Published:Updated:

'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'

'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'

கடந்த வருடம் கல்லூரிப் படிப்பை முடித்தவர் சரண்யா. காரைக்குடியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். சரண்யாவுக்கும் மோகன் என்பவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் அடிக்கடி சந்திப்பார்கள். ஒருநாள் இருவரும் காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடைபொய்கை என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஒரு பைக் அவர்கள் அருகே வந்து நிற்கிறது. 'என்னடா இங்கே பண்றீங்க... நடங்க ஸ்டேஷனுக்கு...’ என்று மிரட்டுகிறார், வண்டியில் வந்தவர். மோகன் அவர்களிடம் கெஞ்ச... அவரது வண்டி சாவியை எடுத்துக் கொண்டு... சரண்யாவை மட்டும் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் செல்கிறார்கள். பலாத்காரம் செய்கிறார்கள். அதன்பிறகு  சரண்யாவை அனுப்பி வைக்கிறார்கள்.

'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'

போலீஸாரிடம் சரண்யா ரகசியமாக சொன்ன தகவலை வைத்து விசாரணையில் இறங்குகிறது போலீஸ் டீம். அர்ஜுனன், சாத்தையா என்ற இருவர் சிக்குகிறார்கள். சாதாரணமாக அவர்களிடம் விசாரணையை ஆரம்பிக்கிறது போலீஸ். அவர்கள் பேசப் பேச... மிரண்டு நிற்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'

விசாரணையில் என்ன சொன்னார்கள் அவர்கள்? காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அர்ஜுனனின் வாக்குமூலம் இது. ''எனக்குச் சொந்த ஊர் காரைக்குடி பக்கத்துல உள்ள கொரட்டி கிராமம்.  என்னோட வேலை பார்த்த பெண்ணை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சேன். எனக்குக் குழந்தையில்லை. அதனால, என் பொண்டாட்டி என்னை குறையுடைய ஆள்னு பேசினதும் மனசு வெறுத்துப் போய்ட்டேன். என் ஃப்ரெண்டுகூடவே என் பொண்டாட்டி தொடர்பு வெச்சுக்கிட்டா. அதுவே எனக்குப் பெண்கள் மீது வெறுப்ப தந்துடுச்சு. அதுக்கப்புறம் நான் தனியா கடை வெச்சேன். அங்கே என் மச்சான் சாத்தையா அடிக்கடி வருவான். அவன் ஏற்கெனவே ஜெயிலுக்குப் போயிருக்கான். என் கடை வழியாதான் ஆவுடைபொய்கை காட்டுக்கு லவ்வர்ஸ், கள்ளக்காதல் ஜோடிகள் எல்லாம் போவாங்க. 2012ல ஒருநாள் நானும் சாத்தையாவும் போலீஸ்னு சொல்லி காட்டுக்குள்ள ஒதுங்குன ஒரு ஜோடிய மிரட்டினோம். அதுதான் நாங்க முதல்ல செஞ்ச சம்பவம். பொம்பளைங்க மீது எனக்கு இருந்த வெறுப்பால, இப்படி வர்ற பொம்பளங்களை சும்மாவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி தொடர்ந்து இதையே வேலையா வெச்சுக்கிட்டோம்.

சாத்தையாவும் நானும் போலீஸ் மாதிரி ட்ரெஸ் போட்டுக்கிட்டு ஜோடிய பின்தொடருவோம். அங்கே போனவுடனே ரெண்டு பேரையும் மிரட்டி பெண்ணை மட்டும் வண்டியில ஏத்திக்கிட்டுப் போய் எங்க ஆசைய தீத்துக்குவோம். அதிகமாக நாங்க மாலை ஆறுமணிக்கு மேலதான் இந்த வேலைய செய்வோம். அதனால யாருக்கும் எங்க மூஞ்சிய அடையாளம் தெரியலை. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் ஆள் சிக்காம இருக்காது. பகல்ல காட்டுக்குள்ள போனா முந்திரி மரத்துல ஏறி நின்னு பார்ப்பேன். ஜோடி கண்ணுல தென்பட்டா உடனே காரியத்துல இறங்கிடுவோம். எங்ககிட்ட சிக்குன பாதிபேர் கள்ள காதல் ஜோடி. மீதிபேர் லவ்வர்ஸ். அதனால யாரும் வெளியே சொல்லலை' என்று  கூறியிருக்கிறார்.

'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'

சாத்தையாவின் வாக்குமூலத்தில், ''அந்தக் காடு மொத்தம் 25 ஏக்கர் இருக்கும்.  காடு முழுக்க அர்ஜுனனுக்கு அத்துப்படி. அமாவாசை இருட்டில்கூட அர்ஜுனன் லைட் இல்லாம வண்டி ஓட்டுவான். அதனால ரோட்டுல பொண்ணை ஏத்தினதும் நடுகாட்டுக்கு லைட் இல்லாமலே வந்துருவோம். நாங்க  எந்தப் பொண்ணையும் ஒருமுறைக்கு மேல உறவுகொள்ள மாட்டோம். நாங்க சொந்தக்காரங்கதான். ஆனா, சிக்கியவங்க முன்னாடி சார்னுதான் பேசிக்குவோம். யாரையும் கொலை செய்யுறது எங்க நோக்கம் இல்லை’' என்று சொன்னதாக போலீஸ் சொல்கிறது. இவர்கள் சொன்ன பட்டியலைக் கேட்டு போலீஸே ஆடிப்போய்விட்டது.

'வெள்ளி, சனி, ஞாயிறு... ஆறு மணிக்கு மேல...'

இந்த வழக்கை விசாரிக்கும் காரைக்குடி டி.எஸ்.பி முத்தமிழ், ''ஐந்து வருடங்களாக பெண்களை வேட்டையாடுவதை மட்டுமே வேலையாகப் பார்த்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகார்தான் இவர்களைப் பிடிக்க காரணமாக இருந்தது. கடைசியாக கடத்திய பெண் எங்களிடம் சொன்ன ஒரே அடையாளம் யூனிகார்ன் பைக். அதை மட்டுமே டார்கெட்டாக வைத்து தேட ஆரம்பித்தோம். சிக்கிட்டாங்க. ஆனால், இவ்வளவு பெண்களை சீரழித்திருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்று சொன்னார்.

சமூகம் சாக்கடையாகிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

அ.சையது அபுதாஹிர்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு