‘ரகசிய காப்பு பிரமாணம்’ எடுத்த ஒரு மந்திரியின் ரகசிய பக்கம் இது. கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அமைச்சரின் வாழ்க்கையில் புதிதாக ஒரு பெண் நுழைய... ஆத்திரம் கொண்ட அவரது மனைவி இன்னொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்.

அமைச்சரான புதிதில் கோரிக்கை மனுக்களோடு நிறைய பேர் மாவட்டத்தில் மந்திரியை சந்திக்க வருகிறார்கள். அப்படியொரு மனுவோடு வந்திருக்கிறார் அந்தப் பெண். மகனுக்கு பாலிடெக்னிக் ஸீட் வேண்டி முதன்முதலில் அமைச்சரை சந்திக்கிறார். பளிச் நிறத்தில் இருக்கும் அவரைப் பார்த்ததுமே மந்திரியின் மனம் மாறுகிறது. காதல் வசப்படுகிறது. அந்தப் பெண் ஏற்கெனவே கணவரை இழந்தவர் என்பதால் வசதியாகிவிட... வலைவீசிப் பிடித்து விடுகிறார்.

செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற உதவியாளர்தான் அமைச்சருக்கு ஆல் இன் ஆல். மாவட்டத்துக்கு வரும் அமைச்சரை ஊரடங்கிய பிறகு தனி பாதுகாப்பு அதிகாரியான பி.எஸ்.ஓ-வின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பைக்கில் அந்தப் பெண் வீட்டுக்கு அழைத்துப் போவார். சில நேரங்களில் அந்தப் பெண் சென்னைக்கும் வந்துவிடுவார். ரயில் பயணங்களில் கூபேவில் ஒன்றாகப் பயணிப்பார்கள். அடுத்த மாநிலத்தில் இருந்துதான் அந்த ரயில் புறப்பட்டு வரும். அதனால் அந்த மாநிலத்தில் இருந்தே டிக்கெட் புக் பண்ணிவிடுவார்கள். அந்த ரயில் தன்னுடைய மாவட்டத்துக்குள் நுழையும் போது அமைச்சர் சேர்ந்துகொள்வார். அந்தப் பெண்ணுடன் பேசுவதற்காகவே தனியாக செல்போன் ஒன்றை வைத்திருக்கிறார் அமைச்சர்.

இந்த விஷயம் ரொம்பத் தாமதமாகத்தான் அமைச்சரின் மனைவிக்குத் தெரிய வந்திருக்கிறது. இரவு முழுவதும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் கணவரை பார்த்துவிட்டு சந்தேகம் வந்திருக்கிறது. அந்த போனை ரகசியமாக எடுத்து வந்து அந்த எண்ணுக்கு மனைவி போன் போட, பிறகு எதிர்முனையில் ‘‘என்னங்க தூக்கம் வரலையா... என்னை நினைச்சுக்கிட்டு தூங்குங்க. என்னை கட்டிப்புடிச்சுகிட்டு தூங்குற மாதிரி நினைச்சுக்குங்க’’ என குரல் வந்ததைக் கேட்டு அதிர்ந்துபோனார். அதன் பிறகுதான் அந்தப் பெண்ணின் எல்லா விஷயங்களையும் துப்பறிந்திருக்கிறார் மனைவி. கணவரிடம் சண்டை போட்டபோது ‘‘நீ கறுப்பா இருக்க... உன்ன எனக்குப் பிடிக்கல....... மூணு பேரை வெச்சிருக்காரு....நாலு பேரை வெச்சிருக்காரு. ஊரு உலகத்துல இல்லாத தப்பையா நான் செஞ்சுட்டேன்’ என மனைவியிடம் சீற... கோபத்தோடு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் மனைவி.

அவரிடம் சமாதானம் பேச மந்திரியின் ஆட்கள் வந்தார்கள். ‘‘போலீஸுக்குப் போனா நமக்குதான் அசிங்கம். நீங்க சமாதானமா போங்க..’’ என பேசியிருக்கிறார்கள். ‘‘30 வருஷமாக அவரோடு குடும்பம் நடத்தியிருக்கேன். இவ்வளவு வயசுக்குப் பிறகு அவர் ஒரு பெண்ணை வெச்சுகிட்டிருக்கிறது அசிங்கமா தெரியல... நான் பிரிந்து வந்ததுதான் அவருக்கு அசிங்கமா தெரியுதா? அந்தப் பெண்ணுக்கு சொத்து வீடுனு வாங்கி கொடுத்திருக்கிறார். மூணு வருஷமா எனக்குத் தெரியாமல் அவளோடு குடும்பம் நடத்தியிருக்கிறார். பொண்டாட்டிக்குத் துரோகம் செய்த பயம்கூட அவரிடம் இல்லை. அதிகாரம், பதவி, பவிசு எல்லாம் கண்ணை மறைக்குது. எல்லாத்தையும் அம்மாவிடம் (ஜெயலலிதா) சொல்லிப் பறிச்சுடுவேன். அது முடியலனா வீடு புகுந்து அவளை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன். மந்திரி மனைவி எதற்காக அந்தப் பெண்ணைக் கொலை செஞ்சாங்கனு கேள்வி வரும்ல. அப்ப எல்லா உண்மையும் ஊருக்குத் தெரியும். எல்லாத்தையும் அசிங்கப்படுத்திடுவேன். புருஷனை அபகரிச்சவளைப் பழிவாங்கின நிம்மதியோடு ஜெயிலில் காலத்தைக் கடத்திடுவேன்’ என சமாதானம் பேச வந்தவர்களிடம் சீறியிருக்கிறார் மனைவி.

விஷயத்தைக் கேள்விப்பட்ட மூத்த மகன் மட்டும் ‘‘அப்பா நீங்க செய்வது பெரிய தப்புப்பா’’ என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘‘சின்ன வயசுல அம்மா பக்கத்தில் நீங்க உட்கார்ந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்ப அம்மாவின் அருகிலேயே உட்காருவது இல்லை. அப்பாங்கறதால உங்களை கண்டிக்க முடியல.. உங்க நடத்தை எப்படி இருக்கோ அதேபோலதான் என் நடத்தையும் இருக்கும். நீங்க வப்பாட்டி வெச்சுகிட்டா... நானும் வெச்சுக்குவேன். அதைக் கேட்கும் தகுதியே உங்களுக்கு இல்லாமல் போகும்’’ எனச் சொல்லிவிட்டு அப்பாவிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார். ஆனால் இரண்டாவது மகன் மட்டும் எதனாலோ தந்தைக்கு ஆதரவாக இருக்கிறார். மனைவியின் அண்ணனிடம் ‘‘எங்க அப்பா அப்படித்தான் வெச்சுக்குவாரு.. ஊரு உலகத்துல இல்லாததையா அப்பா செஞ்சுட்டாரு...’’ என சீறியிருக்கிறார், இரண்டாவது மகன். அத்துடன் ‘‘வெள்ளைப் பேப்பரில் உங்க தங்கச்சிகிட்ட (தனது சொந்த அம்மாவிடம்!) கையெழுத்து வாங்கிக் கொடுங்க..’’ எனவும் சொல்லியிருக்கிறார்.

மந்திரிக்கும் அந்தப் பெண்ணுக்கும் கோயிலில் திருமணம் நடந்துவிட்டதாகவும் அந்த மாவட்டத்தில் முக்கியப் புள்ளிகள் வட்டாரத்தில் பேச்சு. ஆனால் மந்திரியோ, எந்த வலையிலும் சிக்காமல் சிவப்பு விளக்கு காரில் வலம் வந்தபடியே இருக்கிறார்.

- ஜூ.வி டீம்