Published:Updated:

கோவை அருகே திருடன் கொலை - சடலத்தை ஆற்றில் வீசிவிட்டுத் தப்பிக்க முயன்ற 10 பேர் கைது!

கொலை
News
கொலை

கோவையில், தோட்டத்துக்குத் திருடவந்த வட மாநில நபரைத் தாக்கி, கொலைசெய்த வழக்கில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோவை ஆலந்துறை அருகேயுள்ள நொய்யல் ஆற்றில் ஓர் ஆண் சடலம் மிதந்தது. ஆலந்துறை போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரித்தபோது, அந்த மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. முக்கியமாக, இறந்தவரின் தலைப் பகுதியில் தொடங்கி பல இடங்களில் காயம் இருந்ததால்,

கோவை
கோவை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`சந்தேக மரணம்’ என வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

உயிரிழந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு அவர், அந்தப் பகுதியிலுள்ள தோட்டத்துக்குத் திருடச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த தோட்டத்தில் இருந்தவர்வர்கள், அவரை மரத்தில் கட்டிவைத்துத் தாக்கியுள்ளனர்.

திருட்டு
திருட்டு
மாதிரிப் படம்

கட்டையால் அந்த நபரின் தலையில் தாக்க, பலத்த காயமடைந்த அவர் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக, விஸ்வநாதன், காளியப்பன், சம்பத்குமார், துரைசாமி, கார்த்திக், கணேசன், ஜெகநாதன், பொன்னுசாமி, ஜோதிராஜ், சரவணக்குமார் ஆகிய 10 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

மேலும், இந்த வழக்கில் அலட்சியமாக இருந்ததற்காக, சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ், எஸ்.பி.சி.ஐ.டி கனகராஜ் ஆகிய இரண்டு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.