வேதனையில் வனக்கல்லூரி மாணவர்கள்

போக்குவரத்தைத் தடை செய்யும் மறியல் போராட்டங்களை நடத்தவில்லை. அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு யாருக்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை. பேருந்துகளுக்கோ, அரசுடைமைகளுக்கோ எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், தங்களின் சாத்வீக போராட்டத்தின் மூலம் தமிழகத்தையே தங்களை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்கள். ஆனால், அரசாங்கம் கவனித்ததாகத் தெரியவில்லை என்பதுதான் சோகம்!

மாணவர்களின் போராட்டம் பற்றி கடந்த பிப்ரவரி 11 தேதியிட்ட இதழில், 'நள்ளிரவு நேரம்... நடுங்கவைக்கும் விலங்குகள்... போராடும் மாணவர்கள்!’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். வனச்சரகர், வனவர் ஆகிய பணியிடங்களில் 100 சதவிகித இடஒதுக்கீடு கோரி, வனக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வரும் போராட்டம் 30 நாட்களை நெருங்கிவிட்டது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டு வருகின்றனர் மாணவர்கள். தினமும் மாணவ, மாணவிகள் மயங்கி விழுவதும், மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்து உடல்நலம் சற்றுத் தேறிய பின்னர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடருவதும்தான் மாணவர்களின் அன்றாட வேலையாகிவிட்டது. ஆனால், இதன்பின்னரும் இவர்களது கோரிக்கையைக் கேட்டறிந்து, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.

''ஏதோ காட்டுக்குள் உட்கார்ந்து போராடிட்டு இருக்கிறார்கள். இவர்களால், என்ன செய்ய முடியும் என்றுதானே அரசாங்கம் எங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. சென்னையில் கல்லூரி மாணவர்கள் இவ்வளவு நாட்கள் போராட்டம் நடத்திக்கிட்டு இருந்தால், அரசாங்கம் அமைதியா இருந்திருக்குமா? எங்கள் போராட்டத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்பதால்தான் நாங்கள் எங்களை மட்டுமே வருத்திக்கொண்டு இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளில் நியாயம் இல்லை என்று அரசால் சொல்ல முடியுமா? வனத்துறைப் பணிக்கான நேரடி நியமனத்தில் 100 சதவிகிதம் என இருந்த இடஒதுக்கீடு 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது ஏன் என்ற விளக்கத்தைக்கூட அரசால் சொல்ல முடியவில்லை. வனவியல் பட்டப்படிப்பு படித்த நாங்கள், மற்றப் பணிகளுக்குச் செல்வது என்பது சாத்தியமல்ல. இதைக் கருத்தில்கொண்டு வனத்துறை சார்ந்த வனச்சரகர், வனவர் ஆகிய பணிகளில் வனக்கல்லூரி மாணவர்களுக்கு 100 சதவிகித இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டுப் பின்னர் நேரமில்லை எனச் சொல்லிவிட்டார்கள். பேச்சுவார்த்தை நடத்தக்கூட நேரமில்லையா? கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்'' என்று நிதானமாக பேசுகிறார்கள் மாணவர்கள்.

கடந்த 20-ம் தேதி மாணவர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், 19-ம் தேதி மாலை சொல்லப்பட்ட இந்த வாக்குறுதி, என்ன காரணத்தினாலோ இரவு 1 மணியளவில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் விஷயத்திலுமா பன்னீர் அமைதியாக இருக்க வேண்டும்?

- ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்