Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தமிழகத்தை ஜூலையிலும் அதி வெப்பமாக வைத்திருக்கும் காரணிகள் இவைதான்...!

வெப்பம்

மிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் சில முறை மட்டும் மழை தலை காட்டியது. கோவை, செங்கோட்டை, தென்காசி,, நாகர்கோவில் உள்ளிட்ட கேரள மாநில எல்லையில் உள்ள சில நகரங்களில் ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வழக்கத்தை விட அதிக அளவு வெப்பம் பதிவாகி வருகிறது.

காற்றில் ஈரம் இல்லை

வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்ன என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் கேட்டோம்.
"தென் மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்தப் பருவகாலத்தில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில்தான் அதிக அளவு மழை பெய்யும். ஆனால், இந்த முறை இந்த இரண்டு மாநிலங்களிலும் வழக்கத்தை விட குறைவாகத்தான் பருவமழை பெய்திருக்கிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனினும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஆங்காங்கே  மழை பெய்திருக்கிறது. இதே போன்ற வெப்பம் இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும். இதற்கிடையே ஜூலை மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு வெப்பம் பதிவானதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த தகவல்கள் உண்மை அல்ல. அது போன்ற தகவலை இந்திய வானிலை மையமோ அல்லது சென்னை வானிலை மையமோ வெளியிடவில்லை"என்றார்.

மழை அளவு

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் கடந்த 26-ம் தேதி வரை 72.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 32 சதவிகிதம் குறைவாகும். தமிழகத்திலேயே அதிகமாக சிவகங்கை மாவட்டத்தில் 192.6 மி. மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 87 சதவிகிதம் அதிகமாகும். கோவைமாவட்டத்தில்  122.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 66 சதவிகிதம் அதிகமாகும். தமிழகத்திலேயே மிகக் குறைவாக தூத்துக்குடி மாவட்டத்தில் 3.1 மி.மீ மழைதான் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 84 சதவிகிதம் மழை குறைவாகப் பெய்திருக்கிறது.  விருதுநகர் மாவட்டத்தில் 10.2 சதவிகிதம் மழை மட்டும்தான் பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 81 சதவிகிதம் குறைவாகும்.

இன்னும் நம்பிக்கை

தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் பெரும் மழைக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லை. இதனால் 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்கள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வறட்சி தாண்டவமாடுகிறது. தென்மேற்கு பருவமழை என்பது செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது. எனவே, இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேல் வானிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, தமிழகத்தில் போதுமான அளவு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி தென்மேற்கு பருவமழை குறைவாகப் பெய்தாலும் கூட அடுத்து வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மீண்டும் ஒரு பெரும் மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement