அ.தி.மு.க அஸ்தமனம் ஆரம்பம்..! OPSvsEPS சர்வே அதிர்ச்சி முடிவுகள் #VIkatanSurveyResults

எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

மீபத்தில் அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியும் வைத்திலிங்கமும் வந்துகொண்டிருந்தபோது, ஒரு மூத்த நிர்வாகி வைத்திலிங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான வைத்திலிங்கமும் அந்த நிர்வாகியைப் பொதுவெளியில் திட்டியிருக்கிறார். இதனையடுத்து, செங்கோட்டையன் வந்து சமாதானப்படுத்திய பிறகுதான் அந்த சலசலப்பு அடங்கியிருக்கிறது. இப்படியான குழப்பங்கள் மற்றும் சலசலப்புகளுக்கு ஊடாகத்தான் அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. 

இந்தச் சூழலில் இரு அணிகளும் இணைவதன் மூலம் என்ன நிகழும்..? முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த இருவரில் யாருக்கு உங்கள் ஆதரவு..? இன்னும் சசிகலா, தினகரனின் ஆதிக்கம் கட்சிக்குள் இருக்கிறதா...? அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சில கேள்விகளை முன்வைத்து ஒரு சர்வே நடத்தினோம்...

அந்தச் சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 59.8 சதவிகிதம் பேர், ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு 3.8 சதவிகிதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுபோல, 71.7 சதவிகிதம் பேர், இன்னும் அ.தி.மு.க-வுக்குள் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். 

இதில் குறிப்பிடத்தகுந்த இன்னொரு விஷயம், இந்த இரு அணிகளும் இணைவதன் மூலம் தமிழகத்துக்கு நன்மை பிறக்கும் என்பதை மக்கள் யாரும் நம்பவில்லை. ஆம், 71.3 சதவிகிதம் பேர், இந்த அணிகள் இணைவதால் ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் அராஜகங்கள் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் மீண்டும் தொடரும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

 

சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 59.8 சதவிகிதம் பேர், ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு 3.8 சதவிகிதத்தினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 

 

அ.தி.மு.க

 

அ.தி.மு.க

அ.தி.மு.க

அ.தி.மு.க

 

''அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு நாங்கள் காரணமில்லை'' என பி.ஜே.பி தலைவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னாலும்... தமிழக மக்கள் யாரும் நம்பத்தயாராக இல்லை என்பதை சர்வே முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. ஆம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளும் இணைவதன் பின்னணியில் பி.ஜே.பி இருக்கிறது என 48.5 சதவிகிதத்தினரும், இது சசிகலா - தினகரன் குடும்பம் நடத்தும் திரைமறைவு நாடகம் என்று 30.4 சதவிகிதத்தினரும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இந்தச் சர்வேயில், 'அ.தி.மு.க-வின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு... பெரும்பாலானவர்கள் ''அது, தன் அஸ்தமனக் காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர், “தமிழகத்தில் எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் எம்.ஜி.ஆர் ஆல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க அழிவுப்பாதையில் செல்வதை யாராலும் தடுக்கமுடியாது”  என்று தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இதுதான் பெரும்பான்மையானவர்களின் கருத்தாகவும் இருக்கிறது. அதுபோல, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக மாறும் என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். கணிசமான மக்கள், ''பன்னீர்செல்வத்தால் மட்டும்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்'' என்று பதிவிட்டுள்ளார்கள்.   

அ.தி.மு.க

அ.தி.மு.க

அ.தி.மு.க

பல கட்சி அரசியல்தான் வலுவான ஜனநாயகத்துக்கு நல்லது. இதை அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் உணர்ந்து, மக்களின் இந்தக் கருத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். மக்களின் இந்தக் கருத்தை  உதாசீனம் செய்து சுலபமாகக் கடந்துசெல்வது நிச்சயம் அவர்களுக்கு நன்மை பயக்காது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!