வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (10/05/2017)

கடைசி தொடர்பு:15:09 (10/05/2017)

லல்லு, கெஜ்ரிவாலை முடக்குகிறதா மோடியின் வியூகம்?!

மோடி

ன்னும் 2 ஆண்டுகளில் வர உள்ள 2019 லோக்சபா தேர்தலுக்கு பி.ஜே.பி-யினர் தயாராக வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் அமித்ஷா சில நாட்களுக்கு முன்பு கூறினார். பி.ஜே.பி வரும் லோக்சபா தேர்தலை நோக்கித்தான் கவனத்தைத் திருப்பி இருக்கிறது. வரும் லோக்சபா தேர்தலிலும் மோடிதான் பிரதமர் வேட்பாளாரக இருப்பார் என்கிறார்கள்.

பீகாரில் செல்லாக்காசு

நிதிஷ்குமார் காங்கிரஸ் கட்சியை இப்போதைக்கு பி.ஜே.பி எதிர்கட்சியாகவே மதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 2014 லோக்சபா தேர்தலில் விழுந்த காங்கிரஸ், கடைசியாக நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் கூட எழுந்து நிற்க முடியவில்லை.

பி.ஜே.பி-யின் பலம் இரண்டு மாநிலங்களில் குறைவாக இருக்கின்றன. அதில் ஒன்று பீகார் மற்றொன்று டெல்லி. பீகாரில் பி.ஜே.பி., மற்றும் மோடியின் பலம் அதிகரிக்க விடக்கூடாது என்பதில் நிதிஷ்குமாரும், லல்லுபிரசாத் யாதவும் உறுதியோடு இருக்கின்றனர். இதனால் பீகாரில் மட்டும் பி.ஜே.பி ஒரு செல்லாகாசாகத்தான் இருக்கிறது. இப்போது பீகாரை குறிவைத்துத்தான் மோடி பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார். லல்லுவுக்கு எதிரான வழக்குகளை வேகம் பெற செய்திருக்கிறார். இந்த வழக்குகளின் மீது நிதிஷ்குமார் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை பி.ஜே.பி உற்றுக் கவனிக்கிறது. பி.ஜே.பி எதிர்பார்த்தபடி நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இடையான நட்பில் விரிசல் விழுந்தால், எளிதாக பி.ஜே.பி-யை பீகாரில் நிலைநிறுத்தி விடலாம் என்றுதான் மோடி கருதுகிறார். அதைநோக்கித்தான் இப்போது பயணிக்கின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் வீழ்வாரா?

அடுத்ததாக டெல்லி மாநிலத்தின் ஆட்சியையும் பி.ஜே.பி-யால் பிடிக்க முடியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மீது லஞ்சப்புகார், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் மீது ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகள் வகிப்பதாகக் குற்றசாட்டு என ஆம் ஆத்மி கதி கலங்கி போயிருக்கிறது. இதனால் பலவீனம் அடைந்த ஆம் ஆத்மியால் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைப் பெற முடியவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்

உச்சகட்டமாக அரவிந்த் கெஜ்ரிவால் மீதே, ஆம் ஆத்மி அமைச்சர் கபில் மிஸ்ரா லஞ்சப் புகார் கூறியிருக்கிறார். இதனால், அவர் ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் பி.ஜே.பி-யின் தூண்டுதல் இருக்கிறது என்று டெல்லி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது மோடியா, லேடியா என்ற பிரசாரத்தைக் கையில் எடுத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா பிரதமர் ஆகவேண்டும் என்று, உள்ளூர ஆசை கொண்டிருந்தார். மூன்றாவது அணித் தலைவர்களின் ஆதரவும் அவருக்கு இருந்தது. ஆனால், இப்போது ஜெயலலிதா உயிரோடு இல்லை.

பி.ஜே.பி-யின் திட்டம்

2019- லோக்சபா தேர்தல் தவிர இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிற ஜனாதிபதி தேர்தலையும் பி.ஜே.பி முக்கியமான ஒன்றாகக் கருதுகிறது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கருதுகிறார். ஜனாதிபதி தேர்தலில் ஒன்று கூடி விட்டால், அந்தக் கூட்டணியை அடுத்த லோக்சபா தேர்தல் வரை கொண்டு சென்று விடலாம் என்று கருதுகிறார் நிதிஷ். ஆனால், நிதிஷ்குமாரின் எண்ணம் ஈடேறி விடக்கூடாது என்பதில்தான் பி.ஜே.பி-யின் காய்நகர்த்தல்கள் இருக்கின்றன.  
இப்போதைக்கு மோடிக்கு அடுத்து பிரதமர் வேட்பாளர்களாக முன் வைக்கப்படுவர்கள் நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால் இருவர்தான். இருவரின் இமேஜையும் காலி செய்து விட்டால், தாம்தான் மீண்டும் பிரதமர் என்று மோடி கருதிக்கொண்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்