Published:Updated:

நீங்கள் கனிமொழி விடுதலையைப் பாருங்கள்...

மன்னார்குடியில் சீறிய சீமான்

நீங்கள் கனிமொழி விடுதலையைப் பாருங்கள்...

மன்னார்குடியில் சீறிய சீமான்

Published:Updated:
##~##

திருவாரூர் மாவட்டம் மன்னார்​குடியில் கடந்த 2-ம் தேதி இரவு நடந்தது, 'செங்கொடிக்கு வீரவணக்கம்’ பொதுக்கூட்டம்! கூட்டம் தொடங்கியதுமே மழையும் பெய்யத் தொடங்கியது. கொட்டும் மழையிலும் ஆயிரத்துக்​கும் மேற்பட்டோர் உணர்ச்சிப் பிழம்பாகக் கூடியிருந்​தனர்! 

முதலில் பேசிய பேராசிரியர் கல்யாணசுந்தரம், 'எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்துக்குப் பிறகு... இப்போதுதான் தமிழக அரசும், தமிழ் இன உணர்வாளர்களும் ஒன்றாக நிற்கின்​றனர்...'' என ஆரம்பித்தவர், சட்டென்று டாப் கியருக்குச் சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'யார் கொலையாளிகள்? இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி 12,500 தமிழர்களைக் கொன்ற கொலைகாரன் யார்? ஒருவரைக் கொலை செய்வதற்காகத் தன் உடலில் வெடிகுண்டை சுமந்துகொண்டு ஒருத்தி செல்கிறாள் என்றால், அவள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பாள்? ராஜீவ்காந்​தியைக் கொலை செய்தவர்கள் இறந்துவிட்டார்கள். முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் அப்பாவிகள். அவர்கள் பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசின் தீர்மானம் மத்திய அரசைப் பாதிக்காது எனச் சொல்கிறார்கள். அப்படியானால், மத்திய அரசின் சட்டங்கள் எங்களையும் பாதிக்காது.

நீங்கள் கனிமொழி விடுதலையைப் பாருங்கள்...

கருணாநிதியை நம்பி 10 வருடங்கள் அவர் பின்னாலே ஓடினோம். ஐயா கருணாநிதி... நீங்கள் செய்த துரோகத்தை ராஜபக்ஷேவும் செய்யவில்லை. இந்திய அநீதிக்காக, முதல் கரும்புலியாக எங்கள் செங்கொடி மாறி இருக்கிறார். அவளது லட்சியத்தைத் தமிழர்கள் நாம் ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டும்!' என்று பொங்கினார்.

'நாம் தமிழர்’ கட்சியின் இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ்​காந்தி, 'சட்டரீதியாக மூவரையும் காப்பாற்றப் போராடுகிறோம். ஒருவேளை, நமக்கு எதிராக வழக்கு முடியும் சூழ்நிலை வந்தால், மக்கள் எழுச்சியின் மூலம் அதைக் கண்டிப்பாக மாற்ற முடியும். தற்போது, தூக்குத் தண்டனையை நிறுத்திவைப்பது என்பது தற்காலிக ஓய்வுதானே ஒழிய... வெற்றி அல்ல. மாநில அரசை எதிர்த்து, மத்திய அரசு செயல்படுவது தவறான செயல். ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளைத்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எதிரொலித்து இருக்கிறார்!' என்றார்.

நிறைவாகப் பேசிய சீமான், 'தமிழ் ஈழத்தைவிட தமிழகத்தில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என பிரபாகரன் என்னிடம் சொன்னார். அதற்கான சான்று​​களில், தோழர் செங்கொடியும் ஒருவர்.மூன்று பேரின் விடுதலை சாத்தியமில்லை என்றால்,தமிழ் ஈழத்தின் விடுதலை எப்படி சாத்தியமாகும்? இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். இந்தியாவை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பது ஜெயலலிதாதான். அவரை உட்கார​வைத்து, அனைத்துத் தொகுதிகளிலும் ஜெயிக்க வைப்பேன். கருணாநிதியும் மூவரையும் விடுதலை செய்யத் துடிக்கிறார். ஐயா... நீங்கள் கனிமொழியின் விடுதலையைப் பாருங்கள். மூன்று பேர் விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...' என கர்ஜித்தார்.

மழையும் ஓய்ந்தது!

- சி.சுரேஷ், படம்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism