பள்ளி மாணவி ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், சிறார்களின் மீது பெற்றோர் எவ்வளவு அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக அடித்துச் சொல்கிறது.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் மச்சனூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி கிருத்திகா. சம்பவத்தன்று, தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அடுத்து நடக்கவிருந்த அந்தக் கொடூரத்தை அவர் உணர்ந்திருக்கவில்லை.

அடுத்த நாள் பள்ளிக்கு அருகிலிருந்த ஒரு புதர் பகுதியில் வாயில் துப்பட்டா சுற்றப்பட்டு, தலை, மார்பு பகுதியில் பீர் பாட்டிலால் குதறப்பட்டு, கைகள் இரண்டும் ரிப்பனால் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீஸ் விசாரணையில் கிருத்திகாவின் உறவுக்காரரான சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 10-ம் வகுப்பு படித்து வந்த சரவணன் தற்போது, சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சிறுவன் செய்த இந்தப் படுபாதகம் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள்?

இந்தக் கொலையில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகச் சொல்கிறார் 'தோழமை’ அமைப்பின் இயக்குநர் தேவநேயன். ''சரவணனும் கிருத்திகாவும் ஒன்றாகத்தான் பள்ளிக்குச் செல்வார்கள். இருவரும் நெருங்கிய உறவினர்கள். பழகிய சிறுமியை அப்படிச் செய்வதற்கான காரணம் என்ன? போலீஸ் கூற்றுப்படி 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கை, கால்களைக் கட்டி கற்பழிக்க முயற்சி செய்திருப்பதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை. இந்த வழக்கை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காக ஒருவரை மட்டுமே குற்றவாளி என காவல் துறை தெரிவிக்கிறது. இந்த விவகாரத்திலும் போலீஸார் விரிவான விசாரணை நடத்திட வேண்டும்'' என்றார் அவர்.

அரசு பள்ளிகளில் பாலியல் ரீதியான விழிப்பு உணர்வை ஏற்படுத்திவரும் மனநல மருத்துவர் அர்ஜுனன், ''முன்பு தமிழகத்தில் சிறார் பாலியல் குற்றங்கள் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இது பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதில் குழந்தைகளைக் குற்றம் சொல்லக் கூடாது. குடும்பம், கல்விக்கூடங்கள், சமூகச் சூழல், கருவிகள் மற்றும் அரசு சார்ந்த விஷயங்கள் இந்த ஐந்தும்தான் ஒரு பள்ளி மாணவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. இன்று பல குடும்பங்களில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது என்பதே அரிதாகிவிட்டது.

கல்விக்கூடங்களில், முக்கியமாக தொடக்கப் பள்ளிகளில் படிப்பு மட்டுமே போதிக்கப்படுகிறது. நல்ல கதைகள் சொல்லி மாணவர்களைப் பக்குவப்படுத்தும் ஆசிரியர்களை காண்பது மிக அரிதாக இருக்கிறது. அப்படி ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி அவர்களுக்குப் பிடித்த விஷயங்களில் வாய்ப்பு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். ஊடகங்களுக்கும் சமூகப் பொறுப்பிருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். சினிமா வன்முறை காட்சிகள்தான் அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதிகின்றன.

இணையதளத்தில் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் கெட்ட விஷயங்களால் சீரழிவதும் நடக்கிறது. செல்போன்களில் பரவும் ஆபாசங்களும் சிறுவர்களின் மனத்தில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன. திறமையை முறைப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டிய அரசு, போதையை ஊட்டி வளர்க்கின்றது. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே போதையால் ஈர்க்கப்பட்டு நிம்மதி இழந்து தவிக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகம்.

பெற்றோர்கள் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். கண்காணிப்பு என்ற போர்வையில் மேலும் ஒரு நெருக்கடியை சுமத்தக்கூடாது. அவர்களைப் பக்குவப்படுத்தி மேம்பட்டவர்களாக வளர்க்க வேண்டும். வாழ்வியல் முறைகளையும் பாரம்பர்யத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களை நெறிப்படுத்துவதே பெற்றோர்களின் முதற்கடமையாகும். ஊடகம் மற்றும் கலைத் துறையினர் அனைத்தையும் வியாபாரக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் தங்களுக்குள்ள சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டாலே நல்லது. ஆசிரியர், மாணவர், பெற்றோர் என மூவருக்கு இடையில் இருக்கக்கூடிய இடைவெளியைக் களைய வேண்டும். ஒவ்வோர் அரசு பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களைப்போல நல்ல சிந்தனைகளை மாணவர்களுக்கு விதைக்கக் கூடிய மனநல ஆலோசகர்களையும் நியமிக்க அரசு முன் வர வேண்டும்'' என்றார்.

சிறார்களைச் செம்மைப்படுத்துவது வருங்கால சமுதாயத்தைப் பாதுகாக்கிற நடவடிக்கையாகும்!

படங்கள்: ச.வெங்கடேசன்