காங்கிரஸ் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது இல்லை என்று நிரூபித்து வருகிறது பி.ஜே.பி அரசு. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடும் விஷயத்தில், கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த மோடி அரசு, உச்ச நீதிமன்றம் சாட்டையை சொடுக்கியதும், உடனடியாக பட்டியலை ஒப்படைத்தது.

கறுப்புப்பணம் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பாக கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, எட்டு பெயர்களை நீதிமன்றத்திடம் அளித்தார். அதில் மூன்று பெயர்கள் மட்டுமே வெளியே கசிந்தது. முழு பட்டியலையும் வெளியிட முடியாது என்று நீதிமன்றத்தில் ரோத்தகி தெரிவித்தார். இதனால், தலைமை நீதிபதி தத்து கடும் கோபம் அடைந்தார்.

மீண்டும் இந்த வழக்கு 28-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி கடும் உத்தரவுகளைப் பிறப்பித்தார். ''வெளிநாட்டில் கறுப்புப்பணம் வைத்துள்ளவர்களை நீங்கள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் வேண்டும் என்று கேட்கிறீர்கள். அதில் ஒரு வார்த்தையைக்கூட மாற்ற முடியாது. கறுப்புப்பண விவகாரம் குறித்து நீங்கள் விசாரணை நடத்தினால், என் வாழ்நாள் முடிவதற்குள் அதை முடிக்க மாட்டீர்கள். எனவே, உங்களிடம் உள்ள தகவல்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திடம் கொடுத்துவிடுங்கள். உரிய விசாரணைக்கு நாங்கள் உத்தரவிடுவோம்'' என்று கடுமையான தொனியில் தலைமை நீதிபதி தத்து கூறினார்.

''வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவோம்'' என்பது, கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், மோடியின் முக்கிய

முழக்கமாக இருந்தது. ''கறுப்புப்பணத்தை மீட்டு வந்தால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் கிடைக்கும்'' என்ற அவரது கவர்ச்சிப் பேச்சு வாக்காளர்களை வசீகரித்தது. மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு, கறுப்புப்பணத்தை மீட்பது தொடர்பானது. 2011-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில், சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், ''100 நாட்களுக்குள் கறுப்புப்பணத்தை மீட்போம்'' என்ற பி.ஜே.பி தலைவர்களின் தேர்தல் வாக்குறுதி, 150 நாட்களைக் கடக்கும் நிலையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பெயர்களை வெளியிட 'இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்’ தங்களுக்குத் தடையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்தது. இதனால், பி.ஜே.பி அரசு இரட்டை வேடம் போடுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. ''வெளிநாட்டில் கறுப்புப்பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படும்'' என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். உடனே ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு வந்தனர். ''ப்ளாக் மணியை வைத்து எங்களை ப்ளாக்மெயில் பண்ண வேண்டாம்'' என்று ப.சிதம்பரம் பதில் கொடுத்தார்.

கறுப்புப்பணத்தை மீட்டுவர ஆவன செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடுத்தவர் ராம் ஜெத்மலானி. 2009 மார்ச் 15-ம் தேதி ஜெத்மலானியால் தொடரப்பட்ட வழக்குதான், இந்த விவகாரத்தில் மிகப் பெரிய அசைவை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும், முந்தைய ஐ.மு கூட்டணி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அதனால், உச்ச நீதிமன்றத்திடம் அது பலமுறை குட்டு வாங்கியது. அதேபோல இப்போது மோடி அரசும் குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் அருண் ஜெட்லிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை ராம் ஜெத்மலானி எழுதினார். அதில், ''மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவராக நீங்களும் மக்களவை எதிர்க் கட்சி தலைவராக சுஷ்மா ஸ்வராஜும் இருந்தீர்கள். மற்றவர்களைப்போல நீங்களும், உண்மை வெளியே வந்துவிடக் கூடாது என்று செயல்பட்டதாக சந்தேகப்படுகிறேன். கறுப்புப்பண விவகாரத்தில், முன்னுக்குப்பின் முரணாக நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகள், மோடி அரசின் இமேஜை பாதிப்பதாகவும் மிகப் பெரிய கிரிமினல்கள் தப்பிக்க உதவுவதாகவும் இருக்கிறது'' என்று ராம் ஜெத்மலானி கூறியிருந்தார்.

அனைத்துப் பெயர்களையும் வெளியிட வெளிநாட்டு ஒப்பந்தம் தடையாக இருப்பதாக, காங்கிரஸ் அரசைப் போலவே மோடி அரசும் கூறிவரும் நிலையில், ''ஒட்டுமொத்த பட்டியலையும் வெளியிட எந்தவொரு தடையும் இல்லை. தே.ஜ கூட்டணி அரசு ஏன் சில பெயர்களை மட்டும் வெளியிடுகிறது என்று தெரியவில்லை?'' என சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்தது மோடி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

கடந்த 27-ம் தேதி, வெறும் 8 பெயர்களை மட்டும் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு அளித்தது. ஆனால், 'உங்களிடம் உள்ள ஒட்டுமொத்த பெயர்களையும் தாக்கல் செய்யுங்கள்’ என்று தலைமை நீதிபதி கண்டிப்புடன் கூறியதால், புதன் கிழமை அன்று 627 பெயர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்தது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கறுப்புப்பணம் என்பது, வரி ஏய்ப்பு மூலமாக மட்டுமே குவிக்கப்பட்டவை அல்ல. குறைந்தபட்ச கூலி, வேலை நேரம் தொடர்பான தொழிலாளர் நலச்சட்டங்களைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி, குவிக்கப்பட்ட பணமும் இதில் உண்டு. அரசியல் உறுதியும் நேர்மையும் கொண்ட அரசால் மட்டுமே கறுப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவர முடியும். அந்த அரசியல் உறுதியும் நேர்மையும் மன்மோகன் சிங் அரசிடம் இல்லாமல் போனது. மோடி அரசின் அணுகுமுறையும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. கறுப்புப்பணத்தை மீட்போம் என்று தேர்தல் பிரசாரத்தில் மேடைதோறும் முழங்கிய பிரதமர் மோடியை செயல்பட வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்!

- ஆ.பழனியப்பன்

அந்த மூன்று பேர்!

உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கடந்த 27-ம் தேதி எட்டு பெயர்களை அளித்தது. அதில் மூன்று பெயர்கள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன.

பிரதீப் பர்மன், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர். இவர் என்.ஆர்.ஐ-யாக இருந்தபோது வெளிநாட்டு வங்கியில் கணக்குத் தொடங்கப்பட்டதாகவும் அது சட்டரீதியான அனுமதி பெற்றது என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராதா டிம்ப்லோ, கோவாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். டிம்ப்லோ என்டர்பிரைசஸ் மற்றும் டிம்ப்லோ பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர். கோவாவில் சட்டவிரோதமாக சுரங்கம் எடுத்ததாக உச்ச நீதிமன்றத்தின் மத்திய அதிகாரம் அளிக்கும் குழுவின் அறிக்கையில் இவரது பெயரும் உள்ளது. இவரது நிறுவனம், 2004-2005 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளில் பி.ஜே.பி-க்கு 1.8 கோடி ரூபாயும் காங்கிரஸுக்கு 65 லட்சம் ரூபாயும் நன்கொடை அளித்துள்ளது.

பங்கஜ் லோதியா, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர். தங்கம், வைரம், வெள்ளி வியாபாரம் செய்கிறார். ராஜ்கோட்டில் ஆபரண தொழிலுக்கான தங்கத்தையும் வைரத்தையும் பெருமளவில் சப்ளை செய்பவர். இவரது ஸ்ரீஜித் குழுமத்துக்கு அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், ராய்ப்பூர், இந்தூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் கிளைகள் உள்ளன. கடந்த ஆண்டு இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. ஆனால், பல விவரங்கள் வெளியே வரவில்லை.