Published:Updated:

ஆருஷி கொலை வழக்கு: நுபுருக்கு ஜாமீன்!

புதுடெல்லி: ஆருஷி கொலை வழக்கில் ஆருஷியின் தாயார் நுபுர்தல்வாருக்கு உச்ச   நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

கடந்த 2008-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பல் டாக்டர்களான  ராஜேஷ் தல்வார், நுபுர்தல்வார் ஆகியோரின் 14 வயது மகள் ஆருஷி, வீட்டு  வேலைக்காரன் ஹேம்ராஜ் ஆகியோர் வீட்டில் மர்மமான முறையில் ‌கொல்லப்பட்டு  கிடந்தனர்.

இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர்தல்வார்  ஆஅகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.காஸியாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த   இந்த வழக்கில் தந்தை ராஜேஷ் தல்வார் ஜாமீனில் உள்ளார்.தாய் நுபுர்தல்வார் கடந்த  ஏப்ரலில் கைதாகி காஸியாபாத் தஸ்னா சிறையி்ல் உள்ளார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி, உச்ச நிதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த  மனு இன்று விசரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,நுபுர்  தல்வாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.