Published:Updated:

டெல்லி: `30 ஆண்டுகளில் 100 திருட்டுகள்’ - நாடு முழுவதும் திருட்டில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

பிடிபட்ட பொருட்கள்

டெல்லியில் தங்கியிருந்து, நாடு முழுவதும் சென்று திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

டெல்லி: `30 ஆண்டுகளில் 100 திருட்டுகள்’ - நாடு முழுவதும் திருட்டில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

டெல்லியில் தங்கியிருந்து, நாடு முழுவதும் சென்று திருட்டில் ஈடுபட்டுவந்த கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
பிடிபட்ட பொருட்கள்

மும்பை மலாடு பகுதியிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்திலிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். திருடர்கள் வேலையை முடித்துவிட்டு ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிச் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் இந்தத் திருட்டு தொடர்பாக போலீஸார் 80-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். இதில், திருடர்கள் குர்லா குடிசைப் பகுதியிலுள்ள ஒரு சிறிய ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. ஹோட்டலில் விசாரித்தபோது, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பேர் தங்கியிருந்ததாகவும், இரண்டு பேர் ஏற்கெனவே சென்றுவிட்டதாகவும், எஞ்சிய மூன்று பேர் சில மணி நேரத்துக்கு முன்புதான் அறையை காலிசெய்துவிட்டுச் சென்றதாகவும் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

டெல்லி: `30 ஆண்டுகளில் 100 திருட்டுகள்’ - நாடு முழுவதும் திருட்டில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

அவர்கள் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றிருக்க வேண்டும் என்பதைக் கண்காணிப்பு கேமரா மூலம் உறுதிசெய்த போலீஸார், நேராக அங்கு சென்றனர். மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லிக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் பட்டியலை ஆய்வுசெய்தபோது, அவர்கள் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லிக்குச் செல்வது தெரியவந்தது. உடனே ராஜதானி ரயில் எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை ஆய்வுசெய்து ரத்லம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயிலில் அதிரடி ரெய்டு நடத்தி, மூன்று பேரைக் கைதுசெய்தனர். அவர்கள் உடனடியாக மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள திருட்டுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களின் பெயர் நிஜார் ஷேக், அப்ஷர், அன்வர் என்று தெரியவந்தது. இதில் நிஜாம் ஷேக்தான் இந்தக் கூட்டத்துக்குத் தலைவனாகச் செயல்பட்டிருக்கிறான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கும்பல் குர்லாவிலுள்ள ஹோட்டலில் ஒரு வாரம் தங்கியிருந்து ஏழு வீடுகளில் திருடியிருக்கிறது. குடிசைப் பகுதியிலுள்ள சிறிய ஹோட்டல்களில் தங்குவதன் மூலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால், இவ்வாறு தேர்வுசெய்து தங்கியிருந்தனர்.

இது குறித்து மலாடு சீனியர் இன்ஸ்பெக்டர் ரவீந்திரா கூறுகையில், ``திருடர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டெல்லியில் தங்கியிருந்து அந்தப் பகுதியில் திருடிவந்தனர். ஆனால், டெல்லி போலீஸாருக்கு அவர்களை நன்றாகத் தெரிந்துவிட்டதால் மேற்கொண்டு அங்கு திருடுவது சரியாக இருக்காது என்று கருதி டெல்லியில் தங்கியிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்குச் சென்று திருட ஆரம்பித்தனர். இதுவரை 100 திருட்டுகளை முடித்திருக்கின்றனர். அவர்கள் 30 ஆண்டுகளாக இந்தத் திருட்டில் ஈடுபட்டுவருகின்றனர். தப்பிச் சென்ற இரண்டு பேர் விமானத்தில் டெல்லிக்குச் சென்றிருக்கின்றனர்.

கைது
கைது
சித்திரிப்புப் படம்

எந்த இடத்துக்கு அவர்கள் சென்றாலும் ஒரு வாரம் தங்கியிருந்து திருடுவது வழக்கம். குறிப்பாக அதிகபட்சம் நான்கு மாடிகளுக்குக் குறைவான கட்டடங்களில் திருடுவதுதான் அவர்களது வழக்கம். இந்தக் கட்டடங்களில் செக்யூரிட்டி கார்டு இருக்க மாட்டார்கள். பூட்டைத் திறப்பதில் இந்தக் கும்பல் மிகவும் கைதேர்ந்தது. திருட்டில் ஈடுபடும்போது பக்கத்தில் வீட்டையும் பூட்டுப் போட்டுவிடுவது வழக்கம். இதனால், பக்கத்து வீட்டுக்காரர்களால் அவர்களைப் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்துவருகிறோம்” என்று தெரிவித்தார்.