Published:Updated:

''இவ்வளவுக்கு பிறகும் ரவுடியிஸம் குறையலையேப்பா!''

மதுரை மந்திரியின் மனக்குமுறல்!வக்கீல் வீட்டில் சோடா பாட்டில் வீச்சு

''இவ்வளவுக்கு பிறகும் ரவுடியிஸம் குறையலையேப்பா!''

மதுரை மந்திரியின் மனக்குமுறல்!வக்கீல் வீட்டில் சோடா பாட்டில் வீச்சு

Published:Updated:
##~##

''எல்லாரும் சிக்கிக்கிட்டு இருக்காங்க... ஆட்சியில் இருக்கிறப்ப அதிகாரத் தோரணையில் வலம் வந்த துணை மேயர் மன்னன், ஜெயராமன் மாதிரி ஆளுங்க மட்டும் சுதந்திரமாத் திரியுறாங்களே எப்புடி?'' - மதுரையில் தி.மு.க-வினர் மத்தியிலேயே இப்படி ஓர் ஆதங்கக் கேள்வி இருந்தது. அந்தக் குறையையும் போக்கிவிட்டது போலீஸ்! 

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணிச் செயலாளரான தமிழ்ச்செல்வன், மாவட்ட நீதிமன்​றத்தில் அரசு குற்ற​வியல் வழக்கறி​ஞரும்கூட! வழக்கு​களில் சிக்கும் தி.மு.க​​-வினருக்கு முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கொடுக்கும் விவகாரங்களில் கடுமை காட்டி மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வைப்பதால், இவர் மீது தி.மு.க-வினருக்கு  ஆத்திரம் அதிகம் உண்டு! இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி தமிழ்ச்செல்வனை போனில் மிரட்டிய மர்ம நபர், ''மன்னன், ஜெயராமனுக்கு எதிரா நீ வழக்குப் போடப் போறியா? கையைக் காலை எடுத்துருவோம், ஜாக்கிரதை!'' என்று மிரட்டினாராம். அன்று இரவே தமிழ்ச்செல்வனின் வீட்டுக்குள் யாரோ சோடா பாட்டில்களை வீசிவிட்டு ஓடினார்கள். மன்னன், ஜெயராமன் தூண்டுதலின் பெயரில்தான் இந்தத் தாக்குதல் நடந்ததாக தமிழ்ச்செல்வனின் மனைவி புகார் கொடுக்க, இருவர் மீதும் எஃப்.ஐ.ஆர். போட்டு ஆட்களைத் தேடுகிறது போலீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இவ்வளவுக்கு பிறகும் ரவுடியிஸம் குறையலையேப்பா!''

தமிழ்ச்செல்வனை நாம் சந்தித்தோம். ''மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது நடந்த மோதல் தொடர்பாகப் போடப்​பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு 20 நாளைக்கு முன்னாடி மாவட்ட

''இவ்வளவுக்கு பிறகும் ரவுடியிஸம் குறையலையேப்பா!''

நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஜெயராமன் மனுத் தாக்கல் செய்தார். அதையே காரணம் காட்டி, மாவட்ட நீதிமன்றத்தில் அவரது மனுவை டிஸ்மிஸ் செய்ய வைத்தேன். தா.கி. வழக்கு உள்ளிட்ட மன்னன் சம்பந்தப்பட்ட சில விவகாரங்களும் சீக்கிரமே நீதிமன்றத்துக்கு வரப்போகுது. இதை எல்லாம் மனசில் வெச்சுக்கிட்டு என்னை மிரட்டிப் பார்க்கிறாங்க. போனில் மிரட்டல் வந்த அன்னிக்கி ராத்திரியே என் வீட்டு மாடியில் டமார் டமார்னு சத்தம் கேட்டுச்சு. அதிகாலையில் எந்திரிச்சு பார்த்தப்ப,  சோடா பாட்டில் துண்டுகள் சிதறிக்​கிடந்தன. ஜெயராமன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற மாரியப்பன் என்பவரது டெலிபோனில் இருந்து தான் மிரட்டல் வந்துருக்குன்னு போலீஸ் கண்டு பிடிச்சுருக்கு...'' என்றார்.

தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜு, ''அம்மா இவ்வளவு தூரம் நடவடிக்கை எடுத்த பின்னாடியும் தி.மு.க-காரங்களோட ரவுடி​யிஸம் ஓயலை பாருங்கய்யா... இதை நாங்க சும்மா விடமாட்டோம்!'' என்றார்.

விளக்கம் கேட்பதற்காக முதலில் மன்னனை தொடர்புகொண்டோம். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப். ஆகவே, மாநகர் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளரும், 4-ம் பகுதி செயலாளருமான ஜெயராமனிடம் பேசினோம். ''தேர்தல் வழக்கைத் தவிர என் மேல் வேறு எந்த வழக்கும் இல்லை. இருந்தும் புகாரைக் கிளப்பி இருக்காங்க. இதுக்கும் காரணம் இருக்கு. தமிழ்ச்செல்வன் தன் மனைவிக்கு மதுரை மேயர் ஸீட் கேட்கிறார். 'மேயர் பதவி ஆண்களுக்காக இருந்தால் எனக்கும், பெண்களுக்காக இருந்தா மன்னனின் மனைவிக்கும் கொடுக்கணும்’னு நாங்க எங்க கட்சியில் கேட்டு இருக்கோம். இதுக்கு முட்டுக்கட்டை போடுறதுக்காகவே சதிவலை பின்னுறாங்க. கடந்த 16 நாளா நான் கம்பத்தில் தங்கி இருக்கேன். ஒரே ஒரு நாள் மட்டும் மாவட்டக் கழகக் கூட்டத்துக்காக மதுரைக்கு வந்துட்டுப் போனேன்...'' என்று சொன்ன ஜெயராமன், ''அந்த மீனாட்சி சத்தியமா சொல்றேன்... தப்புன்னு தெரிஞ்சா சட்டையைப் பிடிச்சுக் கேட்டுருவோமே தவிர, இப்படி பேடித்தனமான வேலைக்கு எல்லாம் போகமாட்டோம்!'' என்று குமுறினார்.

''இவ்வளவுக்கு பிறகும் ரவுடியிஸம் குறையலையேப்பா!''

மன்னன் மற்றும் ஜெயராமன் சார்பில் பேசிய வழக்கறிஞர் அன்புநிதி, ''தமிழ்ச்செல்வன் கையில்தான் மதுரைக் காவல் துறையையே இருக்கு. அப்படிப்பட்டவர், தனது வீட்டில் நடந்த தாக்குதல் குறித்து உடனடியாக புகார் கொடுக்காமல், மூன்று நாள் கழித்து கொடுத்திருப்பதன் மர்மம் என்ன? ஏற்கெனவே, தி.மு.க. ஆட்சியில், ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்பட்ட வழக்கில், 'லோக்கல் போலீஸ் விசாரித்தால் உண்மை வராது’ என்று சி.பி.ஐ. விசாரணை கேட்டார்கள். அதுபோல், இந்த விவகாரத்திலும் புகார்தாரரே போலீஸ் வக்கீலாக இருப்பதால் உண்மையை மறைத்துவிடுவார்கள். அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி நாங்களும் மனு செய்வோம். எங்களுக்கு உண்மையான குற்றவாளி யார் என்பது தெரியவேண்டும்...'' என்றார்.

இதுபற்றி,  தமிழ்ச்செல்வனிடம் மீண்டும் பேசிய போது, ''அரசு வழக்கறிஞர் என்ற பதவியை அம்மா எனக்குக் கொடுத்ததே மிகப் பெரிய வரம். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தேர்தலில் நிற்கும் ஐடியா இல்லாததால், நாங்கள் பொய் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு மிரட்டல் வந்த 10-வது நிமிடமே நான் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டேன். அவர்கள் புலன்விசாரணை செய்து வழக்குப் போட அவகாசம் தேவைப்பட்டது. மற்றபடி குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது!'' என்றார்.

போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் பேசினோம். ''விசாரணை நடக்கிறது. இதைத் தவிர இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கு இல்லை!'' என்று மட்டும் சொன்னார்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism