வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (25/04/2017)

கடைசி தொடர்பு:11:02 (27/04/2017)

மாதிரி நீட் தேர்வு... உடனே ஸ்கோர் தெரிந்து கொள்ளலாம்!  #VikatanNEETTest1 

NEET

தேவை, தேவையில்லை என்ற சர்ச்சைகளை எல்லாம் தாண்டி மே 7-ம் தேதி `நீட்' தேர்வு நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் இருந்து 88 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத  விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

ஆனால், பல மாணவர்களுக்கு இந்தத் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் இருக்கிறது. அவர்களுக்காகவேதான் விகடன் இந்த மாதிரித் தேர்வை வழங்குகிறது.  

அதற்கு முன் சில தகவல்கள்:  

`நீட்' தேர்வைப் பொறுத்தவரை மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT) பரிந்துரை செய்துள்ள +1, +2 பாடத்திட்டங்களின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்படும். சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களைப் படித்தால் மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையில்லை. தமிழக அரசின் +1, +2 பாடத்திட்டங்கள் தர அளவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட குறைந்ததில்லை. NCERT-யின் தேசியக் கலைத்திட்ட  வடிவமைப்பு அடிப்படையிலேயே தமிழக அரசுப் பாடத்திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால்,  தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்களும் இத்தேர்வை நன்றாக எதிர்கொள்ள முடியும் 

+1, +2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து பாடத்திற்கு 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள். மொத்தம் 720 மதிப்பெண்கள்.  ஒவ்வொரு தவறான வினாவிற்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

ஜூன் 8-ம் தேதி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பிறகு மருத்துவப் படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வெளியிடப்படும். தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பிறகு மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் மருத்துவப் படிப்பில் சேர  ஒரு தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும். அந்த தகுதி மதிப்பெண்களுக்கு  குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் கூட மருத்துப்படிப்பில் சேர முடியாது. 

இந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவரின் மதிப்பெண் எவ்வளவோ, அதில் பாதி தான் தகுதி மதிப்பெண். உதாரணத்துக்கு,  மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில்,

அதிகபட்சமாக ஒரு மாணவர்  320 மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், தகுதி மதிப்பெண் 160 என்று நிர்ணயிக்கப்படும்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றாலும் தமிழில் இத்தேர்வுக்கான பாடத்திட்டங்களோ, பாடப் புத்தகங்களோ இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில்​தான்​ விகடன்,  இந்த​  மாதிரி வினாத்தொகுப்பை வெளியிடுகிறது. 

​வெறும் தொகுப்பாக அளிக்காமல், விடைகளை எளிதில் நீங்கள் பதிவிட்டுச் சரி பார்க்கும் வண்ணம், கொடுத்திருக்கிறோம். சில நிமிடங்கள் மட்டும் செலவழித்து 60 கேள்விகளுக்கும் பதில் சொல்லி, இறுதியில் சரியான பதில்களையும் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளலாம். ​

மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், பள்ளிக்கல்வித் துறையின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளருமான  முனைவர் சூரியகுமார் இக்கேள்விகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.     

​மாதிரித் தேர்வை அட்டெண்ட் செய்ய..​

ஒரு பக்கத்துக்கு 10 கேள்விகள் வீதம் 6 பக்கங்களுக்கு 60 கேள்விகள் இடம் பெற்றிருக்கி​ன்றன.​

முதல் பத்து கேள்விகளுக்கும் விடைகளைத் தேர்வு செய்தால் மட்டுமே அடுத்த பக்கம் திறக்கும். 

6 பக்கங்களிலும் உள்ள 60 கேள்விகளுக்கும் விடை அளித்த உடன், நீங்கள் பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.  கூடவே, கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடைகளும் இடம் பெற்றிருக்கும்.

உங்கள் திறனை சோதித்தறிவதோடு,  நீட் தேர்வுக்கான மாதிரி வினாத் தொகுப்பாகவும் இதை நீங்கள் பயன்படுத்தலாம். 

அடுத்த 60 கேள்விகளோடு நாளை சந்திப்போம். 

 

 

quiz is blocked.

{{ dataservice.quizDetails.title}}

{{dataservice.quizDetails.description}}

{{ questions.id+1 }}.

{{ (dataservice.seleted_status)?'சரியான பதில்':'தவறான பதில்'; }}

பதில்: {{ questions.possibilities[questions.correct].answer }}

குறிப்பு

{{questions.possibilities[dataservice.selected_index].additional_text}}

{{questions.additional_text}}

Result: {{(dataservice.quizResults[dataservice.resultNum].mark_based_quiz.total_mark/dataservice.quizDetails.total_mark_of_quiz)*100 | number : 0 }}%

{{dataservice.quizResults[dataservice.resultNum].text}}

{{dataservice.quizResults[dataservice.resultNum].description}}

Question & answer

{{($index+1)+') '}}

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்