வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (30/05/2012)

கடைசி தொடர்பு:16:37 (30/05/2012)

ஒரே நாள்...ஒரே மருத்துவமனை...7 இரட்டைக் குழந்தைகள்!

குழந்தை பேறு அடைந்தவர்கள் தான் முழுமையான வாழ்க்கையை அடைந்தவர்கள் என்று  சொல்லுவார்கள்.அந்த குழந்தை பேறு அடைய முடியாதவர்களுக்கு நவீன அறிவியலின்  வரப்பிரசாதம் தான் செய்ற்கை கருத்தரிப்பு முறை.

இந்த செயற்கை முறையில் ஈரோட்டை சேர்ந்த சுதா மருத்துவனையில் கடந்த வாரம்  ஒரு நாளில் மட்டும் மொத்தம் 26 குழந்தைகள் பிறந்துள்ளது.அதில் 7 தம்பதியனருக்கு  இரட்டை குழந்தை!!!!!!!

ஐம்பது வயதில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ள கோவிந்தம்மாள்,”எங்க சொந்த  ஊர் திருச்சிங்க.என் கணவர் முத்துசாமிக்கு வயது 64 ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எங்களுக்கு திருமணமாகி 17 வருடம் அப்புறம் தான் குழந்தை உண்டாச்சு. ஆனால் 9  மாதத்தில் குழந்தையின் கழுத்தை கொடி சுற்றி குழந்தை இறந்து பிறந்தது.அதன் பிறகு  ஒரு முறை கரு உண்டாகி கலைந்து விட்டது.அதன் பின்பு எங்களுக்கு நம்பிக்கை  போய்விட்டது.

இந்நிலையில் என் உறவுக்கார பெண் ஒருவர் ஈரோட்டில் உள்ள சுதா ஆஸ்பிட்டலை  செயற்கை முறையில் குழந்தை பிறந்தது தெரிந்தது.பின்பு நாமும் ஏன் முயற்சி பண்ண  கூடாது என் எண்ணம் தோன்ற இங்கு மருத்துவமனை அருகில் ஒரு வீடு வாடகைக்கு  எடுத்து ஆறு மாதம் வந்து சிகிச்சை பெற்றேன்.முதல் தடவை முயற்சியிலேயே  பாஸிட்டிவ் ஆகி ஆண் குழந்தை பிறந்துள்ளது”என்றார் மகிழ்ச்சியாக...!

சுதா மருத்துவமனை தலைவர் டாக்டர் தனபாக்கியம்,”செயற்கை கருத்தரிப்பு மூலம்  1978 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லூயிஸ் பரவுன் என்ற குழந்தை பிறந்தது.  வெளிநாடுகளில் குழந்தையின்மை பிரச்சனை ஒரு குடும்ப பிரச்னை தான்.ஆனால் நம்  நாட்டில் தான் அது ஒரு சமூக அங்கீகாரமாக பார்க்கபடுகிறது.

இந்தியாவில் 10 முதல் 20 சதவீத தம்பதியர்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்னை இருக்கிறது.அதே போல்  வருடத்திற்கு மலட்டுத்தன்மை 20 சதவீதம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக  புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்,விந்தணுவில் உயிரணுக்கள் குறைந்து இருப்பது,

சர்க்கரை மற்றும் மரபு ரீதியான நோய்களால் தான் ஆண்களுக்கு இந்த குறைபாடு  ஏற்படுகிறது.அதே போல் பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள்,அடைப்பு, உடல்பருமன்,  சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு போன்ற பிரச்சனைகளால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுகிறது.பொதுவாக திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு வருடம்  குழந்தை பிறக்காதவர்கள் கண்டிப்பாக மருத்துவனைக்கு வந்து பரிசோதனை செய்து  கொள்ள வேண்டும்.சிறு சிறு குறைபாடுகள் இருந்தால் விரைவில் குணப்படுத்திவிட  முடியும்.ஒரு சிலருக்கு எந்த வித பிரச்சனையும் இருக்காது.ஆனால் குழந்தையின்மை  பிரச்சனை இருக்கும்.

அதை நாங்கள்”காரணம் இல்லாமல் கருதரிப்பு ஏற்படாதவர்,”என்போம்.அந்த மாதிரி  உள்ளவர்களுக்கு இந்த முறை ஒரு சிறந்த வரம்.செயற்கை முறையில் குழந்தை பெற  வேண்டும் என்றால் அந்த பெண்ணுக்கு கற்பபையில் கட்டி இருக்ககூடாது.அதேபோல்  கருப்பையில் உள்சதை, நீர்கோர்த்தல் போன்ற பிரச்சனை இருக்க கூடாது.

அதே போல் 35 வயதுக்கு மேல் இந்த முறையில் குழந்தை பெறுபவர்களுக்கு நாங்கள்  அதிகபடியான கவனம் செலுத்த வேண்டும் காரணம் அவர்களுக்கு சர்க்கரை,உப்பு,இரத்த  கொதிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது.அதை கட்டுக்குள்  கொண்டு வந்து தான் குழந்தை பேறு ஏற்படுத்த முடியும்.வயது அதிகமானவர்களை  பொறுத்த வரை அவர்களுக்கு மாதவிடாய் வயது முதிர்வு காரணமாக நின்றுவிடும்.

முதலில் அவர்களுக்கு இளமையை மலரவைத்து,மாதவிடாய் மூன்று மாதம் ஏற்படுத்தி  பிறகுதான் வழக்கமான சிகிச்சையை வழங்கமுடியும். ஏனென்றால் கர்ப்ப பையை நம்
கண்ட்ரோலுக்கு  கொண்டு வர வேண்டும். டெஸ்ட் டியூப் பேபிக்கு முதலில் கருமுட்டை  வளர ஹார்மோன் ஊசி செலுத்தி குறிப்பிட்ட நாளில் 1.8 மீட்டர் அளவில் முட்டை  வளர்ந்த பிறகு அதில் முதிர்ச்சியடைந்த முட்டையை எடுத்து அதில் விந்தணைக்குகளை  செலுத்தி இன்குபேட்டரில் வைப்போம்.

அது பெண்ணின் கருப்பையை போல்செயற்கை முறையில் உருவாக்கபட்டது.அது  பெண்ணின் கருப்பையில் உள்ள தட்டவெட்பம் இருக்கும். இதை நாங்கள் ‘இக்ஸி'  மெத்தடு என்று சொல்லுவோம். இதில் கொஞ்சம் ஏமாந்தால் கூட முயற்சி தோல்வி  அடையும்.அது படிபடியாக 72 நாட்களில் 8 செல் கருமுளையில் ஏற்படும். பின்பு அதை  பெண்ணின் கருப்பையில் செலுத்துவோம்.

செலுத்திய15 நாட்களில் குழந்தை ஊன்றி விடும் அதன் பிறகு ஒரு வாரம் கழித்து தான்  ஸ்கானில் அது குழந்தை தெரியும்.இரண்டாவது வாரம் இதய துடிப்பு குழந்தைக்கு  ஏற்படும்.அப்படி ஏற்பட்ட பிறகு எந்த சிக்கலும் என்று உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த செயற்கை கருதெரிப்பு முறையை 6 முறை தான் ஒரு பெண்ணுக்கு முயற்சி  செய்ய முடியும் ஆறு தடவை மேல் சக்சஸ் ஆக வில்லை என்றால் ஒன்றும் செய்ய  முடியாது. இரட்டை குழந்தைகளை பொறுத்த வரை நாங்கள் மூன்று கருமுட்டைகளை  செலுத்துவோம்.பெண்ணின் கருப்பை வலிமையாக இருக்கும் பட்சத்தில் மூன்று  குழந்தைகள் கூட உருவாகி விடும்.

எட்டு வாரத்திற்கு பிறகு நாங்கள் சோதனை செய்து பார்க்கும் போது மூன்று குழந்தைகள்  உருவாகி இருந்தது தெரிந்தால் ஊசி மூலம் ஒரு குழந்தையை மட்டும் வளராமல் தடுத்து  விடுவோம். அதனால் இரட்டை குழந்தை பிறப்பதால் சிக்கல்  இருக்காது.இது வரை ஒரு  நாளில் நாங்கள் அதிகபட்சமாக 20 குழந்தையை இந்த செயற்கை முறையில் பிறந்து  உள்ளன.ஆனால் கடந்த 23 ம் தேதி 26 குழந்தைகள் பிறந்தது.இது மருத்துவ உலகில்  ஒரு மைல் கல்.

இந்த சாதனைக்கு நான் மட்டும் காரணம் அல்ல என் மருமகள் பிரதீபா மற்றும் டாக்டர்  குழுவினர் தான் முக்கிய காரணம்.டெஸ்ட் டியூப் பேபி முறையில் நூற்றுக்கு 20  சதவீதம்தான் குழந்தைகள் பிறக்கும்.ஆனால் எங்கள் மருத்துவ குழு சாதனை அளவாக  70 சதவீதம் வரை பிறக்க வைத்துள்ளோம்.படிப்படியாக இந்த சாதனை  அடைந்துள்ளோம். நாங்கள் மருத்துவமனையை ஆரம்பிக்கும் போது கேலி  பேசியவர்களுக்கு இந்த வெற்றி தான் எங்கள் பதில்!”என்றார் பெருமையாக..

-சபரி

படங்கள்- மகா.தமிழ்ப்பிரபாகரன்
 

 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்