Published:Updated:

`ரூ.12,90,000 மதிப்பிலான செல்போன்கள்!’ - மீட்டுக்கொடுத்த புதுக்கோட்டை தனிப்படை

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காணாமல் போன 101 செல்போன்கள் மீட்கப்பட்டன.

கைபற்றப்பட்ட செல்போன்கள்!
கைபற்றப்பட்ட செல்போன்கள்! ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், கடந்த 8 மாதங்களில் காணாமல் போனதாக வந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், 101 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கைபற்றப்பட்ட செல்போன்கள்!
கைபற்றப்பட்ட செல்போன்கள்!
ஆர்.வெங்கடேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில், செல்போன்கள் காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான புகார்கள் காவல் நிலையங்களில் குவிந்தன. இதையடுத்து, மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில், கணினிவழி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில், தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

விசாரணையில், மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காணாமல்போன 101 செல்போன்கள் மீட்கப்பட்டன. இவை, செல்போன் ஐஎம்ஐ நம்பர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.12,90,000 ஆகும். மாவட்ட எஸ்பி செல்வராஜ், உரியவர்களை நேரடியாக வரவழைத்து, அவர்களிடம் உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு செல்போன்களை ஒப்படைத்தார். பின்னர், செல்போன்களை மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீஸாரைப் பாராட்டினார்.

கைபற்றப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் போலீஸார்!
கைபற்றப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் போலீஸார்!
ஆர்.வெங்கடேஷ்

இதுபற்றி போலீஸார் கூறும்போது, "செல்போன் ஐஎம்ஐ மூலம் செல்போன்கள் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை கைப்பற்றியுள்ளோம். மற்றவர்களிடமிருந்து திருட்டு செல்போன்கள் வாங்கியவர்களை எச்சரித்துள்ளோம். பலரும் தற்போது, விலை உயர்ந்த செல்போன்தான் வைத்திருக்கின்றனர். தங்கள் செல்போன் காணாமல்போனால், கட்டாயம் புகார் கொடுக்கலாம். செல்போனைப் போன்று இரு சக்கர வாகனத் திருட்டும் தற்போது அதிகரித்துவருகிறது. காணாமல்போன இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.