Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒபாமா அமெரிக்காவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இதைத்தான் கூற வருகிறார்!

மெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்-ஐ அந்நாட்டின் பெரும்பகுதி மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், அதிபர் பதவியிலிருந்து விலகிய பின் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் அதிபர் பராக் ஒபமா, கடந்த வாரம் பத்திரிக்கையாளர்கள் புடைசூழ பள்ளி, கல்லூரியில் தன்னுடைய உரையை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையில், ஒரு இடத்தில்கூட அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி பேசவில்லை. இந்தச் சந்திபிற்கான காரணமாக, அவர் கூறியது, "அமெரிக்காவில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க எடுக்கப்படும் முதல் முயற்சி" என்றார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒபாமா ஆற்றிய உரையில் என்ன பேசினார்?

மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு, எப்போதும் அணிந்திருக்கும் டை இல்லாமல், அவருடைய சொந்த மாகாணமான சிகாகோவில் தன்னுடைய மௌனத்தை கலைத்துப் பேசத் தொடங்கினார். 400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த சிகாகோ பல்கலைக்கழகத்தில், அடுத்த தலைமுறை இளைஞர்களுடன் அவர் பேசினார். ஒபாமாவுக்கு மாணவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். பிறகு, அவருடன் 6 மாணவர்கள் மற்றும் கல்வியாண்டு முடித்த சில மாணவர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மாணவர்கள் மத்தியில் குடியுரிமை பற்றிய விழிப்பு உணர்வு கொண்டு வரும் நோக்கமாக அந்த உரையாடல் அமைந்தது.

55 வயதான முன்னாள் அதிபர் ஒபாமா, தொடர்ந்து இரண்டு முறை வெள்ளை மாளிகையை அலங்கரித்தவர். தற்போது அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பற்றி தாம் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தற்போதுள்ள தலைவர்களைத் தாண்டி, இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே ஒபாமாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. 

மாணவர்களிடையே ஒபாமா பேசுகையில், "என்னுடைய அடுத்தக்கட்ட வேலையாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நான் இந்தக் கல்லூரியில் சட்டம் குறித்த பாடம் நடத்தியுள்ளேன். நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்ய முடியும் என்றால், அது இந்த நாட்டின் அடுத்த தலைமுறையான உங்களை, ஆகச்சிறந்த தலைவர்களாக மாற்ற எடுக்கும் முயற்சியாகத் தான் இருக்க முடியும்" என்றார்.

தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்தார். அப்போது, ட்ரம்ப் குறித்த விமர்சனங்களை கவனத்துடன் தவிர்த்தார். தான் ஒரு முன்னாள் அதிபர் என்பதாலும், வெள்ளை மாளிகையில் ஒருவரை விமர்சிப்பது முறையல்ல என்பதாலும் ட்ரம்ப் தொடர்பான கேள்விகளை அவர் தவிர்த்தார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியது முதல் இதுவரை ஒபாமா எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ட்விட்டரில் மட்டும் அவ்வபோது சில பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இப்போதுள்ள ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஒபாமா கொண்டுவந்த சில திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வருகிறது.

"சிரியா நாட்டிலிருந்து வரும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒபாமாவே காரணம்" என்று ட்ரம்ப் குற்றம்சாட்டிய போதிலும், அதற்குப்பதிலளிக்காமல் ஒபாமா அமைதியகவே இருந்துள்ளார். அமெரிக்காவில் நடந்த வன்முறைகளுக்கும், டமாஸ்கஸ் பகுதியில் நடந்த ரசாயனத் தாக்குதல்களுக்கும் ஒபாமாதான் பொறுப்பு என்று குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டினாலும் ஒபாமா இந்த மேடையில் ட்ரம்ப்பை பற்றி ஒரு வார்த்தைக் கூட தவறாக பேசாமல், அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்து விட்டார். ஒபாமாவின் இந்தச் செயல், ட்ரம்ப்-ஐ நேரடியாகத் தாக்காவிட்டாலும் சற்றே கலங்க வைத்திருக்கும்.

அடுத்த தலைமுறை மக்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஒபாமாவின் கருத்து, அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல; இந்தியாவுக்கும் பொருந்தும். இப்போதெல்லாம் எங்காவது பிரச்னை நடந்தால், அரசை எதிர்பார்த்து இளைஞர்கள் செயல்படுவது இல்லை. எந்தப் பிரசனையாக இருந்தாலும் வீதியில் இறங்கி பணியாற்றுவதோ, போராடுவதோ இங்குள்ள இளைஞர்களுக்கு தானாகவே வந்துவிட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு அறவழியில் நடத்திய போரட்டமே அதற்குச் சாட்சி எனலாம். அந்தப்போராட்டத்தின் போது கட்டுக்கோப்பாக இளைஞர்கள் செயலாற்றியது, அடுத்த தலைமுறையினருக்கு உள்ள பொறுப்பு உணர்வை வெளிப்படுத்தி விட்டது. எனவே,  தமிழகம் உள்பட இந்தியா முழுவதற்குமே இனி அடுத்த தலைமுறையினரின் ஆட்சிதான் தேவைப்படுகிறது. 

ஒபாமாவின் கருத்துக்கள் அமெரிக்க இளைஞர்களின் காதுகளுக்கு கேட்கிறதோ? இல்லையோ? தமிழ்நாட்டுக்கு கட்டாயம் கேட்க வேண்டும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement