Published:Updated:

ராணுவ வாகன லஞ்ச வழக்கு:5 இடங்களில் சிபிஐ சோதனை!

ராணுவ வாகன லஞ்ச வழக்கு:5 இடங்களில் சிபிஐ சோதனை!
ராணுவ வாகன லஞ்ச வழக்கு:5 இடங்களில் சிபிஐ சோதனை!
ராணுவ வாகன லஞ்ச வழக்கு:5 இடங்களில் சிபிஐ சோதனை!

புதுடெல்லி: ராணுவ வாகனம் வாங்க தமக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ராணுவ  முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங். கூறிய குற்றச்சாட்டு குறித்த வழக்கு  தொடர்பாக,  டெல்லியில் 5 இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது.

வி.கே.சிங். பதவியில் இருக்கும்போது ராணுவத்திற்கு டட்ரா ரக வாகனங்கள்  கொள்முதல் செய்ய தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக முன்னாள்  ராணுவ ஜெனரல் தெவிந்தர்சிங் மீது குற்றம் சாட்டினார்.

இதை அவர் மறுத்து இருந்தார்.இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறது.

##~~##
இந்த லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ ஏற்கனவே பல இடங்களில் சோதனை நடத்தி இருந்த  நிலையில், வி.கே.சிங் கூறிய லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் டெல்லியில்  இன்று 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தகவல்  ஏதும் தெரிவிக்கப்படவில்லை.