வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (15/03/2017)

கடைசி தொடர்பு:10:25 (15/03/2017)

அந்த 90 வாக்குகள் : தோழர் நல்லகண்ணு முதல் இரோம் சர்மிளா வரை!

இரோம் சர்மிளா

ணிப்பூரில் ஆயுதச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் இரோம் சர்மிளா. இப்போது மணிப்பூரில் நடைபெற்ற தேர்தலில் வெறும் 90 ஓட்டுக்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.  இவர் மட்டும் அல்ல. தமிழகத் தேர்தல் களத்திலும் இதே போல சமூகப் போராளிகள் தோல்வியைத்தான் தழுவினர்.

நல்லகண்ணு

நல்லகண்ணு 1999-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தோழர் நல்லகண்ணு கோவைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அரசியல் தூய்மை, பொது உடமைவாதி, இயற்கை வளங்களை காக்கும் போராளி என்று அறியப்பட்ட அவருக்கு கோவை மக்கள் கொடுத்த பரிசு தோல்விதான். பி.ஜே.பி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த சி.பி.ராதாகிருஷ்ணன்தான் அன்றைக்கு வெற்றி பெற்றார். நல்லகண்ணு 54,077 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். எனினும், தமிழகத்தின் நீர் ஆதாரங்களைக் காக்கும் அவர் போராட்டங்கள் வெற்றியைத் தந்து கொண்டு இருக்கின்றன.

எம்.எஸ்.உதயமூர்த்தி

1980-களில் தமிழகத்தில் இளைஞர்களின் சிந்தனைகளில் புதிய எம்.எஸ்.உதயமூர்த்தி மாற்றத்தை ஏற்படுத்துபவராக வளர்ந்து வந்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி. உன்னால் முடியும் தம்பி என்பதுதான் அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை. இதே தலைப்பில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க கே.பாலசந்தர் ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். தமது புத்தகங்களுக்கு இருக்கும் செல்வாக்கை நம்பி மக்கள் சக்தி இயக்கம் என்ற கட்சியையும் உதயமூர்த்தி தொடங்கினார். 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.எஸ். உதயமூர்த்தி மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பெற்ற வாக்குகள் 1289 மட்டும்தான். பின்னர் அவர் தமது அரசியல் இயக்கத்தை சமூக இயக்கமாக மாற்றி விட்டார். எனினும் அவரது தன்னம்பிக்கை விதை இளைஞர்களிடம் இன்னும் மிச்சம் இருக்கிறது.

எஸ்.பி. உதயக்குமார்

எஸ்.பி.உதயகுமார் அணு உலைகளுக்கு எதிராக தொடர்போராட்டங்களை முன்னெடுப்பவர் எம்.எஸ்.பி. உதயக்குமார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் பி.ஜே.பி-யின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் வெற்றி பெற்றார். உதயகுமாருக்கு 8-வது இடம்தான் கிடைத்தது. அவருக்குக் கிடைத்தது 15,305 ஓட்டுக்கள்தான். இதன்பின்னர் அவர், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தே விலகிவிட்டார். தொடர்ந்து பசுமைத் தமிழகம் என்ற பெயரில் தமது இயற்கைக்கு ஆதரவான போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறார்.

டிராஃபிக் ராமசாமி

பொதுநல வழக்குகளின் போராளி என்று இன்றளவும் அறியப்படுவர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் டிராஃபிக் ராமசாமிஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேட்சையாக களம் இறங்கினார் டிராஃபிக் ராமசாமி. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பும், பிரசாரத்தின்போதும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து தாக்குதல்கள் தொடர்ந்தன. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. ஒரு ரிக்‌ஷாவில் தெருத்தெருவாக பிரசாரம் செய்தார். அவரைப் போன்ற சிறிய சமூக இயக்கங்கள் எல்லாம் அவருக்காக களம் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டன. எனினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் அவர்  22-வது இடத்தைப் பிடித்தார். 4590 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். இன்றளவும் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசியல் பேனரை கிழித்தெறிந்து கொண்டு தமது சமூகப் பணியைத் தொடர்ந்து வருகிறார் டிராஃபிக் ராமசாமி.

இரோம் சர்மிளா

மணிப்பூரில் அமலில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று 16 ஆண்டுகளாக நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியவர்.  உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தபின்னர் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்தை வென்றெடுத்து மக்கள் பணியாற்றப்போவதாகக் கூறினார். மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக இல்லை. வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுத் தோல்வி அடைந்தார். தோல்வி காரணமாக விரக்தியடைந்த இரோம் சர்மிளா, தாம் அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யப்போவதாகச் சொல்லியவர், இப்போது கேரளமாநிலம் அட்டபாடியில் ஒரு பத்திரிகையாளர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஒரு சமூகப் போராளிகளை ஓய்வெடுக்க வைத்துவிட்டது இந்த சமூகம்.

- கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்