வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (16/06/2017)

கடைசி தொடர்பு:20:48 (16/06/2017)

"கல்வி உரிமைச் சட்டத்தை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தியதா?’’ - கல்வியாளர்களின் கேள்வி

அமைச்சர் செங்கோட்டையன் - கல்வியாளர்கள்

ரசுப் பள்ளிகளில் நான்காயிரத்து 84 பணியிடங்கள் நிரப்படும்.தொலைதூர மலைகிராமங்களில் 30 புதிய பள்ளிகள் தொடங்கப்படும், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய கற்றல்வழி ,மற்றும் கணினி வழிக்கல்வி உள்ளிட்ட 37 புதிய அறிவிப்புகளைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.15-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சரின் அறிவிப்பு குறித்து கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? என்று பேசினோம்."புதிய அறிவிப்புகள் வெளியிடுவதைவிட ,கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக இந்த அரசு நடைமுறை படுத்தியுள்ளதா ?"எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இது குறித்துப் பேசிய கல்வியாளர் வசந்திதேவி, "பள்ளிக்கல்வித்துறை கொண்டு வரவுள்ள திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டது சரிதான். அமைப்பு ரீதியில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் இல்லையே! தொலைதூர மலைகிராமங்களில் 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க கூடியது. இதைத் தவிர மேலும் பல அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். புதிய திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வருகிறார்களா ? என்பதை அறிய வேண்டும். இருக்கிற குறைபாடுகளைக் களையாமல் புதிய புதிய அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டால் போதாது.

கல்வி உரிமைச்சட்டம் எங்கே ?

வசந்திதேவி நான்காயிரத்து  84 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு காலிப் பணியிடங்களுடன் அரசு பள்ளிகள் இயங்குகிறதா? என்ற கேள்வி எழுகிறது. நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்கள் தவிர இன்னும் அதிகக் காலிப் பணியிடங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இருக்கிற அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். 'கணினி வழி கற்றல்' மையம் மற்றும் புதிய பரிமாணத்தில் 'செயல்வழி கற்றல்' ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கணினி வழி கற்றல் முறை ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட திட்டம். கணினி கல்வியை வழங்குவதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற புகார் உள்ளது. அதனால் அதற்கான ஆசிரியர்களை நியமித்தாலே போதுமானது. அதேபோன்று செயல் வழிக்கற்றல் முறை ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட திட்டம். அந்தத் திட்டம் குறித்த ஒரு விரிவான அறிக்கையை நான் தி.மு.க  ஆட்சியிலிருந்தபோது தயாரித்துக் கொடுத்து இருந்தேன். ஆனால், அந்தத் திட்டத்தைச் சரியான முறையில் நடைமுறைபடுத்தவில்லை. மீண்டும் அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கான மிகச் சிறப்பான திட்டம். அதை முழுமையாகத் தரமுடன் செயல்படுத்த வேண்டும். பெரும்பாலான பள்ளிகள் தரமுடன் இல்லை என்பதும் உண்மை. குடிநீர்த் தேவை ,கழிவறை வசதிகள் இல்லை என்ற மிகப்பெரிய குறைபாடு உள்ளது. அதையெல்லாம் சரி செய்யாமல் இதுபோன்று புதிய அறிவிப்புகள் வெளியிடுவதன்முலம் எல்லாம் சரியாகிவிடாது.

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்தினாலே பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளைக் களைய முடியும். பிரின்ஸ்கஜேந்திரபாபு கல்வியாளர்ஆனால், இந்த அரசு அதை முழுமையாக நடைமுறைபடுத்தியுள்ளதா ? யார் வேண்டும் என்றாலும் பள்ளிகளைத் தொடங்குகிறார்கள். எந்த ஒரு விதிமுறையோ அல்லது தடுப்பு நடவடிக்கையோ இல்லாமல் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளது.இங்கு கல்வி உரிமைச்சட்டத்தில் உள்ள 25 சதவீத இடஒதுக்கீட்டைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களே தவிர, மற்றவற்றைப் பற்றி பேசுவதில்லை. அந்தச் சட்டத்தில், ஒவ்வொரு பள்ளியும் எப்படி இருக்கவேண்டும் என்ற விதிமுறை மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த விதிமுறைகளைத் தனியார் பள்ளிகளிலும் பின்பற்றுவது இல்லை. அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றுவதில்லை. அந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறை மேம்படும். அதனால் கல்வி உரிமைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதன் வாயிலாகவே குறைபாடுகளைச் சரிபடுத்த முடியும் என்பதைப் பதவியில் இருப்பவர்கள் உணரவேண்டும். அறிவித்த அறிவிப்புகள் வரவேற்க தகுந்தது என்றாலும், இவற்றை எல்லாம் முன்கூட்டியே நடைமுறைப் படுத்தியிருக்கவேண்டும். இன்னும் மாற்றி அமைக்க வேண்டியது நிறையவுள்ளது"என்றார். 

பள்ளிக்கல்வித்துறையின் சீக்கலை இது தீர்க்காது

இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசிய போது, அவரும் இதே கருத்தை முன்வைக்கிறார்..

அனந்தகிருஷ்ணன் கல்வியாளர் "பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புகள் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காட்டுகிறது. கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன.அதை  முழுமையாக நடைமுறைபடுத்தாதன் விளைவாகக் கல்வித்துறை பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கல்வி உரிமைச்சட்டத்தை எந்தத் தனியார் பள்ளிகளும் பின்பற்றுவதில்லை. மேலும் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். ஆசிரியர்களுக்குக் கற்றல் கற்பித்தல் தவிர வேறு எந்த வேலைகளையும் கொடுக்கக் கூடாது என்ற அறிவிப்பை அமைச்சர் அறிவித்திருக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்கள் இல்லாமல் மற்ற பணியிடங்களை நிரப்புவது தொடர்பாகப் பேசியிருக்கவேண்டும். அதைப்பற்றி பேசவே இல்லை. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள சிக்கல் அப்படியே நீடிக்கிறது. கொள்கை குறிப்பில் பள்ளிகளில் யோகா பயிற்சி கொடுக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.யோகாவைக் கட்டாயமாக்க கூடாது. மாணவர்கள் யோகா கற்க வேண்டும் என்பது அவசியமில்லாத ஒன்று. இவையெல்லாம் வெற்று அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறைபடுத்துவதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது" என்றார்.

இது தொடர்பாக பேசிய கல்வியாளர் அனந்த கிருஷ்ணன், "பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில் சிலவற்றை மட்டும் வரவேற்கிறேன். வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறைபடுத்தினால் நல்லது. அதனால் அறிவிப்பு என்று பெருமிதம் கொள்வதைவிட, அதை நடைமுறைபடுத்தட்டும் அதன் பிறகு மகிழ்ச்சி கொள்வோம் "என்றார் சுருக்கமாக.

அறிவிப்பதில் காட்டும் பெருமிதம் அதை நடைமுறைபடுத்தி வெற்றி காண்பதில்தான் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் சரி!