விடை தெரியாத மர்மங்களில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கும் சேர்ந்துவிட்டது. 33 மாதங்களைக் கடந்தும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் ராமஜெயத்தின் மனைவி லதா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''இந்த வழக்கில் போலீஸார் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனர். ஆகையால், ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவுக்கு வருகின்ற 5-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் கூடிய பதிலை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன் பிறகே சி.பி.சி.ஐ.டி எஸ்.பி அன்பு புதிதாக ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த ஸ்பெஷல் டீம்தான் இப்போது புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

கொலை செய்யப்பட்டதற்கு முதல்நாள் இரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமஜெயம் வந்துள்ளார். ராமஜெயத்துக்கு நெருக்கமான திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் உடன்வந்ததாகவும் சொல்லப்பட்டது. ''இந்தப் பேராசிரியர் அ.தி.மு.கவின் முக்கியப் பொறுப்பாளர் மற்றும் மன்னார்குடி பிரமுகர் ஒருவருக்கு மிகுந்த நெருக்கமானவர். இவர் தனக்கு மிக நெருங்கிய காவல் துறை உயர் அதிகாரியின் நட்பால் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிவிட்டார்' என்று சொல்லப்படுகிறது. அந்தப் பேராசிரியரை தற்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ். ரயிலில் இரவு நீண்ட நேரம் அந்தப் பேராசிரியருடன் ராமஜெயம் பேசியபடி வந்திருக்கிறார். அதுபற்றிய விசாரணை தற்போது விரிய ஆரம்பித்துள்ளது. ராமஜெயம் வழக்கமாக வாக்கிங் போகும்போது அவருடன் இன்ஸ்பெக்டர் செல்வராஜும், கவுன்சிலர் கண்ணனும் செல்வது வழக்கம். ஆனால், அன்று அவர்கள் இருவரும் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.

''ராமஜெயம் கொல்லப்படுவதற்கு முன்பு, விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஸ்டிக் பயன்படுத்தி வந்தார்். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவரைக் கடத்தியிருக்கலாம் என்று கதை கட்டிய போலீஸார், ராமஜெயம் முதல்நாள் இரவே கொல்லப்பட்டு விட்டதாகவும் சொன்னார்கள். அது முழுக்க முழுக்கப் பொய். அவரோட அண்ணன் நேரு மகன் கல்யாணத்திலும் சரி, சென்னையிலிருந்து ரங்கம் வரும் வரையிலும் சரி... அவர் ஸ்டிக் பயன்படுத்தவே இல்லை என்பதுதான் உண்மை. இதுதவிர, அவர் கொல்லப்படுவதற்கு முதல்நாள் இரவு, தனது வீட்டுக்கு வந்து சாப்பிட்டதாக அந்த வீட்டு வேலைக்காரப் பெண் சொல்லி இருக்கிறார். அன்று இரவு ராமஜெயம் பாத்ரூம் போனதாகவும் அவரது உறவினர்கள் சொல்லி இருக்கிறார்கள். அடுத்து காலையில் அவரது வீட்டு முற்றத்தில் நீதிபதி ஒருவர் ராமஜெயத்திடம் பேசியதாகவும் அப்போது ராமஜெயம் நீதிபதியிடம், '7 மணிக்கு ஆபீஸுக்கு வாங்க பேசிக்கலாம்’ எனச் சொல்லிவிட்டு சென்றதாகவும் வாக்குமூலம் பதிவாகியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் போலீஸார், ''ராமஜெயத்தின் உறவினர்கள் யாரோ கடத்திருக்கலாம்'' என்றனர்.

''போலீஸார், ராமஜெயம் கொலை வழக்கை முழுவதுமாக விசாரிக்காமல் அவரது உறவுக்காரர்கள் மீது மட்டும் சந்தேகப் பார்வை வீசுவது வருத்தமாக இருக்கிறது. இந்தக் கொடூரக் கொலைக்குப் பின்னால் மாஸ்டர் பிளான் இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். பொய்யாக ஒருவரை இவர்தான் குற்றவாளி எனக் காட்டி வழக்கை முடித்துவிட முடியாது'' என்கின்றனர் ராமஜெயம் தரப்பினர்.

''ராமஜெயம் கொலையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம். அந்த நபர் காஞ்சி சங்கர்ராமன் கொலை வழக்கு குற்றவாளியான அதிரடி பிரமுகருக்கு நெருக்கமானவர். அந்தப் பிரமுகருக்கும் ராமஜெயத்துக்கும் நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது. அதன் அடிப்படையில் ராமஜெயத்தை வரவழைத்து அந்தப் பிரமுகர் கொலை செய்துவிட்டாரா என்று சந்தேகிக்கிறோம். இப்போது எங்கள் விசாரணையில், புது விட்னஸ் கிடைத்துள்ளது. அதை நீதிமன்றத்தில் சொல்லி விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டாம் என்போம். பொய்யான குற்றவாளியை நிறுத்த மாட்டோம்'' என்றனர் போலீஸார்.

மொத்தத்தில் ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் யூ டர்ன் அடிக்க ஆரம்பித்துள்ளது.

- சி.ஆனந்தகுமார்

'ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது!’

'கலைஞர் நிறுத்திய வேட்பாளரை தோற்கடித்த நேரு’ என்கிற தலைப்பில் கடந்த 24.12.14 தேதியிட்ட ஜூ.வியில் வெளியான செய்தி தொடர்பாக திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளர் கே.என்.நேரு நமக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ''கழகத்தின் உறுப்பினர் சேர்த்தல் நிகழ்விலே இருந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக கிளைக் கழக தேர்தலில் இருந்து ஊராட்சி செயலாளர் தேர்தல் மற்றும் ஒன்றியச் செயலாளர் தேர்தல் வரை உட்கட்சி ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. அடுத்தகட்டமாக மாவட்டச் செயலாளர் தேர்தலில் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் செல்வராஜும் காடுவெட்டி தியாகராஜனும் போட்டியிட்டார்கள். அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர், தளபதி மேற்பார்வையில் நடைபெற்ற அந்தத் தேர்தலில் காடுவெட்டி தியாகராஜன் வெற்றி பெற்றார் என்று அறிவித்தவுடன் ஒன்றுபட்ட மாவட்டக் கழகத்தின் செயலாளர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்தேன். திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தேர்தலில் செல்வராஜை வேட்பாளராக தலைவர் கலைஞர் அறிவித்தார்கள் என்கிற செய்தியே தவறானது. காலம் உள்ளவரை கலைஞர் காலடியில் எந்தப் பதவியும் இல்லை என்ற நிலை வந்தாலும் பணியாற்றுவோமே தவிர, தலைவர் கலைஞர் அவர்களை மீறி எந்தச் செயலிலும் ஈடுபடமாட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.