''தென்காசி எம்.பி வசந்தி முருகேசன்கிட்ட உதவியாளராக இருந்தேன். அப்போ, அவங்க மகள் சுகன்யாவுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டுச்சு. இது எம்.பி-க்கு தெரிஞ்சு போச்சு. ரவுடிகளை வெச்சு என்னை மிரட்டுனாங்க. சுகன்யாவை அடிச்சு, அவனை மறந்துருன்னு சொல்லி கொடுமைப்படுத்துறாங்க. நம்மளை சேர்த்து வைக்க மாட்டாங்க... அதனால என்னை நீ மறந்துருன்னு சுகன்யா எனக்கு வாட்ஸ் அப்ல மெஸேஜ் அனுப்பினா. என் மேல பொய் கேஸ் போடப் போறதா போலீஸை வெச்சு மிரட்டுறாங்க'' - இப்படி முகமது சஃபி என்ற இளைஞர் பதற்றத்துடன் நம்மிடம் போனில் பேசினார்.

தென் மண்டல ஐ.ஜி-யான அபய்குமார் சிங்கிடம் அபயம் தேடிச் சென்ற முகமது சஃபியை சந்தித்தோம். ''தென்காசி எம்.பி வசந்தி முருகேசனால் என்னோட உயிருக்கு எப்ப வேணும்னாலும் ஆபத்து வரலாம். அதனாலதான் பாதுகாப்பு கேட்டு ஐ.ஜி ஆபீஸுக்கு வந்தேன். எங்க அப்பாவும் முன்னாள் எம்.பி முருகேசனும் நீண்டகால பழக்கம். முருகேசனோட மனைவி வசந்தி எம்.பி ஆனவுடனே அவரோட உதவியாளரா என்னை சேத்துக்கிட்டாங்க. கொடுத்த வேலைகளை சின்ஸியரா செஞ்சேன். அப்புறம், சென்னை ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல எம்.டி படிச்ச அவரோட மூணாவது மகள் சுகன்யாவுக்கும் ஹெல்ப் பண்ணச் சொன்னாங்க. அப்போ, சுகன்யாவுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டுச்சு. இந்த விஷயம் எம்.பி-க்குத் தெரிஞ்ச உடனே எங்க வீட்டுக்கு ரவுடிகளை அனுப்பி மிரட்டினாரு. சுகன்யாவையும் அடிச்சு

உதைச்சு என்னை மறக்கணும்னு கொடுமைப்படுத்துறாங்க. என் நண்பர்களோட டூவீலர்களைப் பிடுங்கி வச்சுக்கிட்டு, அவங்க மேல பொய் கேஸ் போடப்போறதா பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் மூலமா மிரட்டுறாங்க. சுகன்யாவோட எடுத்துக்கிட்ட போட்டோ, வாட்ஸ் அப் மெஸேஜ் எல்லாத்தையும் கொடுத்துருன்னு இன்ஸ்பெக்டர் மிரட்டுறாரு. 'தேவையில்லாம எம்.பி-யை எதுக்குப் பகைச்சுக்கிற. வா பேசிக்கலாம்’னு இன்ஸ்பெக்டர் பஞ்சாயத்து செய்றாரு. நானும் சுகன்யாவும் போயஸ் கார்டனுக்குப் போய் அம்மாகிட்ட முறையிடலாம்னு இருந்தோம். எங்க நேரம் சரியில்ல. இவங்களுக்குப் பயந்து ஊர்ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன். என்னோட அம்மா, அப்பா, தங்கையை ரவுடிகள் வீட்டுக்கு வந்து மிரட்டியிருக்காங்க. அதனால அவங்களும் எங்கேயோ போயிட்டாங்க. என்னையும் சுகன்யாவையும் நேர்ல அழைச்சு விசாரிக்கட்டும். அதுக்கு அப்புறம் அவங்க சொல்ற முடிவை ஏத்துக்கிறேன்'' என்றார்.

இந்த விவகாரம் பற்றி வசந்தி முருகேசன் எம்.பி-யிடம் கேட்டதற்கு, ''அந்தப் பையன் என்னிடம் நான்கு மாதங்களுக்கு முன்பு உதவியாளராகச் சேர்ந்தான். அவனோட நடவடிக்கை சரியில்லை என தெரியவந்ததால், இரண்டு மாதங்களுக்கு

முன்பே அவனை நீக்கிவிட்டேன். இப்போது யாருடைய தூண்டுதலின் பேரிலோ எனது குடும்பத்தை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறான்'' என முடித்துக்கொண்டார். எம்.பி-யின் கணவர் முருகேசன், ''அவன் ஒரு ஃபிராடு. அவனை வேலையில் இருந்து நீக்கிய ஆத்திரத்தில் இப்படி பொய் சொல்லிக்கிட்டு திரியறான். அவனை யாரும் மிரட்டவில்லை. கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே ஒழுங்கீனமாக இருந்துள்ளான். அதற்காக, கல்லூரி நிர்வாகம் அவனை வெளியேற்றியதுடன் பரீட்சை எழுதவும் அனுமதிக்கவில்லை. அப்போது என்னிடம் வந்து கதறி அழுதான். அவனுக்காகக் கல்லூரி நிர்வாகத்திடன் பேசி தேர்வு எழுத அனுமதி வாங்கிக் கொடுத்தேன். அவனை வேலையில் இருந்து தூக்கிவிட்டதால், எங்கள் குடும்பத்தைப் பற்றி தேவையில்லாத வதந்திகளைப் பரப்புறான். முகமது சஃபியுடன் பழகியது தெரிந்ததால்தான், என் பெண்ணைக் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாகக் சொல்வது பொய். என்னோட பொண்ணு பக்கத்துலதான் இருக்கா. அவகிட்டயே பேசுங்க...'' என்று போனை சுகன்யாவிடம் கொடுத்தார். ''அம்மாவோட உதவியாளர் என்ற முறையில்தான் எனக்கு அந்தப் பையனைத் தெரியும். அந்தப் பையன் சொல்றது எதுவும் உண்மை இல்லை. நான் அவருக்கு மெசேஜ் அனுப்பவோ, லவ் பண்ணவோ இல்லை. எங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதைத்தான் நான் கேட்பேன்!'' என்று சொன்னார்.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ''அந்தப் பையன் விவகாரம் பற்றி எம்.பி-யின் தரப்பில் வாய்மொழியாகத் தெரிவித்தனர். ஆகவே அவனை விசாரிக்கக் கூப்பிட்டேன். அவன் வரமறுத்துவிட்டான். உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் எது சரின்னு படுதோ அதை செய்யுங்கள் என்று எம்.பி-யிடம் சொல்லிவிட்டேன். எங்களிடம் புகார் வராமல், நாங்கள் யாரையும் விசாரணைக்கு அழைத்து வரவோ, மிரட்டவோ இல்லை'' என்றார் திட்டவட்டமாக.

பையன் சொல்வது நிஜமா, பொண்ணு சொல்வது நிஜமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்!

- ஆண்டனிராஜ், செ.சல்மான்

படங்கள்: எல்.ராஜேந்திரன், பா.காளிமுத்து