Published:Updated:

"என்னை மிரட்டியே கஸ்டடியில் வைத்திருந்தார் !"

செம்மரக் கடத்தலும் நீத்து அகர்வாலும்

கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகச் செம்மரக் கடத்தல் தொடர்பாக சென்னையில் ஒருவரை கைதுசெய்ய, சங்கிலித் தொடராகக் கைது படலம் நடந்து வருகிறது.

ஒன்றிரண்டு தமிழ்ப் படங்களில் தலைகாட்டி நடித்த சரவணனை ஆந்திர போலீஸார் சுற்றி வளைத்தனர். அது அ.தி.மு.க-வில் இருந்துவரும் ‘பருத்திவீரன்’ சரவணன் என்று செய்தி பரவியது. ‘‘அய்யய்யோ அது நான் இல்லீங்க... இப்போ ‘சவுகார் பேட்டை’ படத்தோட ஷூட்டிங்குல பவர் ஸ்டார்கூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’’ என்று பதறியபடி கதறினார் ‘பருத்திவீரன்’ சரவணன். ஆந்திர போலீஸாரின் கைவரிசையில் கதிகலங்கிய நடிகர் சரவணன், மஸ்தான் வலி வசிக்கும் திசைபக்கம் ஆட்காட்டி விரலை காட்டினார்.

"என்னை மிரட்டியே கஸ்டடியில் வைத்திருந்தார் !"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவியில் இருந்துவரும் மஸ்தானை கடந்த 13-ம் தேதி அலேக்காக அள்ளிச்சென்றது ஆந்திர போலீஸ். ஆரம்பத்தில் எலுமிச்சைப் பழ வியாபாரம் செய்து வந்த மஸ்தான், செம்மரக் கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே கைதாகி விடுதலையானவர். அதன்பின்பும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மறைமுகமாகக் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். தற்போது கைதாகி இருக்கும் மஸ்தான், காக்கிகளின் கவனிப்பால் ‘செம்மரக் கடத்தல் தொடர்பான பணப் பரிமாற்றம் அனைத்தும் நடிகை நீத்து அகர்வால் வைத்திருக்கும் வங்கிக் கணக்கின் மூலம்தான் செய்யப்பட்டது’ என்று போட்டு உடைத்தார்.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் நீத்து அகர்வால். ஏற்கெனவே ஹைதராபாத்தில் ரத்தன் என்பவரை மணந்து ஒரு குழந்தைக்குத் தாயானார். கடந்த 2013-ல் செம்மரக் கடத்தலில் குவிந்த பணத்தில் திரைப்படம் தயாரிக்க முன்வந்த மஸ்தான், கதாநாயகி வேஷத்துக்கு நடிகைகளைத் தேடி அலைந்தார். அப்போது மஸ்தான் கண்களில் சிக்கிய நீத்து அகர்வாலையே நாயகி ஆக்கினார். ‘பிரேம பிரயாணம்’ என்கிற தெலுங்குப் படத்தைத் தயாரித்தார் மஸ்தான். தனக்குத் திருமணம் ஆனதையும் குழந்தை இருப்பதையும் மஸ்தானிடம் மறைத்தார், நீத்து. படத்தில் நடித்தபோதே இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அடுத்து புதுப்படங்களில் நடிப்பதற்கு நீத்து அகர்வாலுக்கு வாய்ப்பு வந்தபோதும் அதனைத் தடுத்து, ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு ஃப்ளாட் ஒன்றை நீத்துவுக்கு வாங்கிக் கொடுத்தார் மஸ்தான். அத்துடன் விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசளித்தார்.

"என்னை மிரட்டியே கஸ்டடியில் வைத்திருந்தார் !"

அந்த சொகுசு ஃப்ளாட்டில் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தினர். நீத்துவுக்கு ஆங்கிலம், இந்தி அனைத்தும் அத்துப்படி. இது வடமாநிலத்தில் செம்மரக் கடத்தல் செய்துவரும் மஸ்தானுக்குப் பேருதவியாக இருந்தது. தனது கடத்தல் வியாபாரத்தில் நீத்துவையும் இறக்கிவிட்டார், மஸ்தான். நீத்துவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் கடத்தல் பணப் பரிமாற்றத்தை நடத்தி வந்தார். சமீபத்தில் இன்னொரு கடத்தல்காரன் பாலுநாயக் என்பவனுக்கு தனது கணக்கில் இருந்து லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி இருப்பது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்னூல் மாவட்டத்தில் செம்மரக் கடத்தல் நடந்தபோது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அப்போதே நீத்து அகர்வால் செம்மரக் கடத்தலில் 10-வது

குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு இருந்தார். கைது செய்யப்பட்ட மஸ்தான் தன்னைப்பற்றி போலீஸிடம் போட்டுக் கொடுத்துவிட்டார் என்கிற செய்தி நீத்துவுக்கு முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது. அதனால் தனது கணவர் ரத்தனுடன் தலைமறைவானார். நீத்துவை கண்டுகொள்ளாத மாதிரி நடித்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு காக்கிகள் காத்திருந்தனர். வேலைக்காரியின் கண்காணிப்பில் விட்டு வைத்திருந்த குழந்தையைத் தன்னோடு கூட்டிச் செல்வதற்காக வந்த நீத்துவை, போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர போலீஸாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மெளனம் காத்தவர், கைதுசெய்து மீடியா வெளிச்சத்துக்கு வந்தபோது,   ‘‘மஸ்தானிடம் தெரியாம மாட்டிக்கிட்டேன். என்னை மிரட்டி மிரட்டியே அவரோட கஸ்டடியில் வைத்திருந்தார். அதில இருந்து என்னால வெளியில வரவே முடியலை’’ என்று வெடித்துக் கதறினார் நீத்து அகர்வால்.

அரிதாரம் பூச வந்தவர் இப்போது குற்றவாளியாக அவதாரம் எடுத்து இருக்கிறார்!

- எம்.குணா