Published:Updated:

"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை!”

"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை!”

துரை பொட்டு சுரேஷ், புதுச்சேரி காமராஜ் ஆகியோர் கொலைசெய்யப்பட்ட அதே பாணியில், வெட்டி சாய்க்கப்பட்டிருக்கிறார் வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.ஏ.மூர்த்தி!

 கடந்த 2-ம் தேதி நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரே கூலிப்படையினரால் மூர்த்தி துள்ளத் துடிக்க வெட்டி சாய்க்கப்பட... அந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியிருக்கிறார் பா.ம.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அகோரம். அவரைக் கட்சியைவிட்டு நீக்கி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை!”

மூர்த்தி கொலை செய்யப்பட்டதால் பா.ம.க-வினர் சாலை மறியலில் ஈடுபட செம்பனார்கோவில் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட எஸ்.பி-க்கள் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். வன்னியர் சங்கத் தலைவர் குரு வந்தால்தான் மூர்த்தியின் உடலை வாங்குவோம் என்று கூறவே, அன்புமணி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போகாமல் மயிலாடுதுறைக்கு வந்தார் குரு. இதற்கிடையில்தான் அகோரம் சரண்டர் படலமும் அரங்கேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ம.க நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள், ''அன்புமணியின் ஆதரவாளர் என்பதால், நாகை மாவட்ட பா.ம.க-வில் ஒரு தனிப்பெரும் சக்தியாக அகோரம் வலம் வந்தார். அன்புமணி தன் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தபோது, அவரது கண் எதிரே வன்னியர் சங்கத்தினரால் அகோரம் தாக்கப்பட்டார். அதை மூர்த்தி கண்டுகொள்ளவில்லை.  மூர்த்திக்கும், அகோரத்துக்கும் இடையே கட்சி ரீதியில் நிறைய மோதலும் முரண்பாடும் இருந்துள்ளன. பா.ம.க-வில் பதவிக்கு வரவேண்டும் என்று குரு மூலம் மூர்த்தி காய் நகர்த்தியுள்ளார். அது அகோரத்துக்குப் பிடிக்கவில்லை. கட்சிப் பொறுப்பிலிருந்து அகோரத்தை எடுக்கப் போகிறார்கள் என்றும் பேச்சு அடிப்பட்டது.

"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை!”

இதனால், தன்னைப் பற்றி கட்சித் தலைமைக்குப் போட்டுக்கொடுத்தது மூர்த்திதான் என்று நினைத்த அகோரம் தரப்பு மூர்த்தியையும் அவரது ஆதரவாளரான வி.ஜி.கே.மணியையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று கூலிப்படையை நாடியிருக்கிறது. தன் ஆதரவாளர்களுடன் வி.ஜி.கே.மணி உள்ளூர் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றதைப் பார்த்த கூலிப்படையினர் பின்வாங்கிவிட்டனர். அதே திருமண நிகழ்ச்சிக்குத் தனியாகச் சென்ற மூர்த்தியைப் போட்டுத் தள்ளிவிட்டனர்'' என்கிறார்கள்.  

மூர்த்தியை கொலை செய்த கூலிப்படையினர் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் திருவெண்காடு அசோக்குமார். அவர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ''தன்னிடம் கார் இல்லை, 'தர்மபுரியில் சின்ன அய்யா மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும்’ என்று என¢னுடைய காரை அகோரம் கேட்டார்.

கொலை நடந்த அன்று என்னைத் தொடர்புகொண்ட அகோரம், உன்னுடைய காரை என் டிரைவர் எடுத்துக்கொண்டு போய் மூர்த்தியைக் கொலை செய்துவிட்டான். எனக்கும் அந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னுடைய காருக்கு நான் பொறுப்பு என்று மட்டும் சொல்லிவிட்டு போனை துண்டித்தார்'' என்று சொல்லியிருக்கிறார்.

"காருக்கு நான் பொறுப்பு... ஆனால் கொலை செய்யலை!”

டிரைவரைக் கைது செய்தால்தான் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்ற காவல் துறையினர், ''புதுச்சேரியைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகிதான் கூலிப்படையைத் தயார் செய்துள்ளார். கூலிப்படையின் தலைவனாகச் செயல்ட்டவன் செஞ்சியைச் சேர்ந்தவன் என்பதால், அவர்கள் பயன்படுத்திய காரை செஞ்சியிலேயே நிறுத்திவிட்டு தப்பத்திருக்கலாம்'' என்கின்றனர்.

வழக்கை விசாரிக்கும் நாகை மாவட்ட ஏ.எஸ்.பி-யான சந்தோஷ்பிதாரியிடம் பேசினோம். ''குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். இன்னும் சிலரைப் பிடிக்க வேண்டியுள்ளது. அவர்களையும் கைது செய்தால்தான் கொலைக்கான முழுவிவரமும் தெரியவரும்'' என்றார்.    

இந்தக் கொலைச் சம்பவத்தை இரண்டு தனி நபரின் மோதல் என்கிறது பா.ம.க. கோஷ்டிபூசலைக் கண்டிக்க வேண்டியது தலைமையின் கடமை.

- ஏ.ராம்

 படங்கள்: கே.குணசீலன்