நொச்சிக்குப்பத்தில்  536 அடுக்குமாடி குடியிருப்புகள்.. ஜெ வாக்கைக் காப்பாற்றிய பழனிசாமி!

சென்னையில் நொச்சிக்குப்பம் திட்டப் பகுதியில் 48 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 536 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். 

nochikuppam
 

கடந்த 1972-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் நொச்சிக்குப்பம் பகுதியில் 534 குடியிருப்புகள் கட்டப்பட்டது. அவை மிகவும் சேதமடைந்துவிட்டதால், அவற்றை மீண்டும் கட்டித் தருமாறு அப்பகுதியில் மக்கள் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, நொச்சிக்குப்பம் திட்டப் பகுதியில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், ஜெயலலிதா அறிவித்தபடி நொச்சிக்குப்பம் 536 குடியிருப்புகள் புதிதாகக் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் 397 சதுர அடி கட்டட பரப்பளவுடன், பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!