வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (30/06/2017)

கடைசி தொடர்பு:18:48 (30/06/2017)

"தம்பிதுரைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது..?" கொதித்த மைத்ரேயன்

சசிகலா

.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை."என்று தம்பிதுரை அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.அவருடைய இந்தக் கருத்து ஓ .பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களைக் கொதிக்கச் செய்துள்ளது. அது மட்டுமன்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. 

 தம்பிதுரை தம்பிதுரையின் கருத்துக் குறித்துப் ஓ.பி.எஸ் அணியிலுள்ள மதுசூதனனிடம் பேசியபோது, "1984 -ல் தான் தம்பிதுரை அரசியலுக்கு வருகிறார். அப்போது எங்கள் கட்சியில் உள்ள எந்த விதிமுறைகளும்,கட்டுப்பாடுகளும் பற்றி அவருக்குத் தெரியாது. நானும் எஸ்.ஆர்.ராதாவும் சேர்ந்துதான் எம்.எல் சீட் பெறுவதற்கான மனுவைத் தம்பிதுரைக்காகக் கொடுத்தோம். தம்பிதுரையின் அதிர்ஷ்டம் துணை சபாநாயகர் பதவிக்கு வந்துவிட்டார்.முதலில் தம்பிதுரையே அ.தி.முக.வின் உறுப்பினர் இல்லை. அப்படி இருக்கும்போது தம்பிதுரையைப்பற்றி பேச எதுவும் இல்லை. அம்மாவுக்கு உதவி செய்வதற்காக வந்தவர் சசிகலா. அம்மா உயிருடன் இருந்தபோது சசிகலாவுக்கு எந்த பதவியும் தரவில்லை.அதனால் ஐந்தாண்டுகள் முடியாமல் சசிகாலவைப் பொதுச் செயலாளராக நியமித்ததே
மதுசூதனன் தவறு.."என்றார்

இது குறித்துப்பேசிய மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், ''தம்பிதுரை குறித்து கருத்துச் சொல்ல எதுவுமில்லை. ரோட்டில் நடப்பவர்களுக்கு எல்லாம் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.முதலில் தம்பிதுரைக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதைச் சொல்லச் சொல்லுங்கள். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சசிகலா குறித்து கருத்துச் சொல்லியிருந்தால் அதற்கு நான் பதில்சொல்லியிருப்பேன். எனவே நான் தம்பிதுரையின்  பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை "என்றார்

மைத்ரேயன் இது நம்மிடம் பேசிய இளம் பெண்கள் பாசறையைச் சார்ந்த ஓ.பி.எஸ் அணி தினேஷ், "அந்தக் குடும்பத்தால் (சசிகலா )தான் எங்க கட்சிக்கே கெட்டப்பெயர். அவங்க பேரை சொன்னாலே மக்கள் திட்டுறத நீங்களே பாக்க முடியும். அது அவங்களுக்கும் தெரியும். அதனாலதான் தினகரன், ஆர்.கே. நகர்ல போட்டியிட்டப்போ கூட சசிகலா படத்தை வைக்காம பிரசாரம் செஞ்சாரு. இப்படி இருக்க, சசிகலாவை நீக்க அதிகாரமில்லைன்னு சொல்றது, அசல் அ .தி.மு.ககாரனை கடுப்பாக்குற விஷயமே. உண்மையான தொண்டர்கள் எல்லாம், அண்ணன் ஓ.பி.எஸ் பக்கம் இருக்காங்க. முதல்வரோட சொந்த மாவட்டம் இது. இங்கயே அவருக்குச் செல்வாக்கு இல்லை. அண்ணன் ஓ.பி.எஸ்ஸுக்கு வர்ற கூட்டம் கூட அவருக்கு வர்றதில்லை. உண்மையான அ .தி.மு.க நாங்களே" என்றார்.

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் முன்னாள் எம்.பி  செம்மலை, அர்ஜுனன், முன்னாள் மந்திரி முனுசாமி, விஜயலட்சுமி தினேஷ்பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.கே செல்வராஜ், ரவிச்சந்திரன், வெங்கடாசலம் எனப் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் வலம் வருக்கின்றனர் என்கின்றனர் ஓ.பி.எஸ் அணியினர்.

அதன் மற்றொரு தீவிர விசுவாசியான இளைஞர் கிருஷ்ணகுமார், " சில நாள்கள் முன் ஏற்காடு மலர் கண்காட்சி நடந்தது. அதற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பத்து மீட்டருக்கு ஒரு போலீஸ் நிறுத்தப்பட்டு பந்தோபஸ்து கொடுக்கப்பட்டது. அம்மா ஜெயலலிதா முதல்வரா இருந்தபோது கூட இப்படி இல்லை. ஆனா எடப்பாடி பழனிசாமி ரொம்பவே ஆடம்பரமா தன்னை காட்டிக்கிறாரு. அண்ணன் ஓ.பி.எஸ் இங்க ஊழியர்கள் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார். அதற்கெல்லாம் நல்ல கூட்டம் வந்தது. தன்னுடைய சொந்த மாவட்டத்திலேயே அண்ணன்  ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்குச் சேருவதை முதல்வர்  கிருஷ்ணகுமார்பழனிசாமியால சகிச்சுக்க முடியல. அதனால தான் செயற்கையா செல்வாக்கு இருப்பதா காட்டிக்க ஏதேதோ செய்றாரு. இந்தநிலையில் அவரு, தம்பிதுரை எல்லாமே நாடகம் ஆடுவதாகத்தான் நாங்க பாக்குறோம். அதனாலதான் முன்ன பேச்சுவார்த்தை அது இதுன்னு சொன்னவங்க, சசிகலாவைக் கடைசி வரை நீக்கவேயில்லை. இப்போ அவங்கள நீக்குற அதிகாரம் இல்லைன்னு தம்பிதுரை சொல்றாரு. சசிகலாவை உண்மையான அ .தி.மு.க தொண்டன் ஏத்துக்கவே மாட்டான். அம்மா ஜெயலலிதாவுக்குத் துரோகம் செஞ்சவங்க சசிகலா. அவங்க உண்மையானவங்களா இருந்தா, மருத்துவமனையில நடந்ததை ஆதாரமா நிரூபிக்கட்டுமே! அந்தப் பக்கம் பதவியில் இருக்குறவங்கதான் இருக்காங்க. இங்க அண்ணன் ஓ.பி.எஸ் கூட 90 சதவீத தொண்டர்கள் நிக்கிறோம். அவரோட தர்மயுத்தம் வெல்லும்." என்றார் ஆக்ரோஷமாக. 

இந்தநிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, " அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு தேர்தல் ஆணையத்தில் வெற்றிடமாகவே உள்ளது.அதிமுக அம்மா அணியில் இரட்டை நிலை செயல்பாடே நிலவி வருகிறது. அ .தி.மு.க வில் தற்போது மூணு அணி தெரிஞ்சாலும் தொண்டர்கள் ஓ.பி.எஸ் தலைமையை மட்டுமே ஏத்துக்கிட்டு இருக்காங்க. " என்று தெரிவித்துள்ளார். 


டிரெண்டிங் @ விகடன்