நிர்பயாவுக்கு பின்னும் திருந்தாத டெல்லி - கொலைநகரமாகும் தலைநகரம் #DataStory

தீவிர காற்று மாசுபாட்டினால் உலகின் சுவாசிக்க தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் அண்மையில் இடம்பிடித்தது தலைநகர் டெல்லி. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு பட்டியலில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் குற்றங்கள் நடக்கும் மெட்ரோ நகரங்களில் முதலிடத்தில் உள்ளது டெல்லி. முக்கியமாக நிர்பயா வழக்குக்கு பிறகும் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் இந்திய நகரமாக டெல்லி உள்ளது. பின்வரும் புள்ளிவிவரங்கள் தலைநகரத்தின் நிலையை அதிர்ச்சியோடு சொல்கின்றன.

டெல்லி

டெல்லி..சில மோசமான புள்ளிவிவரங்கள்:

1. இந்தியாவில் அதிக வன்முறைக் குற்றங்கள் நடைபெறும் மெட்ரோ நகரம் டெல்லிதான். மொத்த மெட்ரோ குற்றங்களில் 48.3 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது.

2. மொத்த மெட்ரோ நகர கொலைகளில் 21.8 சதவிகித கொலைகள் டெல்லியில் நடக்கிறது. 

3. பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடைபெறும் நகரம் டெல்லிதான். மொத்த மெட்ரோ நகர பெண்களுக்கு எதிரான வன்முறையில் 21.8 சதவிகிதம் டெல்லியில் நடக்கிறது. 

4. இந்திய மெட்ரோக்களில் 19.3 சதவிகித பொருளாதார குற்றங்கள் டெல்லியில் நடக்கிறது. 

5. சொத்துகள் தொடர்பான குற்றங்கள் அதிகம் டெல்லியில் நடைபெறுகிறது. 2016ம் ஆண்டு மட்டும் இதுதொடர்பாக 1,30,928 வழக்குகள் பதிவாகியுள்ளன.

6. இந்தியாவில் 38.3 சதவிகித மெட்ரோ குற்றங்களுக்கு டெல்லி தான் காரணம்.

7. சிறப்புப் பிரிவு குற்றங்களில் மட்டும் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற விஷயங்களில் டெல்லி தான் டாப். 

இந்த புள்ளிவிவரங்கள் மூலம் டெல்லி குற்றங்கள் நிறைந்த இந்திய நகரமாகத் தெரியவருகிறது. நாட்டின் தலைநகரே இந்த நிலையில் இருக்கிறது.  கொலைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? மத்திய அரசுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அந்த மாநில அரசு இந்த குற்றப்பட்டியலையும் கொஞ்சம் கவனிக்குமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!