப் போட்டது. அதில் மிகச் சிறய அளவு மழையை மட்டுமே சென்னையால் தேற்ற முடிந்தது.

 

  • தமிழகத்தில் மிகக் குறைந்த மழை கடலூர் மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு 81% மழை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில்  80% மழை குறைவாக பெய்துள்ளது.

 

  • தமிழகத்தில் ஓரளவு தப்பித்த மாவட்டம் திருப்பூர் மட்டுமே. அங்கு மழை சராசரி அளவை விட குறைவு என்ற போதிலும், தன் சராசரியில் 35% மட்டுமே மழை குறைவாகியுள்ளது.

 

  • மொத்தமாக 2016-ம் ஆண்டு முழுவதும் பெய்த மழை 538 மி.மீ. ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில் 111.6 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் கிழக்கு பருவமழை 258.1 மி.மீ பெய்துள்ளது. இப்போது வட கிழக்கு பருவமழை 168.3 மி.மீ மட்டுமே பெய்துள்ளது.

 

  • 1876-ம் ஆண்டுக்கு பிறகு இவ்வளவு மிகக் குறைவான மழை பதிவானது 2016-ம் ஆண்டில் தான். கூடுதலாக 10 மில்லி மீட்டர் மழை குறைவாக பெய்திருந்தால், தமிழக வரலாற்றிலேயே 2016-ம் ஆண்டு மிகக் குறைந்த மழையை தமிழகத்துக்கு தந்த ஆண்டாக இருந்திருக்கும்.மேலும், டாப் 10 மிகக் குறைந்த மழை பதிவான ஆண்டுகளில் 2012, 2013,2016 என மூன்று அண்மை ஆண்டுகள் இடம் பெற்றுள்ளது கொஞ்சம் கவலைக்குறிய தகவல்.


பெரு மழையை சமாளிக்க தயார் நிலையில் இருந்த தமிழக அரசுக்கு, மழை பெரிய ஏமாற்றைத் தந்துள்ளது. நீர் ஆதாரங்களில் உள்ள இருப்பு பாதாளத்தில் உள்ளன. தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தயார் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? இந்த நிலையை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தான் இப்போது கேள்வி?



ரெ.சு.வெங்கடேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement