Published:Updated:

அப்பவே அவனை சரணடையச் சொன்னேன்.. கேக்கலை!

தம்பி மீது கடுப்பான கே.என்.நேரு

அப்பவே அவனை சரணடையச் சொன்னேன்.. கேக்கலை!

தம்பி மீது கடுப்பான கே.என்.நேரு

Published:Updated:
##~##

திருச்சியில்  கட்டப்பட்ட 'கலைஞர் அறி வாலய’த்தை வைத்தே பல்வேறு கைது நடவடிக்கைகள் அரங்கேறுவதுதான் ஆச்சர்யமானது. முன் னாள் அமைச்சர் நேருவை வளைத்து கடலூர் சிறையில் வைத்த போலீஸ், இப்போது அவரது தம்பி ராமஜெயத்தை  வளைத் துள்ளது! 

'கலைஞர் அறிவாலயம்’ கட்டு வதற்காக ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை தன்னிடம் இருந்து அடித்து, உதைத்து, மிரட்டி வாங்கியதாக துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் புகார் கொடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பவே அவனை சரணடையச் சொன்னேன்.. கேக்கலை!

அதைத் தொடர்ந்துதான் இந்தக் கைது நடவடிக்கைகள். 'ராமஜெயம் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் வந்தவுடன் கைது செய்யப்படுவார்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப் பட்டது. தற்போது அவரைக் கொச்சியில் கைது செய்திருக்கிறது போலீஸ்!

கடந்த 5-ம் தேதி அதிகாலையில் கொச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானப் பயணிகள் பட்டியலில் ராமஜெயத்தின் பெயர் இடம் பெற்று இருந்தது. காலை 3.30 மணியளவில் விமானம் ஏறுவதற்காக ராமஜெயம் வர... அவரைக் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அங்கேயே வைத்து விசாரித்துவிட்டு நெடுமஞ்சேரி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அவரை, திருச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்ற போலீஸ் டீம் கைது செய்து கொண்டு வந்திருக்கிறது.

நேரு குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரான மலர்விழியிடம் பேசினோம்.

''நேரு குடும்பத்தினர் மீது நான் தொடர்ந்த வழக்கால் என் மீது கோபமான நேரு, எங்கள் மீது பொய் வழக்குகள் போட்டு ரொம்பவே அலைக்கழித்தார். என் தங்கை வனிதாகூட சிறைக்குப் போனார். இதுபோன்ற தகவலைக் கேள்விப்பட்டு 2007 ஏப்ரலில், டாக்டர் சீனிவாசன் என்னைத் தேடி வந்தார். 'கலைஞர் அறிவாலயம் கட்டுறதுக்காக, பல கோடி மதிப்புள்ள என்னோட இடத்தை குறைஞ்ச விலைக்குக் கேட்டு நேரு தரப்பு என்னை மிரட்டினாங்க. நான் மறுத்தேன். வயசான என் அப்பா கிருஷ்ணசாமியை ராமஜெயம் அடிச்சார். அதனால பயந்துபோய் எழுதி கொடுக்கிறதுக்கு சம்மதித்தேன்.

அப்பவே அவனை சரணடையச் சொன்னேன்.. கேக்கலை!

40 லட்சம் பணத்தைக் கொடுத்து, அக்ரிமென்ட் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாங்க. ஊருக்கு காரில் கொண்டுபோய் விடறோம்னு சொல்லி, கூட வந்த துணை மேயர் அன்பழகன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மற்றும் செரீஃப் மூணு பேரும் சேர்ந்து அந்தப் பணத்தையும் பறிச்சுகிட்டாங்க’னு சொன்னார். 'தி.மு.க. ஆட்சியில் நியாயம் கிடைக்காது. அதனால், நடந்த சம்பவங்களை உயிலா எழுதி ரெஜிஸ்டர் பண்ணலாம். அப்புறம் ஆட்சி மாறினதும் அதை எவிடென்ஸா பயன்படுத்தலாம்’னு ஐடியா கொடுத்தேன். இப்போது அந்த உயில் நீதிமன்ற கஸ்டடியில் இருக்கிறது. ராமஜெயத்துக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக அது இருக்கும்!'' என்றார்.

அப்பவே அவனை சரணடையச் சொன்னேன்.. கேக்கலை!

வையம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் சகோதரர்கள் மர்மமாக இறந்த விவகாரத்திலும், ராமஜெயத்தைக் குறிவைத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்துக்கொண்டு இருந்தனர். அது தொடர்பான வழக்கும் ராமஜெயத்தின் மீது பாய வாய்ப்பு இருக்கிறது!

சமீபத்தில், தமிழக விவசாயிகள் பிரிவின் மணிகண்டம் ஒன்றிய அமைப்பாளரான சின்னதுரை

அப்பவே அவனை சரணடையச் சொன்னேன்.. கேக்கலை!

கொடுத்த புகாரின் பேரில், நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருச்சி ஆர்.டி.ஓ-வான சங்கீதா விசாரிக்கிறார். இதில் ராமஜெயத்தின் தலை பிரதானமாக உருட்டப்படும் என்கிறார்கள். நேரு தரப்பு வழக்கறிஞரான பாஸ்கரிடம் விளக்கம் கேட்டோம். ''உயிலில் எழுதி இருப்பதால் அதை உண்மைன்னு ஏத்துக்க முடியுமா? அக்ரிமென்ட் சமயத்தில் அதை எழுதி வெச்சவங்க, ஏன் ரெஜிஸ்ட்ரேஷனுக்குப் பிறகு எழுதலை? அக்ரிமென்ட் சமயத்தில் எழுதினதை, பின்னாடி பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு செஞ்ச மோசடி வேலைன்னு சொல்லலாமே? ஏரி விஷயத்துலேயும், மத்திய அரசு திட்டத்தை மாத்தினாங்கனு சொல்றது ஏத்துக்குற மாதிரி இல்லை. ஏரியில் இருந்து மணல் அள்ளினாங்கன்னு சொல்றதும் தவறான குற்றச்சாட்டுகள்தான். எல்லாத்தையும் சட்டப்படி சந்திப்போம்!'' என்றார்.

ராமஜெயம் கொச்சியில் வளைக்கப்பட்ட அதே தினத்தில்தான், போலீஸ் கஸ்டடியில் எடுப்பது தொடர்பான விசாரணைக்காக, கடலூர் மத்தியச் சிறையில் இருந்து கே.என்.நேரு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு முன்பு வெளியே மரத்தடி நிழலில் நின்று கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் நேரு. அப்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடுவதற்காக வந்தார். ராமஜெயம் கைது செய்யப்பட்ட தகவல் வரவே, ''அவனை அப்பவே சரணடையச் சொன்னேன். கேக்கலை. இப்ப, 'வெளிநாட்டுக்கு தப்பிச்சுப் போகப் பாத்தான்’னு அடுத்தவங்க சொல்றாங்க, இது தேவையா?'' என்று நேரு வருத்தப்பட்டாராம்!

கலைஞர் அறிவாலயம் நிலம் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பெயரில் வாங்கப்பட்டு இருப்பதால்,  அவர் மீதும் வழக்குப் பாய வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்!

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism