வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (16/03/2017)

கடைசி தொடர்பு:16:31 (16/03/2017)

3 கோடி மீன்களைக் கொன்ற ஆபத்து... இந்தியாவை நெருங்குகிறது! #OmanAlgae

solomon fish affected by Algae

மேலும் படங்களைக் காண க்ளிக் செய்க:

2015ம் ஆண்டு அமெரிக்காவின் தெற்குக் கடலோரப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான கடற்சிங்கங்கள் திடீரென இறந்தன. அதே வருடத்தில் அலாஸ்காவின் வளைகுடாப் பகுதிகளில் 12 திமிங்கிலங்களும், சிலியில் 300க்கும் அதிகமான திமிங்கிலங்களும் இறந்து போயின. சென்ற வருடம் சிலியில் 2.5 கோடி சாலமன் மீன்கள் பிப்ரவரி - மார்ச் இடைப்பட்ட காலத்தில் இறந்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதற்கெல்லாம் காரணம் ஒரே விஷயம்தான். அமெரிக்கக் கடல் பகுதியில் இருந்து வேகமாக அரபிக்கடல் நோக்கிப் பரவி வரும் ஆல்காக்கள்தான்(Algae). 

சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட இந்த ஆல்காக்கள்(Algae) கடல் பகுதியில் பரவி கடலின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கடல் உணவு சார்பை அழித்து வருகின்றன. தற்போது இந்த ஆல்காக்கள் ஓமன் பகுதியில் வேகமாகப் பரவி வருகின்றன. இதன் அடுத்த குறி இந்தியாதான். 

முதன்முதலாக கலிஃபோர்னியாவில் கடற்சிங்கங்களும், பறவைகளும் இறந்த போது அறிவியலாளர்கள் கடல் பகுதியில் வித்தியாசமான விஷத்தன்மை கொண்ட ஆல்காக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை கடல் உயிரினங்களுக்கு ஆபத்தானவை என அடையாளம் கண்டனர். பல்வேறுகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் உள்ள மீன்களை உண்ண வேண்டாம் என்ற அறிவிப்பையும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைத்தனர்.

Algae

மேலும் படங்களைக் காண க்ளிக் செய்க:

மீன்களின் உணவு அமைப்பில் இருக்கும் ஆல்காக்கள் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் பெருமளவு மீன்களை பாதித்தது. தண்ணீரின் வெப்பநிலை உயர்வைப் பொறுத்து வேகமாக வளரும் இந்த விஷத்தன்மை கொண்ட இந்தப் பச்சை ஆல்காக்கள் ஓமன் கடல் பகுதியில் பத்து லட்சத்துக்கும் அதிகமான சாலமன் மீன்கள் இறக்க காரணமானது. சிலியில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 300 திமிங்கலங்கள் இந்த விஷத்தன்மையால் இறந்துள்ளன. 

தெற்கு அமெரிக்காவில் இருந்து அரபிக்கடல் வரை பரவியிருக்கும் இந்த ஆல்காக்கள். பருவநிலை மாற்றங்களாலும் மற்றும் அதோடு தொடர்புடைய காரணிகளாலும்  வேகமாக வளர்ந்து சூழலை பாதிக்கின்றன. தற்போது ஓமன் பகுதிகளில் அதிகரித்து வரும் பச்சை ஆல்காக்களுக்கு காரணம் இமயமலையில் உருகும் பனிக்கட்டிகள்தான் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பருவநிலை மாற்றம் உருவாகி மழைக்காலங்கள் மாறி அமைந்துள்ளன. இப்படி நடப்பதால் அரபிக்கடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது.  இந்த மாற்றம் விஷத்தன்மை கொண்ட பச்சை ஆல்காக்கள் வேகமாக வளர காரணமாகியுள்ளன என்கின்றனர். 

Algae

மேலும் படங்களைக் காண க்ளிக் செய்க:

சூடோ-நிட்ஸ்சியா (Pseudo-nitzschia) எனும் ஆல்கா விஷத்தன்மை வாய்ந்த அமிலத்தை சுரக்கும் தன்மை கொண்டது. 2015ம் ஆண்டு பெருமளவில் அமெரிக்கக் கடல் பகுதியில் கண்டறியப்பட்டன. இவை  பரவக்கூடியதாகவும், பறவைகள், கடல் வாழ் பாலூட்டிகள் மற்றும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. 

ஆல்காக்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான் என்றாலும் அதிலும் விஷத்தன்மை வாய்ந்த வகைகள் உள்ளன. அவைதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எல்லா உயிரினங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலை உள்ளது. இந்த ஆல்காக்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் வேகமாக வளரும். அந்த வெப்பநிலை தற்போது பருவநிலை மாற்றங்களால் கடலில் அதிகரித்துள்ளது.அதுவே இந்த ஆல்காக்கள் வேகமாக வளர காரணமாகியுள்ளன. 

ஆல்காக்கள்

மேலும் படங்களைக் காண க்ளிக் செய்க:

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபாயகரமானதாகக் கூறுகிறார்கள். இந்த ஆல்காக்கள் அதிகமாகப் பரவுவது அமெரிக்காவுக்கும் அரபிக்கடலுக்கும் இடைப்பட்ட மிகப்பெரிய கடல்பகுதியில். மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி சூற்றுச்சுழல் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். கடல் உணவுகளையும் பெருமளவிலும் பாதிக்கும் என எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டுகளில் இது  மிகப்பெரிய ஆபத்தாக மாறி இந்தியாவை நெருங்கும் என்று கூறிவருகிறார்கள்.அனைத்து ஆய்வுகளும் ஆபத்தைக் கூறி பயமுறுத்துவதாகவே உள்ளன. இதற்குத் தீர்வுதான் என்ன?

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்