‘படிக்கும்போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம், பட்டம் பெறும் முன்பே ஃபாரினில் வேலை’ என்ற தொடர் விளம்பரத்தை ஒரு முறையாவது கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த விளம்பரத்துக்குச் சொந்தமான கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதங்களில் உயிரைப் பறிக்கொடுத்து இருக்கிறார் நெல்லை மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கார்த்திக்பிரபு.

கண்ணனிடம் பேசினோம். “என்னுடைய இரண்டாவது மகன் கார்த்திக்பிரபுவுக்கு சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவது ரொம்பப் பிடிக்கும். ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் மாநில அளவில் சான்றிதழ்களையும் பெற்று இருக்கிறான். இதனால் சிற்பக்கலை தொழில்படிப்பை (ஐ.டி.ஐ) முடித்துவிட்டு வேலைக்குச் சென்றுகொண்டு இருந்தான். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் இன்ஸ்டிடியூட் ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கச் சேர்ந்தான்.

தினமும் வீட்டுக்கு போனில் பேசுவான். ஹாஸ்டலில் சாப்பாடு சரியில்லைனு மட்டும் சொல்வான்.

கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எஸ்.ஐ ஒருவர் என்னிடம், ‘உங்களுடைய மகன் கார்த்திக் பிரபுவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டது. உடனே புறப்பட்டு வாருங்கள்’ என்றார்.

அதிர்ச்சியடைந்த நானும் குடும்பத்தினரும் அவசர அவசரமாக சென்னைக்கு வந்தோம். நேரில் வந்தபோது கார்த்திக்பிரபு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொன்னார்கள். அவன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் கொடுத்தோம். விசாரிப்பதாக மட்டும் சொன்னார்கள். அவனுடைய செல்போனை சில நாட்கள் கழித்து என்னிடம் போலீஸார் கொடுத்தார்கள். அதில், ‘என்னுடைய சாவுக்குக் காரணமானவர்கள் என ஏழு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களைக் கண்டிப்பாக விசாரிக்கணும்.

முடிவு தெரியணும்’ என்று தன்னுடைய மரண வாக்குமூலத்தை என் மகன் பதிவு செய்திருந்ததைக் கேட்டு துடித்துப் போயிட்டேன். உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விவரத்தைச் சொன்னேன். என்னுடைய மகன் கூறிய அந்த ஏழு பேரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்று தெரிந்தும் போலீஸார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய மகனை அந்த ஏழு பேரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடுகிறார்கள். இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த 7 பேரும் என்னுடைய மகனை ராகிங் அல்லது செக்ஸ் தொந்தரவு செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவனுடைய சாவுக்கு நீதி வேண்டும். நீதி கிடைக்கவில்லை என்றால், மீடியாவுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தென்காசியில் உள்ள

காசிவிஸ்வநாதர் கோயில் ராஜகோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன். இது இறந்துபோன என்னுடைய மகன் மீது சத்தியம்” என்று கண்கலங்கினார்.

கார்த்திக்பிரபு தங்கியிருந்த விடுதி மாணவர்களிடம் விசாரித்தோம். “கார்த்திக்பிரபு தூக்குப் போட்டு தற்கொலை செய்ததாகத் தகவல் கிடைத்ததும் அந்த அறைக்குச் சென்று பார்த்தோம். மின்விசிறியில் கயிற்றால் தூக்குப் போட்டு இருந்தான். அவனுடைய கால்கள் தரையைத் தொட்டுக்கொண்டு இருந்தன. இதைப் பார்க்கும்போது சாவில் சந்தேகம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. போலீஸ் வந்ததும் யாரையும் அந்தப் பக்கம் விடவில்லை. கார்த்திக்பிரபு சொல்லும் பெயர்களைக் கொண்ட மாணவர்கள் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள். இதில் ஒரு பெயரில் விடுதி வார்டனும் ஒரு மாணவனும் இருக்கிறார்கள். இதில் யாரை கார்த்திக் பிரபு சொல்கிறார் என்பது தெரியவில்லை” என்றனர்.

துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமாரிடம் பேசினோம். “கார்த்திக்பிரபு தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போனில் பதிவு செய்துள்ள மரண வாக்குமூலத்தில் உள்ள 7 பேரிடமும் விசாரணை நடத்திவிட்டோம். அவர்களுக்கும் கார்த்திக்பிரபு தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார் சுருக்கமாக.

சம்பந்தப்பட்ட கல்லூரியின் கார்ப்பரேட் மேலாளர் ஐஸ்வர்யாவிடம் பேசினோம். “போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள். வெளி ஹாஸ்டலில் நடந்த சம்பவம் இது. கல்லூரி தரப்பில் கார்த்திக்பிரபு இதுவரை செலுத்திய ஃபீஸை திருப்பிக் கொடுக்க உள்ளோம்” என்று சொன்னார் மையமாக. ‘‘கார்த்திக் பிரபு தற்கொலை தொடர்பாக கல்லூரி தரப்பில் 100 சதவிகிதம் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். கார்த்திக்பிரபுவின் தந்தை கண்ணன் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதத்தில், கட்டணத்தைத் திரும்ப கொடுக்கும்படி கேட்டு இருந்தார். மனிதாபிமான அடிப்படையில் ஃபீஸ் தொகை 35 ஆயிரம் ரூபாயையும், ஈமச் சடங்குக்கான செலவுத் தொகை 30 ஆயிரம் ரூபாயையும் கல்லூரித் தரப்பிலிருந்து காசோலையாகக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் பணம் கேட்டு தவறான தகவலை கண்ணன் பரப்பி வருகிறார்’’ என்று அந்தக் கல்லூரியின் வழக்கறிஞர் கார்த்திகேயன் சொல்கிறார்.

உண்மைக் காரணத்தைக் கண்டறிவது காவல் துறையின் பொறுப்பு.

- எஸ்.மகேஷ்