Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம்..காய்கறிகள் பற்றாக்குறை அபாயம் ?

லாரி

டீசலுக்கு விதிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி உயர்த்தப்பட்டதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தென் மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த  30 -ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம்,கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துவிட்டது. 

அகில இந்திய அளவில் போராட்டம் வெடிக்கிறது ! 

லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்பாக,தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜிடம் பேசியபோது," யுவராஜ்எங்கள் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று, வாகனக் காப்பீடுக்கான பிரிமியம்  உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால், இதை ரத்து செய்ய முடியாது என்று மத்திய - மாநில அரசுகள் கூறி வருகின்றன. எனவே, எங்கள் போராட்டமும் தொடரும். அகில இந்திய மோட்டர் காங்கிரசும் வரும் 8 -ம் தேதி முதல் போராட்டத்தில் களமிறங்க உள்ளது.டெல்லி,குஜராத் ,மும்பை  உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து செல்லும் சரக்கு லோடுகளை இப்போதே  நிறுத்தத் தொடங்கிவிட்டனர். இந்தியா முழுவதும் சரக்குகள் தேங்கும் நிலை உருவாகும். வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்படும். 

தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.ஆறு மாநிலங்களையும் சேர்த்து ,சுமார் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் முடங்கியுள்ளது.ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்  55 ஆயிரம் மணல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.அதிகாரத்தில் இருப்பவர்கள்,எங்கள் மீது பழியைப் போட்டுவிட்டு  மக்களிடம் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்.எனவே எங்களுடைய பிரச்னைகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்"  என்றார்.

இது தொடர்பாக தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமாரசாமியிடம் பேசிய போது, "போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.எங்களுடைய கோரிக்கைளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.வேலை  நிறுத்தத்தைத் திரும்பப் பெறும் முடிவில் இருந்தோம்.எனினும்,ஐதராபாத்தில் ஒழுங்குமுறை மற்றும் காப்பீட்டு இந்திய மேம்பாட்டு ஆணைய (IRDAI) பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.எனவே, வரும் 8 -ம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.அந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த ஆறு நாட்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கான  சரக்குகள் நின்றுவிட்டன. 6 மாநிலங்களில் 25 ஆயிரம் கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. இதை  நம்பி இருக்கின்ற 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்" என்றார்.

காய்கறிகள் விலை உயர்வு..! 

குமாரசாமிஅத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள் ,அரசி,பருப்பு போன்ற உணவு வகைகள் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக காய் கனி, மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் தியாகராஜனிடம் பேசினோம்."லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியிருப்பதால்,கோயம்பேடு சந்தையில் கடந்த 6 நாட்களாக காய்கறிகள்,பழங்கள் மற்றும் மலர்களின் வரத்துக் குறைந்துள்ளது.இதனால் காய்கறிகள் மற்றும் பழங்கள் மீதான விலை கிலோவுக்கு ரூ.20-லிருந்து 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தொடர்ந்து போராட்டம் நீடித்தால் பொதுமக்கள் மட்டுமல்ல  வியாபாரிகளே காய்கறிகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இந்தப் போராட்டம்  முடிவுக்கு வந்தால் மட்டுமே அனைவருக்கும் நன்மையாக இருக்கும் "என்றார் 

விவசாயம் முற்றிலுமாக பாதிப்பு ,பணநீக்க நடவடிக்கை போன்றவற்றால் ஏற்கெனவே  சாமான்யர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது.சாமான்யர்களின்  மேல் ஏற்றப்பட்டுள்ள இந்தச் சுமையை எப்படி அரசு இறக்கி வைக்கப்போகிறது என்று கேள்வி எழுப்புகின்றனர் சாமான்யர்கள் ! 
 
-கே.புவனேஸ்வரி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement