அமைதி வேண்டி கோயிலுக்குச் செல்லும் இடத்திலேயே குழந்தைகளைக் கடத்த ஒரு கும்பல் நடமாடுகிறது என்றால் நம்ப முடிகிறதா? அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோயிலில்தான் இந்தக் கொடுமை.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்திலிருந்து வந்த ராஜதுரை என்பவரது நான்கு வயது மகன் சரணும் ஜனவரி 3ம் தேதி திருச்சி காட்டூரிலிருந்து வந்த இளங்கோவன் என்பவரது இரண்டரை வயது பெண் குழந்தை அஸ்வினியும் கோயில் வளாகத்தில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனார்கள். ஒருவழியாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அந்த குழந்தைகளைக் கண்டுபிடித்தனர்.

கோயிலுக்கு வந்து வளாகத்தில் இரவு தங்கி இருப்பவர்கள் அயர்ந்து தூங்கும் சமயத்தில் அவர்களுடன் படுத்திருக்கும் குழந்தையின் மீது துணியைப் போர்த்தித் தூக்கிப் போட்டுக்கொண்டு செல்வதுதான் அந்தக் கும்பலின் ஸ்டைல். இரு குழந்தைகளை போலீஸார் தேடிய சமயத்தில் அவர்கள் பிடியில் நான்கு குழந்தைகள் கிடைத்தன. இரு குழந்தைகளைப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார். மற்ற இரு குழந்தைகளை என்ன செய்வது என தெரியாமல் காப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.

குழந்தை சரண் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த தந்தை ராஜதுரையிடம் பேசினோம். ''நான் ஒரு லாரி டிரைவர். எங்க ஊர்ல இருந்து சொந்த பந்தங்க 40 குடும்பங்கள் ஒண்ணா சேர்ந்து கோயிலுக்கு வந்தோம். அன்றைக்கு அங்கே தங்கிட்டு மறுநாள் காலையில குளிக்கிறதுக்காக என் மனைவி, மகனைக் கூட்டிக்கிட்டு கடற்கரைக்கு போயிருக்கா. போற வழியில் யானை நின்றதை சரண் வேடிக்கை பார்த்திருக்கான். அந்த இடத்தில் கூட்டமா இருந்திருக்கு. அதில் என் மகனை யாரோ கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. போலீஸ்ல புகார் கொடுத்தோம். எப்படியோ என் பையனை கண்டுபிடிச்சு குடுத்துட்டாங்க'' என்றார் மகிழ்ச்சியுடன்.

அஸ்வினியின் தாயான சுதா, ''திருச்சி அருகில் உள்ள காட்டூரில் பால்வாடியில வேலை பார்க்கிறேன். என் கணவர் இளங்கோவன் கூலி வேலை செய்யுறார். எங்களுக்கு பரத் என்ற ஏழு வயது மகனும் அஸ்வினி என்ற இரண்டரை வயது மகளும் இருக்காங்க. எங்க ஊர்ல இருந்து 15 பேர் கோயிலுக்கு வந்தோம். சாமி கும்பிட்டுட்டு வீடு திரும்ப திருச்செந்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். காலையிலதான் ட்ரெயின் வரும்னு சொல்லிட்டாங்க. வந்து கல்மண்டபத்துல படுத்து தூங்கினோம். காலையில் எழுந்து பார்த்தா எங்களுக்கு நடுவுல தூங்கிட்டு இருந்த என் புள்ளையை காணோம். தேடிப் பார்த்தோம். போலீஸ்ல புகார் செய்தோம். போலீஸார் எம் பொண்ண கண்ணுல காட்டுன பிறகுதான் உயிரே திரும்புச்சுங்க'' என்றார் பதற்றம் விலகாமல்.

கடத்தல் கும்பலை எப்படிப் பிடித்தது போலீஸ்? நெல்லை மாவட்ட காவல் துறை எஸ்.பியான நரேந்திரன் நாயரிடம் கேட்டோம். ''குழந்தைகள் கடத்தலை தடுக்கவும் அதில் தொடர்புடைய கும்பலைப் பிடிக்கவும் மாநில அளவில் 'ஆபரேஷன் ஸ்மைல்’ நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது. சுரண்டை அருகே உள்ள வேலப்பநாடானூரில் குழந்தை இல்லாத தம்பதியரான ராமர், தர்மன் ஆகியோர் திடீரென குழந்தைகளை தத்தெடுத்து வந்திருப்பதாக லோக்கல் போலீஸ் மூலம் தகவல் வந்தது. எங்கே தத்தெடுத்தார்கள் என்று விசாரித்தபோதுதான் அவர்கள் குழந்தைகளை விலைக்கு வாங்கியிருப்பது தெரிந்தது. அதே நேரத்தில் திருச்செந்தூரில் குழந்தைகளைக் காணவில்லை என்ற செய்தியும் வந்தது. முதலில் குழந்தைகளை மீட்டோம். பிறகு அந்தக் கும்பலையும் வளைத்தோம். இந்தக் கும்பலின் லீடராக செயல்பட்டது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜம்மாள். இவர் தலையில் 6 பேர் அடங்கிய டீம் இயங்கியுள்ளது. எல்லோரையும் பிடித்துவிட்டோம். ஆண் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கும் பெண் குழந்தையை 60 ஆயிரம் ரூபாய்க்கும் இந்தக் கும்பல் விற்றுள்ளது. ஆரம்பத்தில் பாலியல் தொழில் செய்து வந்த ராஜம்மாள், பணத்துக்கு ஆசைப்பட்டுதான் குழந்தை கடத்தலில் இறங்கியுள்ளார். இவரது நெட்வொர்க் இன்னும் எங்கெல்லாம் விரிந்துள்ளது என்று விசாரித்து வருகிறோம்' என்று சொன்னார்.

அமைதியை நாடி கோயிலுக்குப் போகிற இடத்திலுமா? ஆண்டவா!

ஆண்டனிராஜ், எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்