Published:Updated:

ஆ.ராசா, பால்வாவின் சிபிஐ காவல் மேலும் 4 நாட்களுக்கு நீடிப்பு

ஆ.ராசா, பால்வாவின் சிபிஐ காவல் மேலும் 4 நாட்களுக்கு நீடிப்பு

புதுடெல்லி, பிப்.8,2011

ஆ.ராசா, பால்வாவின் சிபிஐ காவல் மேலும் 4 நாட்களுக்கு நீடிப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும்  டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஷாகித் உஸ்மான் பால்வா ஆகியோரின் சிபிஐ காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்க நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
 
 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி கைது செய்தனர்.

அவருடன், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் 5 நாட்களாக சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

சித்தார்த்த பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரிடம் சிபிஐ தனது விசாரணையை முடித்துக் கொண்டது. அவ்விருவரையும் 14 நாள் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது. அப்போது, ராசாவின் சிபிஐ காவலை 2 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஷாகித் உஸ்மான் பால்வாவை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அதையடுத்து, பால்வாவை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஆ.ராசாவையும், பால்வாவையும் மேலும் 4 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்கை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.

இருவரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது என சிபிஐ தரப்பில் கோரப்பட்டதாக தெரிகிறது.

அதேநேரத்தில், ஏற்கெனவே 7 நாள் சிபிஐ கஸ்டடியில் விசாரிக்கப்பட்ட நிலையில், இதை நீட்டிக்கக் கூடாது என்று ராசாவின் வழக்கறிஞர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.

இதையடுத்து சிபிஐ நீதிமன்றம், இருவரின் சிபிஐ காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

சர்ச்சைக்குரிய ஸ்வான் நிறுவனம் சம்பந்தப்பட்ட டிபி ரியாலிட்டி நிறுவனத்தினர், கலைஞர் டி.வி-க்கு சுமார் ரூ.214 கோடி கொடுத்தார்கள் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு