Published:Updated:

குடிபோதை.. ரேஷ் ட்ரைவிங்.. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு உயிரிழப்பு!

குடிபோதை.. ரேஷ் ட்ரைவிங்.. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு உயிரிழப்பு!

குடிபோதை.. ரேஷ் ட்ரைவிங்.. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு உயிரிழப்பு!

குடிபோதை.. ரேஷ் ட்ரைவிங்.. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு உயிரிழப்பு!

குடிபோதை.. ரேஷ் ட்ரைவிங்.. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு உயிரிழப்பு!

Published:Updated:
குடிபோதை.. ரேஷ் ட்ரைவிங்.. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு உயிரிழப்பு!

சென்னை போன்ற பெருநகரங்களின் வார இறுதி நாள்கள் அபாயகரமானவை... வளர்ந்துவிட்ட நகரங்களில் குடிபோதை, ரேஷ் டிரைவிங் போன்ற விஷயங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாகிவிட்டன. முழு போதையில் கார் ஓட்டுபவர்கள் சாலை ஓரங்களில் படுத்திருப்பவர்கள், நின்றுகொண்டிருக்கும் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள், இரவு நேரப் பணி முடிந்து செல்பவர்கள் எனப் பலரது உயிரும் இந்த அதிவேக வாகன ஓட்டிகளைக் கண்டு நடுங்குகிறது. இதற்கு உதாரணம், சல்மான் கான் தொடங்கி பல பிரபலங்கள் என நீள்கிறது. கடந்த 9 மாதங்களில் சாலை விபத்து வழக்கில் பதிவான குற்றச்சாட்டுகள் 12.5 லட்சம். பதியப்படாத குற்றங்கள் எத்தனையோ? இந்தியாவில் அதிகம் சாலை விபத்துகள் நடக்கும் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம் சென்னை. சாலை விபத்துகள் சென்னையில் அதிகம் நடக்கக் காரணம் என்ன... இந்தியாவில் ஏன் இவ்வளவு சாலை விபத்துகள் என்ற கேள்விகளுக்குப் பதிலாக வருகின்றன அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள். 

இன்ஜினீயர்கள்மீது குறை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை கதீட்ரல் சாலையில் தன் ஆட்டோவில் உறங்கிக்கொண்டிருந்த ராஜேஷ் என்பவர், ஒரு கல்லூரி மாணவரின்  குடிபோதைக்குப் பலியானார். இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அரக்கோணம் சென்று தன் குடும்பத்தைப் பார்த்துவந்த ராஜேஷ்தான், அந்தக் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். அதே கதீட்ரல் சாலையில் 9 மாதங்களுக்கு முன்பு, இதேபோல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபோர்ஸே கார் ஓட்டிவந்த கார் பந்தய வீரர் விகாஸின் குடிபோதைக்குப் பலியானார். பெருநகரங்களில் ப்ளாட்ஃபாரங்களில் தூங்குபவர்களின் நிலைமை ஆட்டோக்காரர்களைவிட மோசம். சென்னை கதீட்ரல் சாலையில் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நடைபெறுவதால் அந்தச் சாலையை வடிவமைத்த இன்ஜினீயர்கள் மீது குறை கூறப்பட்டது. ஆனால், அவர்களோ இந்தச் சாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தினமும் பயன்படுத்தப்பட்டது. சாலையின் வடிவமைப்பில் எந்த ஒரு தவறும் இல்லை எனக் கூறியுள்ளனர். 


சென்னை சாலை நெரிசல்களுக்கு நடுவே விலையுயர்ந்த பைக்குகளின் உறுமல் சத்தத்தோடு அதிவேகத்தில் செல்லும் இளைஞர்களைத் தினமும் பார்க்க முடியும். வார இறுதி பார்ட்டிகளைத் தாண்டி அதிக வேகத்தில் செல்வது, முந்திச் செல்வது எனப் பல வழிகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தேசிய அளவிலான கார் ரேஸிங்கில் சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்வின் சுந்தர் கடந்த மார்ச் மாதம், மனைவியோடு தன் காரில் அதிக வேகத்தில் சென்றதால் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

சாலை விபத்துகள்!

இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் நகரங்களின் பட்டியலில் சென்னைக்குத்தான் முதலிடம். மாநிலங்களின் பட்டியலில் சந்தேகமே இன்றி தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகளால் அதிகம் உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தேசியத் தலைநகரான டெல்லிக்கு முதலிடம். அதிவேகத்தாலும், குடிபோதையாலும் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டும் 66.1 சதவிகிதம். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.99 கோடியாக இருந்த விபத்துக்குள்ளான வாகனங்களின் எண்ணிக்கை 2.33 கோடியாக அதிகரித்துள்ளது. 

உயிரிழப்புகள்!

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வருபவர்கள், சாலை வாகன விதிகளை மீறுபவர்கள், ஹெல்மெட் போடாதவர்கள் என வளைத்துப் பிடித்து வழக்குப் பதிவு செய்யும் காவல் துறையினர், இந்த அதிவேக மற்றும் குடிபோதை நபர்களைத் தடுப்பதில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க மொத்த அமைப்பையும்தான் குறைசொல்ல வேண்டும். இதில், சட்டம் இயற்றுபவர்கள் தொடங்கி தனிமனித ஒழுக்கம்வரை எல்லாருக்கும் பொறுப்பு உண்டு. லஞ்சம் - ஊழல் என்று ஒரு நிமிடத்தில் 100 பேர் காப்பாற்றப்படுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் இறக்கும் அந்த அப்பாவி உயிருக்கு நாம் கூறப்போகும் பதில் என்ன?