கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை பிரான்ஸ் நாட்டு மக்களிடையே விதைத்துள்ளது கடந்த வாரம் அங்கு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல். அடுத்தடுத்து நடைபெற்றுவரும் சம்பவங்களால் அரசும் மக்களும் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டென்மார்க்கைச் சேர்ந்த நாளிதழான 'ஜில்லேண்ட்ஸ்போஸ்டன்’ நபிகள் நாயகத்தைக் கிண்டல் செய்து 12 கார்ட்டூன்களை வெளியிட்டது. அந்த கார்ட்டூன்களை பிரான்ஸைச் சேர்ந்த 'சார்லி ஹெப்டோ’ வார பத்திரிகை 2006ம் ஆண்டு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. சார்லி ஹெப்டோ பத்திரிகை தொடர்ந்து எல்லா மதங்களையும் கிண்டல் செய்து செய்தி, கார்ட்டூன்களை வெளியிட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து அந்த நாளிதழுக்குப் பல மிரட்டல்கள் வந்தன. ஏற்கெனவே, இந்தப் பத்திரிகை அலுவலகத்தில் 2011-ம் ஆண்டு பெட்ரோல் குண்டுவீச்சு நடத்தப்பட்டிருக்கிறது. அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நபிகள் நாயகம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்பாக்தாதியின் கேலிச் சித்திரங்களை, இந்தப் பத்திரிகை சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இதனால், ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பத்திரிகையின் ஆசிரியர் குழுக் கூட்டம் நடப்பதை அறிந்து அந்த நேரத்தில் உள்ளே நுழைந்து கபு, ஜார்ஜ் ஒலின்ஸ்கி, பெர்னார்ட் வெல்ஹாக் உள்ளிட்ட 4 கார்ட்டூனிஸ்டுகளையும் பத்திரிகையின் பதிப்பாளர் ஸ்டீபன் சார்போனியரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் 5 ஊழியர்களையும் கொன்றுவிட்டு வெளியே வந்த அவர்களை போலீஸார் தடுக்க முயன்றபோது 2 போலீஸாரையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 12 பேர் பலியாயினர். இதனைச் செய்தவர்கள் சயித் குவாச்சி மற்றும் செரிப் குவாச்சி என்ற சகோதரர்கள்.

இவர்கள் ஏமனில் உள்ள அல்கொய்தா பிரிவில் பயிற்சி பெற்றுள்ளனர். அமெரிக்காவில் பிறந்த அன்வர் அல் அவ்லாகியின் செயல்களால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலர் ஏமன் சென்றனர். 2011-ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்படும் முன்பு அவ்லாக்கி, 'நபிகள் நாயகத்தைக் கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்தவர்களைக் கொலைசெய்ய வேண்டும்’ என்று பல முறை தெரிவித்தார். நம் மதத்துக்கு எதிரான குற்றங்கள் செய்த சார்லி ஹெப்டோ ஆசிரியர் ஸ்டீபன் சார்போனியரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வாருங்கள் என்று ஏமனில் உள்ள அல் கொய்தா அமைப்பு தங்கள் உறுப்பினர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே உளவுத் துறை அறிவித்திருந்தும் காவல் துறையினரின் பொறுப்பற்ற செயலே இதற்குக் காரணம் என்று சார்போனியரின் காதலி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலை முடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச்சென்ற குவாச்சி சகோதரர்கள் அடுத்த நாள் பாரீஸின் கிழக்கில் உள்ள தம்மார்டின்டிகோயல் நகரில் உள்ள ஓர் அச்சுத் தொழிற்சாலைக்குள் தஞ்சமடைந்திருந்தபோது போலீஸ் மற்றும் ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இத்தோடு ராணுவத்துக்குத் தலைவலி ஓயவில்லை. இந்த சமயத்தில் ஒரு பெண் போலீஸ், அடையாளம் தெரியாத ஒருவரால் சுடப்படுகிறார். நிலைமை மோசமடைகிறது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை கிழக்கு பாரீஸில் உள்ள போர்ட்டிவின்சென்ஸ் பகுதியில் இருக்கும் கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவர், 5 பேரை பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்தார். சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்த தீவிரவாதி, அமேதி கவ்லிபாலி. தன் நண்பர்கள் மீதான தாக்குதலுக்குப் பழி தீர்க்கப்போவதாகச் சொல்லியவரை, சூப்பர் மார்க்கெட்டைச் சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டு சுட்டுக் கொன்றனர். ஆனால், 4 பிணைக்கைதிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 7 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், அமேதி கவ்லிபாலி தன்னை ஐ.எஸ். ஆதரவாளர் என அறிமுகப்படுத்துவதோடு, ஐ.எஸ்ஸுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரான்ஸ் ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுகிறார். 'எங்கள் குழந்தைகள், பெண்களைக் கொல்லும்போது அமைதியாக இருந்தோம். தற்போது எங்கள் கடவுள் மற்றும் மத நம்பிக்கைகளை கேலிப்படுத்துகிறார்கள்.அதனால் இனியும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை’ என்று கூறி இருக்கும் அவர் பிரான்ஸ் முஸ்லிம்கள் தன்னைப் பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறார்.

இதுவரை இப்படித்தொடர் தாக்குதல்களைச் சந்தித்திராத பிரான்ஸ் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்தநாட்டு அதிபர் பிரான்கோசிஸ் ஹாலன்டே, 'இன்னமும் நம் நாட்டுக்கான அச்சுறுத்தல் ஓயவில்லை. கடந்த 3 நாட்களில் 17 பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் நம் நாட்டின் அமைதியைக் குலைத்துவிடாது. ஒற்றுமைதான் நமது பலம்’ என்று குறிப்பிட்டுள்ளார். பல லட்சம் பேர் இந்தத் தாக்குதலை எதிர்த்துப் பேரணியில் பங்கேற்றனர்.

ஆனால், சுட்டுக்கொல்லப்பட்ட அமேதி கவ்லிபாலியின் காதலி ஹயாத் பவுமெத்தீன் என்ற காதலி இருப்பதாகவும், அவரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தன் காதலர் மற்றும் நண்பர்களுக்காகப் பழி வாங்க தான் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதனால், அவரைப் பிடிக்க ராணுவம் முடக்கிவிடப்பட்டுள்ளது.

கேலிச்சித்திரங்களினால் ஒரு தேசத்தின் அமைதி கேள்விக்குறியாகிவிட்டது!