Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“நாங்க இருக்கோம்... கலங்காதே..!” அன்பில் மகேஷுக்கு உதயநிதியின் ஆறுதல்

உதயநிதி ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ்

திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷுக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்குமான நட்பு ஊரறிந்த ஒன்று. உதயநிதி ஸ்டாலின் திரையுலகில் அடியெடுத்துவைத்தபோது, அவரின் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவராக இருந்து, மாவட்டம்தோறும் கிளை பரப்பி அடித்தளமிட்டவர். தி.மு.க-வில் இளைஞர் அணித் துணைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டபின்... உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், அவருக்கு இவர் ஆலோசனை வழங்குவதும், இவர் அவருக்கு ஆலோசனை வழங்குவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில், தற்போது மிகவும் துவண்டிருந்த அன்பில் மகேஷைச் சந்தித்து ஆறுதல் அளித்துத் தெம்பூட்டியுள்ளார் உதயநிதி'' என்கின்றனர் தி.மு.க-வினர்.

'வேர்ல்டு லேர்னிங்' என்னும் அமெரிக்க அமைப்பு, உலகெங்குமிருந்து இளம் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பல்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரை அமெரிக்காவுக்கு அழைத்து, அங்குள்ள பண்பாட்டு பழக்கவழக்கங்கள், அரசியல் வரலாறு, அரசியல் சூழல்கள் குறித்தெல்லாம் பகிர்ந்துகொள்கிறது. இது, நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுவதாக அந்த அமைப்புக் கூறுகிறது. அந்தவகையில், இந்தாண்டு இந்தியாவிலிருந்து அன்பில் மகேஷை, 16 பேரில் ஒருவராகத் தேர்வு செய்துள்ளது. ‘லெஜிஸ்லேடிவ் ஃபெல்லோ புரோக்ராம்’ (Legislative Fellow Program) என்ற பெயரில் அழைக்கப்படும் ஆறு வார அமெரிக்கா பயிற்சிக்காக, அன்பில் மகேஷ் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நள்ளிரவு அமெரிக்கா கிளம்பினார். அதிகாலையில்  ஜெர்மனி பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கியவர், அங்கிருந்து மாற்று விமானம் பிடிப்பதற்குமுன், தமிழ்நாட்டுக்கு கால் செய்துள்ளார். அப்போதுதான், வீட்டிலுள்ளோர் அந்தத் துயரச் செய்தியைப் பகிர்ந்தனர். உடனடியாக வந்த அதே விமானத்தில் தமிழ்நாடு திரும்பியவர், திருச்சிக்குப் பறந்தார். 

அன்பில் பாஸ்கருடன் அன்பில் மகேஷ்

தமது வீட்டின்முன், அதுநாள் வரையில் ஒரு தோழரைப்போல பழகிய சித்தப்பா அன்பில் பாஸ்கர் இறந்த உடலாகக் காட்சி தந்தார். இதைக் கண்டு குலுங்கி அழுதார் அன்பில் மகேஷ்.''ஸ்கார்பியோல வந்துட்டு இருந்தாரு. தூக்க கலக்கத்துல, நின்னுகிட்டு இருந்த லாரி மேல டிரைவர் விட்டுட்டாரு. கார்ல போன எல்லோருக்கும் பலத்த அடி. ஆனா, சித்தப்பா... நம்மை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாரு'' கதறினர் குழுமியிருந்த உறவுகள்.''அப்பா, அன்பில் தர்மலிங்கத்தோட தம்பி மகன்தான் அன்பில் பாஸ்கர். தர்மலிங்கத்தோட வீட்டுலயேதான் இவரும் வளந்தாரு. நேரடிக் கழக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், அன்பில் மகேஷுக்குப் பக்கபலமாக இருந்தவர் அன்பில் பாஸ்கர். அரசியல்ரீதியாக நிறைய வழிகாட்டல்களைக் கொடுத்துவந்தார். தேர்தல் வெற்றிக்கு இவரின் ஆலோசனைகளும் முக்கியக் காரணம். சட்டென 45 வயதில் மறைந்துபோவார்னு யாரும் நினைச்சுப் பார்க்கலை'' என்றனர் திருவெறும்பூர் தொகுதி தி.மு.க-வினர். 

துயரச் செய்தி அறிந்து சென்னையிலிருந்து துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் திருச்சி வந்தனர். கண்ணீரோடு நின்றிருந்த அன்பில் மகேஷைக் கட்டியணைத்த உதயநிதி, ''நண்பா, சித்தப்பாதான் உனக்கு எல்லாமுமானவர்னு தெரியும். நிச்சயமா, இந்த மரணத்தை ஜீரணிக்க ரொம்பநாள் ஆகும். ஆனா, காலம் எல்லாத்துக்கும் மருந்தா அமையும். நாங்கள்லாம் இருக்கோம். கலங்காதே'' என்று கண்ணீரைத் துடைத்துள்ளார்.''அமெரிக்கா புறப்பட்ட நீ, பாதியிலேயே திரும்பி, இறுதிச்சடங்குல கலந்துகிட்டது உன் அன்பையும், மரியாதையையும் காட்டுது'' என உருகினார் துர்கா ஸ்டாலின். ஞாற்றுக்கிழமை இறுதி மரியாதை முடிந்தபின், சென்னைக் கிளம்பிய அன்பில் மகேஷ், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மீண்டும் அமெரிக்கா விமானம் பிடித்து பயணமானார்.  மாற்றங்கள், காயங்களை ஆற்றும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement